எப்போதும் இளமையோடு - Foods to Keep You Young

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
உங்களுக்கு எந்தப் பெரிய நோய்களும் வரக்கூடாது என்ற ஆசை இருக்கிறதா? செல்கள் மெல்லச் செயலிழந்து நடக்கும் "டிஜென ரேஜன்" மூலம் மூப்படைவதைத் தவிர்க்க வேண்டுமா? குறுக்கு வழியில் சொன்னால் எப்போதும் இளமையோடு இருக்க விரும்புகிறீர்களா? ஒரே பதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள்தான்.
இவற்றை எப்படிப் பெறுவது? நாம் சாப்பிடும் உணவிலிருந்து இவற்றைப் பெற முடியும். விஞ்ஞானிகள் அதற்கு கீழ்க்கண்ட ஐந்து உணவுகளைப் பரிந்துரைக்கிறார்கள்.
1. தக்காளி
இதில் இருக்கிற "லைகோபீன் (Lycopene)" தான் முக்கியமானது. இது புற்றுநோய்களைத் தடுக்கும், தசைச் செல்களின் இழப்பைக் கட்டுப்படுத்தும், கண்களில் வரும் காட்ராக்டை தடுக்கும் சக்தி கொண்டது, நம் மூளையின் செயல்பாட்டை வழி நடத்தும் சக்தி கொண்டது என பல்வேறு வேலைகளைச் செய்கிறது.
தக்காளியை எப்போதும் எண்ணெய் சேர்த்துச் செய்து சாப்பிடுவதே நல்லது. காரணம், இந்த லைகோபீன் என்பது கொழுப்பில் கரைவது. எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் போது நம் உடல் இதைக் கிரகிக்கும்.
2. சோயா
கான்ஸரைத் தடுக்கும். கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும். எலும்புகள் தேய்ந்து உதிர்கிற "ஆஸ்டியோபோரோஸிஸ் (Osteoporosis)" என்ற நோயைக் கட்டுப்படுத்தும். மெனோபாஸ் நிலையின் போது ஏற்படுகிற பிரச்னைகளைப் பெரிதும் கட்டுப்படுத்தும். சோயாவின் பல்வேறு உடல்நலம் காக்கும் செயல்களுக்கு அடிப்படை அதில் இருக்கிற "ஐசோபிளேவினாய்ட்" என்கிற பொருள்தான். இது கிட்டத்தட்ட உடலில் இருக்கிற ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோனைப் போன்றது. சோயாவின் மற்றொரு முக்கிய அம்சம், இது உடலில் இருக்கிற கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்குமே தவிர, நல்ல கொலாஸ்டிராலைக் குறைக்காது.
3. கருப்பு சாக்லெட்
இந்த வகை சாக்லெட்டுகளில் "கோகோ" அதிகம். இதில் ப்ரோசையனிடின்ஸ், எபிகேட்சின்ஸ், கேட்சின்ஸ் போன்ற ப்ளேவினாய்டுகள் இருக்கின்றன. இவை இருதயத்தைப் பாதுகாப்பதில் சக்தி மிகுந்தவை. கான்ஸரைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, இரண்டாம் வகை டயாபடிஸ் இரண்டையும் கட்டுப்படுத்துவதிலும் கருப்பு சாக்லெட்டுகளுக்குத் திறமை அதிகம்.
4. சிவப்பு வைன்
கொஞ்சமே, கொஞ்சம் சிவப்பு வைன் (Red Wine) இருதயத்துடிப்பைச் சீராக்கி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நல்ல தூண்டுதல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். சிவப்பு வைனில் இருக்கிற ரெங்விரெடால், குயர்செடின் இரண்டும் இருதயப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தவிர கான்ஸரைத் தடுப்பது, அல்ஸர் வராமல் காப்பது, ஸ்ட்ரோக் தடுப்பது மற்றும் எலும்புகள் உதிர்வது போன்றவற்றைத் தடுப்பதில் சிவப்பு வைன் எப்போதும் ஒரு சின்ன ராஜா. ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமே கொஞ்சம்.
5. தேநீர்
கிரீன் டீ (Green tea) , கருப்புத் தேநீர் (Black tea) இரண்டுமே சம அளவில் நல்லது செய்வதாக சமீபத்தில் ஆய்வுகள் சொல்கின்றன. கான்ஸர் தடுப்பு, தேய்மான நோய்கள், இருதயப் பாதுகாப்பு, ஸ்ட்ரோக் தடுப்பு என தேநீரின் பாதுகாப்புப் பணிகள் மிக அதிகம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.