ஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு? : ரக

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
ரஜினி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்

1525584609664.png

அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டமாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னைக்கு உறுப்பினர்களை வரவழைத்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினி கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ளது:-

ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கட்சி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்த ராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய 6 பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு மாதம் ஒருமுறை கூடி உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரித்து தலைமை மன்றத்துக்கு பரிந்துரைகளை அளிக்கும். மேலும் இந்த குழுவுக்கு மன்ற உறுப்பினர்கள் தங்களின் குறைகளை dac@rajinimakkalmandram என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது ஒழுங்கு நடவடிக்கை குழு எண்.40 விஸ்வநாதபுரம் பிரதான சாலை, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததனர். அவர்களுடன் நேற்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்களை வருகிற 13-ஆம் தேதி சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடக்கும இந்த சந்திப்பில் தமிழக - புதுச்சேரி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் பங்கேற்கிறார்கள்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,246
Likes
543
Location
chennai
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்?- இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதால், தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #RajinikanthMakkalMandram

இளைஞர் அணியினருடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் சிறப்பாக பணி செய்வோம் என்று உறுதி அளித்தனர். பின்னர் இளைஞர் அணி நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பின்னர் ரஜினி தனது அர சியல் பயணத்தை வேகப்படுத்தியுள்ளார். இந்த மாதம் தொடர்ச்சியாக அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

கடந்த 9-ந்தேதி காலா பட இசை வெளியீட்டு விழாவை ரஜினி மக்கள் மன்றத்தினர் 10 ஆயிரம் பேருடன் கொண்டாடிய ரஜினி, புதிய கட்சியை தொடங்குவதற்கான காலம் விரைவில் வரும் என்று அறிவித்தார். யார் என்ன சொன்னாலும் எனது வழியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறினார்.


மறுநாள் 10-ந்தேதி தனது வீட்டில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி இன்று இளைஞர் அணியினரை சந்தித்துள்ளார். இதன் மூலம் புதிய கட்சியை தொடங்குவதற்கான அடித் தளத்தை ரஜினி ஆழமாக போட்டு வருவது உறுதியாகி உள்ளது.

இதற்கிடையே ரஜினி, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள மக்கள் மன்றத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது பொதுமக்களிடம் அவர் ஆதரவு திரட்டவும் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் ரஜினி நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை என்கிற குறையும் நீங்கும் என்று நம்புவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிர்வாகிகள் சந்திப்பு, பரபரப்பு பேச்சு என அரசியல் களத்தில் அதிரடியை காட்டிவரும் ரஜினி புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அரசியல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
'ஆன்மிகம் பெயரில் அரசியல் தவறு'

''ஆன்மிகத்தின் பெயரைச் சொல்லி, சுய லாபத்துக்காக அரசியலில் ஈடுபடுவது தவறு,'' என, ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து, மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமி கூறினார்.

கோவை, வெள்ளலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் திராவிடப் பெயரை பயன்படுத்தி, சிலர் சம்பாதித்து வருகின்றனர். திராவிடமும், ஆரியமும் நமது கலாசாரம். திராவிடம் என்பது, இந்துக்களுக்கு விரோதமானது அல்ல.

ஆன்மிகத்தின் பெயரைச் சொல்லி, சுயலாபத்துக்காக நடிகர் ரஜினி அரசியலில் ஈடுபடுவது தவறு. கலாசாரத்தில் ஆன்மிகமும், அரசியலும் வெவ்வேறு. முதல்வர் பழனிசாமி, ஆன்மிக விரோதி அல்ல. நமக்கு தேவை, ஆன்மிக விரோதம் இல்லாத ஆட்சிதான்.கோடை மழை நமக்கு அவசியம். கோடை மழை பெய்தால் தான், அடுத்தடுத்த பருவத்தில், சரியாக மழை பெய்யும்; சுபிட்சம் நிலவும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
மெரினாவில் தடை விதிக்கக் காரணம் இருக்கிறது!" - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் ஒரு வார்த்தை பேசினாலும் அது வைரலாகிவிடுகிறது! கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவித்தது முதலே தமிழக அரசியல் அரங்கு அதகளமாகிவருகிறது.

''அரசியலைப் பொறுத்தவரையில், பலமான கட்டமைப்புடன் நாம் காலடி வைத்தால்தான் போட்டிகளை சமாளித்து வெற்றி பெற வேண்டும். அதற்கான முயற்சியாக, நமது மன்றத்தினர் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களை நமது மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும். அரசியல் ரீதியாக எந்தவித எதிர்க்கருத்துகளையும் நாம் தெரிவிக்க வேண்டாம். போராட்டங்கள் நடத்துவதற்கென்று வேறு சில அமைப்பினரும் ஆட்களும் இருக்கிறார்கள். நாம் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்'' என்ற பொருள்பட ரஜினிகாந்த் பேசியிருந்தது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, பொதுஇடங்களில் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக்கிவிட்டுச் சென்றுகொண்டிருந்தார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து, 'மக்கள் பிரச்னை குறித்தான நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுக்கிறார் ரஜினிகாந்த்' என்றக் குற்றச்சாட்டு ரஜினிகாந்த் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று 'ரஜினி மக்கள் மன்ற'த்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் அளித்தார். அந்தக் கேள்வி பதில்கள் அப்படியே இங்கே....

