எம்பிராய்டரி உடைகளின் வகைகளும் பாதுகாப&#

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,755
Location
Chennai
#1
எம்பிராய்டரி உடைகளின் வகைகளும் பாதுகாப்பும்

உடைகளில் ஊசியால் வண்ணம் தீட்டுவதுதான் எம்பிராய்டரி. இதில் பல வகைகள் உள்ளன. நூல், பட்டு நூல், ஜரிகை என நம் விருப்பத்துக்கு ஏற்ப உடைகளில் டிசைன் செய்துக் கொள்ள முடியும். எம்பிராய்டரி செய்யப்பட்ட உடைகளின் வகை, அதை எவ்வாறு அணியலாம், அவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று விளக்குகிறார் உடை அலங்கார நிபுணர் உஷா.
‘‘எம்பிராய்டரியை பொறுத்தவரை குறிப்பிட்ட உடைகளுக்குதான் செய்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. எல்லா வித உடைகளையும் அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவை பொறுத்தவரை பெண்களுக்கான உடையில் புடவை, சுடிதார், குர்தா, ஸ்கர்ட், பிளவுஸ் போன்றவற்றில் எம்பிராய்டரி டிசைன் செய்கிறார்கள். ஆண்களுக்கு, சட்டை காலர், கை கப், குர்தா கழுத்து பகுதி மற்றும் ஷர்வானியில் எம்பிராய்டரி செய்யலாம். இவை தவிர, தலையணை கவர், குஷன் கவர், துணிப்பை, காகிதங்கள் வைக்க பயன்
படும் பைல்களிலும் மனதுக்கு பிடித்த எம்பிராய்டரியை செய்துக்
கொள்ளலாம்.
சாதாரண துணிகளை தைக்கும் நூல்களில் எம்பிராய்டரியை போட முடியாது. பட்டு நூல் அல்லது ஸ்கின் நூல்களில்தான் எம்பிராய்டரி டிசைன்களை போட முடியும். அதே போல் பட்டுத் துணி, பருத்தி, சில்க், காட்டன், இத்தாலியன் கிரேப், ஷிபான், தசர், ராசில்க் போன்ற துணிகளில் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும். அமெரிக்கன் ஜார்ஜெட் துணி வழுவழுப்பானது என்பதால் இதில் எம்பிராய்டரி செய்ய முடியாது.

எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகளை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதிக ரசாயன கலவை இல்லாத ஷாம்பு கொண்டு துவைக்க வேண்டும். பட்டுப் புடவைகள் என்றால், வாஷிங் மெஷின் பயன்படுத்தாமல் கைகளால் துவைக்க வேண்டும். அவ்வாறு சலவை செய்யும் போது அடித்து துவைக்கக் கூடாது. துணிகளை அயர்ன் செய்யும் போது டிசைனிங் மேல் அப்படியே செய்யாமல் துணியை திருப்பித்தான் செய்ய வேண்டும். புடவையின் கீழ் பகுதியில் எம்பிராய்டரி செய்யும் போது அரை இஞ்ச் மேலேதான் செய்ய வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்ப எம்பிராய்டரி டிசைன் மாறுபடும். தமிழகத்தில் உள்ள எம்பிராய்டரி டிசைன்களுக்கு ‘தோடா’ என்று பெயர். இதனை நீலகிரி மலைவாழ் மக்கள் போடுகிறார்கள். ஆந்திர மாநிலத்தில் போடும் எம்பிராய்டரியின் பெயர் ‘பஞ்சாரா மிரர்’. கண்ணாடி, சோழி, பாசிமணிகளைச் சுற்றி வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். மேற்குவங்க எம்பிராய்டரிக்கு ‘காந்தா’ என்று பெயர். இங்குள்ள மக்கள் மீன்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் அவர்களின் வேலைப்பாடுகளில் மீன் அல்லது தண்ணீர் அலை இருக்கும். கர்நாடக மக்களின் டிசைனான ‘கசோடி’டியில், கிளி, மான், துளசி மாடம் என அனைத்தும், கணித ஜியாமென்ட்ரி டிசைன்களில் இருக்கும். ராஜஸ்தான் என்றாலே நினைவுக்கு வருவது ‘காக்ரா சோளி’தான். அதாவது, பாவாடை சட்டையில் கண்ணாடி, முத்து போன்ற வேலைப்பாடுகளுக்கு நடுவே எம்பிராய்டரி செய்திருப்பார்கள். பஞ்சாபி டிசைன்களுக்கு ‘புல்காரி’ என்று பெயர். இது செழிப்பான மாநிலம் என்பதால் பூந்தோட்ட டிசைன்களை அடர்த்தியாக சாட்டின் நூலில் வடிவமைத்திருப்பார்கள். காஷ்மீர் மாநிலத்தில் ‘காஷ்மீரி’ உடைகள் பிரபலம். பளிச் நிற உடைகளில் வண்ண நூல்களில் நிறைய தையல்களை ஒரே டிசைன்களில் போட்டு அடைத்திருப்பார்கள்...’’ என்று ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள எம்பிராய்டரி டிசைன்களைப் பற்றி கூறிய உஷா, இந்த உடைகளுக்கு கற்கள், முத்துக்கள் மற்றும் குறத்தி பாசி மணிகள் போன்ற நகைகளை அணிந்தால் மிகவும் எடுப்பாக இருக்கும் என்கிறார்.

Vasantham

Ganga
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
Re: எம்பிராய்டரி உடைகளின் வகைகளும் பாதுகா&#298

Thanks for your information dear.
 

Sujatha Suji

Friends's of Penmai
Joined
Jul 30, 2011
Messages
465
Likes
264
Location
Chennai, India
#3
Re: எம்பிராய்டரி உடைகளின் வகைகளும் பாதுகா&#298

Do someone know any place in chennai, which teaches this?

Thanks Ganga for sharing this.
 

amul

Friends's of Penmai
Joined
Jun 12, 2014
Messages
103
Likes
72
Location
chennai
#4
Re: எம்பிராய்டரி உடைகளின் வகைகளும் பாதுகா&#298

thank u for ur information
 

yazhini5

Commander's of Penmai
Joined
Feb 29, 2012
Messages
1,116
Likes
1,310
Location
chennai
#5
Re: எம்பிராய்டரி உடைகளின் வகைகளும் பாதுகா&#298

Embroidery la ivalavu name irukunu neenga solli than therium. .matha state poga chance kidaicha itha gnabagam vachu dress vangaren
 

rlakshmi

Friends's of Penmai
Joined
Apr 7, 2013
Messages
186
Likes
122
Location
rajapalayam
#6
Re: எம்பிராய்டரி உடைகளின் வகைகளும் பாதுகா&#298

nice information:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.