எலுமிச்சையின் நினைத்துப் பார்க்க முடிய&#

Joined
Oct 7, 2014
Messages
55
Likes
294
Location
Tuticorin
#1
எலுமிச்சையின் நினைத்துப் பார்க்க முடியாத பலன்கள்!


பேனா மை கறைகளுக்கு குட் பை
எலுமிச்சை சாற்றின் பலன்களுக்கு முடிவே இல்லை. மோசமான பேனா மை கறைகளையும் கூட கண்ணுக்குத் தெரியாமல் துரத்துவதற்கு எலுமிச்சை சாற்றிலுள்ள அமிலம் உதவும். பேனா மை காய்ந்து போவதற்கு முன்னர் எலுமிச்சை சாற்றை தடவினால், எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்கும். கறையுள்ள இடத்தில் மெதுவாக தேய்த்த பின்னர், குளிர்ந்த நீரில் துணியை அலசி விட்டு, கறையை தேடிப் பாருங்கள் - அற்புதம் தெரியும்.

வெண்மையான கை நகங்கள்

எலுமிச்சையின் மிகவும் பரவலான பயன்பாடுகளில் ஒன்றாக ப்ளீச்சிங் உள்ளது. கை நகங்கள் அல்லது கால் நகங்களை வெண்மைப்படுத்த வேண்டும் என்றால், எலுமிச்சை சாற்றில் நகங்களை 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் அல்லது எலுமிச்சை தோலை நகங்களில் நேரடியாகத் தேய்த்து உடனடி பலன் பெறுங்கள். சிறந்த பலன் கிடைக்க வேண்டுமென்றால், வெள்ளை வினிகர் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் கரைசலை சமஅளவு எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை சாற்றை கலந்து -நகங்களை விட்டு நன்றாக அலசவும். இதன் பின்னர் உங்களுடைய நகங்கள் பளிச்சிடுவதை உடனடியாகப் பார்க்க முடியும்.

கரும்புள்ளிகளை நீக்குதல்

ஃபேஷியல் ஸ்கரப்களும், ஃபேஸ் மாஸ்க்குகளும் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்கவில்லையெனில், இரவில் படுக்கப் போகும் முன் எலுமிச்சை சாற்றை அந்த இடங்களில் தடவிக் கொள்ளுங்கள். காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விடுங்கள். சில நாட்களுக்கு பிறகு, முகத்திலுள்ள துளைகள் சுருங்கத் துவங்கும் - அதன் பின்னர் கரும்புள்ளிகளை எங்கும் காண முடியாது. அதே சமயம், கரும்புள்ளிகள் ஏற்கனவே முகப்பருக்களாக வளர்ந்து விட்டால், எரிச்சலுடைய அந்த தோல் பகுதியில் எலுமிச்சை சாறு துளிகளை விட்டால், அந்த இடம் விரைவில் காய்ந்து, குணமடைந்து விடும்.
மென்மையான தலைமுடிகோடைக்காலத்தில் கவர்ச்சியான தலைமுடியை பராமரிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எலுமிச்சையைப் பயன்படுத்தி, பிரச்சனைக்குரிய ரசாயனங்களிலிருந்து உங்களுடைய தலைமுடியை காத்துக் கொள்ளுங்கள். ¼ கோப்பை எலுமிச்சை சாற்றுடன் ¾ கோப்பை தண்ணீரை கலந்து முடியில் தடவிக் கொள்ளுங்கள். விளைவு இன்னும் சிறப்பானதாக இருக்க வேண்டும் மற்றும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தலைமுடியை சூரிய ஒளியில் உலர வைக்கவும். இதன் மூலம் சூரிய ஒளியின் பளபளப்பும், இயற்கையம்சமும் நிரம்பிய தலைமுடி உங்களுக்கு கிடைக்கும்.
வெட்டும் பலகைகள் - சுத்தமாகவும், நாற்றமில்லாமலும் பாதுகாத்தல்


காய்கறி வெட்டும் பலகைகளில் உள்ள கறைகளை நீக்குவதற்கு எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சையை அறுத்து அதன் பாதியிலுள்ள சாற்றை பலகையின் மீது பிழிந்து விட்டு, தேய்க்கவும். 20 நிமிடங்கள் கழித்து பலகையை சுத்தம் செய்யவும். தேவைப்படும் அளவிற்கு தண்ணீரில் அலசவும். பலகையை சுத்தம் செய்யவும் மற்றும் கிருமி நீக்கம் செய்யவும் விரும்பினால் எலுமிச்சை சாற்றை பயன்படுத்துங்கள். இஞ்சியின் மணம், வெங்காயம் அல்லது மிகவும் அதிக நாற்றம் தரும் உணவுப் பண்டங்களின் நாற்றத்தை விரட்டுதல் போன்றவற்றிற்கும் எலுமிச்சை உதவும்.
 

