எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
#1
1527057989742.png

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படுகிறது.

இந்த ஆண்டு பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 10,01,140. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 9,50,397. மாணவியரின் எண்ணிக்கை 4,76,057. மாணவர்களின் எண்ணிக்கை 4,74,340.

ஒட்டுமொத்தத்தில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 92.5 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 3.9 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12336. இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7083. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5253. மொத்தம் 5584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 5456 அரசுப் பள்ளிகளில் 1687 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
#2
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதத்தில் மெட்ரிக் பள்ளிகள் முதலிடம்

1527058101567.png

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மெட்ரிக் பள்ளி முதலிடத்தில் உள்ளது. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.79 ஆகும். பெண்கள் பள்ளிகள் 96.27 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 94.81 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.36 சதவீதம், அரசுப் பள்ளிகள் 91.36 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 87.54 சதவீதம் என்ற அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளது.பாடவாரியாக பார்க்கையில் அறிவியல் படத்தில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 96.75 சதவீதம், ஆங்கிலத்தில் 96.50 சதவீதம், மொழிப்பாடத்தில் 96.42 சதவீதம், கணிதத்தில் 96.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், மொத்த மதிப்பெண் அடிப்படையிலான பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை http://dge.tn.nic.in/SSLC_2018_ ANALYSIS.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.