எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,797
Likes
1,205
Location
Switzerland
#1
தென்னிந்தியாவில் முதல்முறையாக ரத்த புற்றுநோய் பாதித்தவருக்குஎலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை சாதனை


  • சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்த குருதியியல் துறைத் தலைவர் டாக்டர் சி.மார்க்ரெட்டை, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விருது வழங்கி பாராட்டினார். மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணபாபு ஆகியோர் உடன் உள்ளனர். - VIJAYAKUMAR.B
தென்னிந்தியாவில் முதல்முறை யாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனைப் படைத்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் டாக்டர்கள் குழுவினரை பாராட்டினார்.
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (57). சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சைப் பெற சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் மைலமா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குருதியியல் துறைத் தலைவர் சி.மார்க்ரெட் தலைமையில் அதே துறையைச் சேர்ந்த டாக்டர் ஜோஸ், சிறுநீரகவியல் துறைத் தலைவர் என்.கோபாலகிருஷ்ணன், ரத்த வங்கித் துறைத் தலைவர் சுபாஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். இந்த சிகிச்சைக்கு பின்னர், அவர் நன்கு குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
டாக்டர்களுக்கு பாராட்டு
இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தென்னிந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்த குருதியியல் துறைத் தலைவர் சி.மார்க்ரெட் தலைமையிலான குழுவினரை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணபாபு, ஆஎம்ஓ இளங்கோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சீனிவாசனை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழக அரசு பொதுமக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவிலேயே அரசு பொது மருத்துவமனையில் முதல் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு, முதல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.8 லட்சம் வரை செலவாகும். நோய் தொற்று ஏற்டாமல் இருக்க குளிர்சாதன வசதியுடைய தனியறையில் பாதுகாப்பாக உள்ளார். தற்போது அவர் நன்கு குணமடைந்து வருகிறார். இது சுகாதாரத்துறையில் ஒரு மைல்கல் சாதனையாகும். இவ்வாறு சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.