Attachments

Joined
Oct 7, 2014
Messages
55
Likes
294
Location
Tuticorin
#2
Re: எலுமிச்சையின் நினைத்துப் பார்க்க முடி&#299

வெண்மையான சலவைஒரு காலத்தில் பளிச் என்றிருந்த துணிகளை, சலவை செய்த பின்னர் அவற்றின் குணம் மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா? ஆம் என்றால், அந்த பளிச் நிறத்தைக் மீட்டுக் கொண்டு வர எலுமிச்சையை பயன்படுத்துங்கள். சாதாரணமாக துவைக்கக் கூடிய துணியுடன் ½ கோப்பை எலுமிச்சை சாற்றை விட்டு பயன்படுத்தினால், பிளீச்சிங் பாட்டிலின் துணை உங்களுக்கு அவசியப்படாது
தொண்டை புண்

எலுமிச்சைக்கு மருத்துவ குணங்களும் உள்ளன. எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் தொண்டை புண்ணை குணப்படுத்த விரும்பினால் எலுமிச்சையை பயன்படுத்துங்கள். பாதி எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, கேஸ் ஸ்டவ்வில் அது தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை சூடுபடுத்தவும். ஓர தேக்கரண்டி தேனுடன், இந்த பழத்தின் சாற்றைப் பிழிந்து குடிக்கவும். 4 தேக்கரண்டிகள் எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை தேன் மற்றும் ½ கோப்பை ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்த மற்றொரு கலவையையும் கூட தொண்டை புண்ணை ஆற்றுவதற்குப் பயன்படுத்தலாம். இந்த கலவை 5 நிமிடங்களுக்கு சூடுபடுத்தி, நன்றாகக் கலக்கி, 2 மணி நேரத்திற்கொருமுறை ஒரு தேக்கரண்டி குடித்து வரலாம்.
பொடுகுகளை ஒழித்தல்எலுமிச்சை பொடுகுத் தொல்லையை ஒழித்துக் கட்டும் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டிட முடியும். இந்த சிகிச்சையை ஷாம்புவுடன் கலந்தும் செய்யலாம். இதற்காக 2 தேக்கரண்டிகள் எலுமிச்சை சாற்றை, 2 கோப்பை தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். தினமும் இந்த கலவையை தலையில் தேய்த்து வந்தால், பொடுகுகளை நீங்கள் என்றும் காணப்போவதில்லை.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களின் பளபளப்பு

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்ந்த கலவையை கொண்டு இந்த பாத்திரங்களை புதிது போல பளபளக்கச் செய்ய முடியும். எலுமிச்சைத் துண்டை எடுத்து, அதில் உப்பு தடவி கறை உள்ள இடங்களில் தேய்க்கவும். சிறிதளவு தண்ணீரில் சுத்தம் செய்த பின்னர் அந்த பாத்திரங்கள் புதிது போல பளபளக்கும்! ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க்களிலும் கூட இந்த வழிமுறையை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
ப்ரெஷ்! ப்ரெஷ்! ப்ரெஷ்!


சுவையான உணவை தயார் செய்து, ஒரு மணி நேரத்திற்குள் அது ப்ரெஷ் ஆக இல்லாமல் போவதைப் பார்த்து உங்களுடைய புத்துணர்ச்சியும் கூட குறைந்து போய்விடும். இந்த சூழலில் ஆபத்பாந்தவனாக உதவப் போவது சாட்சாத் எலுமிச்சை சாறு தான்! இயற்கையாக உணவில் ஏற்படும் இரசாயன மாற்றங்களை தவிர்க்கும் குணம் எலுமிச்சை பழத்திற்கு உள்ளதால், ஆப்பிள், பேரிக்காய் மற்றும் அவகேடோ, வெங்காயம், தக்காளி, மிளகாய் கலந்த உணவு ஆகியவற்றை பல மணி நேரங்களுக்கு புத்துணர்ச்சியுடன் ப்ரெஷ் ஆக வைத்திட முடியும்.
 

Attachments

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
Re: எலுமிச்சையின் நினைத்துப் பார்க்க முடி&#299

good sharing..
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#4
Re: எலுமிச்சையின் நினைத்துப் பார்க்க முடி&#299

Wow.... Thanks for sharing sis... very useful information...:thumbsup
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#5
Re: எலுமிச்சையின் நினைத்துப் பார்க்க முடி&#299

Useful sharing.Thank U.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.