எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அ

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து

தற்போது மூட்டு மற்றும் எலும்பு வலியால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்கள் தான் முக்கிய காரணம். எனவே ஒவ்வொருவரும் தங்களது எலும்புகள் மீது சற்று அதிக அக்கறை காண்பிக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் வயதான காலத்தில் தான் ஏற்படும். ஆனால் இன்றோ 30 வயதிலேயே மூட்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதற்கு மோசமான உணவுப் பழக்கம் மற்றும் எலும்புகளுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைக்காமல் இருப்பதும் காரணங்களாகும்.

நீங்கள் எலும்பு மற்றும் மூட்டு வலியாக கஷ்டப்பட்டு வருபவராயின் இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு எலும்புகளில் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கவும் ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தால், எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் கோளாறுகளைத் தடுக்கலாம்.

இஞ்சி:
இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.


கேரட்:
கேரட்டில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்மும் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.


மஞ்சள் கிழங்கு:
மஞ்சள் கிழங்கு ஓர் கிருமிநாசினி பண்புகள் நிறைந்த பொருள். இது உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழித்து, நல்ல பாதுகாப்பை வழங்கக்கூடியது.


நாட்டு மருந்து செய்யத் தேவையான பொருட்கள்:
மிளகு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 2 செ.மீ
கேரட் - 5-6
மஞ்சள் கிழங்கு - 1 செ.மீசெய்யும் முறை:
முதலில் மஞ்சள் மற்றும் இஞ்சியைத் துருவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துப் பருக வேண்டும்.

எடுக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் மூன்று வேளை பருக வேண்டும். அதுவும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 50-60 மிலி பருக வேண்டும். தயாரித்த பானம் ஒருவேளை கெட்டியாக இருந்தால், நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
இதுவரை நீங்கள் மூட்டு மற்றும் எலும்பு வலிகளுக்கு மருந்து எடுத்து வருபவராயின், இயற்கை வைத்தியத்தைப் பின்பற்றும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, பின் மேற்கொள்ளுங்கள். 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் &am

Really wonderful post about எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து! thank you @ahilanlaks


 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் &am

Really wonderful post about எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து! thank you @ahilanlaks
Thanks & welcome Sumi sis :)
 

rni123

Friends's of Penmai
Joined
Oct 24, 2014
Messages
371
Likes
322
Location
ME
#4
Re: எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் 

TFS friend, very useful one.. I have a question... Is it followed by someone or sharing from net?
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#5
Re: எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் 

TFS friend, very useful one.. I have a question... Is it followed by someone or sharing from net?
Thanks & welcome friend, it`s article shared from net.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.