''150 தொகுதிகளில், ரஜினிகாந்துக்கு ஆதரவு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றனவே....?''

''அந்த செய்தி உண்மையாக இருந்தால் ரொம்ப சந்தோஷம்!'' (சிரிக்கிறார்)

''ஆன்மிக அரசியலை முன்வைப்பதாக இருந்தால், ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே...?''

''இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை... கூட்டணி பற்றியெல்லாம் அப்போது பார்த்துக்கொள்ளலாம்''

''கர்நாடகத் தேர்தலில் எடியூரப்பா ராஜினாமா செய்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் கால அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து. அப்படி அவர் செய்திருக்கக்கூடாது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் கொடுத்தது நல்ல தீர்ப்பு!''

''மெரினாவில், ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்துள்ளதே....?''

''சில குறிப்பிட்டக் காரணங்களுக்காகத்தான் இதுபோல் தடை விதிக்கிறார்கள். காரணமின்றி எதையும் செய்யமாட்டார்கள்''

''காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்கும் இந்த நேரத்தில், காவிரிப் பிரச்னையில் என்ன தீர்ப்பு கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?''

''உச்ச நீதிமன்றம் கூறியதை அவர்கள் நிறைவேற்றியே ஆகவேண்டும். அது அவர்களது கடமையும்கூட''

''தற்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி ஆணையம் பற்றி உங்களது கருத்து?''

''அணையின் முழுக் கட்டுப்பாடும் ஆணையத்தின் பொறுப்பிலேயே இருக்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. கர்நாடக அரசின் பொறுப்பில் ஆணையம் செயல்பட்டால், அது நல்லதல்ல. ஆணையத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருப்பார்கள். அரசியல் தலையீடு இருக்கும். எனவே, இவ்விஷயத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை போகப்போகத்தான் பார்க்கமுடியும்''

''கமல்ஹாசன் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கவில்லையே...?''

''அனைத்துக்கட்சிக் கூட்டம் என்று சொன்னார்கள். நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லையே கண்ணா.... அவர்களது முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துகள். இன்னும் போகப்போக நிறைய விஷயங்கள் இருக்கின்றன... அப்போது மக்கள் நலனுக்கான விஷயங்களில் கட்டாயம் சந்திப்போம்!''

''2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை ஆரம்பித்துவிடும் நோக்கில்தான் கட்சியினரைச் சந்தித்து வருகிறீர்களா?''
'அப்படியானத் திட்டம் என்றும்கூடச் சொல்லிக்கொள்ளலாம். தேர்தல் வருவதற்குள் எல்லாவற்றுக்கும் நாம் ரெடியாக இருப்போம். இதைத்தான் ஏற்கெனவே டிசம்பர் 31 ஆம் தேதியும் நான் சொல்லியிருந்தேன்.''
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
ரஜினியை முதல்வர் பதவியில் அமர்த்த தமிழக மக்கள் தயாராகி விட்டனர்- தமிழருவி மணியன்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
10 நாட்களுக்கு ஒரு முறை ரஜினியை நான் நேரில் சந்தித்து பேசி வருகிறேன். மற்ற நேரங்களில் போன் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறோம். ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர்.

எல்லோர் மனதிலும் அவர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார். ரஜினி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
கர்நாடகாவில் எலியும், பூனையுமாக இருந்த சித்தராமையாவும், குமாரசாமியும் இன்று ஒருவருக்கொருவர் நட்பு கொண்டு நடிப்பது, பதவிக்காகத்தான். இவர்கள் நடத்துவது பதவிக்கான அரசியல், இதில் மக்கள் நலன் ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
எடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள் - ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.

எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள். கர்நாடகாவில் இனி அமைய இருக்கும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி விவகாரத்தில் செயல்பட வேண்டும்.

கட்சி தொடங்கிய பின்னரே கூட்டணி குறித்து பேச முடியும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு குமாரசாமி காரசார பதில்

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளவாறு கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக பெங்களூரு நகரில் மஜத கட்சி தலைவர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கர்நாடக மாநிலத்தில் தேவையான தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு தரமுடியும். ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு வந்து இங்குள்ள அணைகளை பார்க்க வேண்டும். எங்கள் விவசாயிகளின் நிலைமைகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.ஆனால், இங்கு வந்து அணைகளை பார்வையிட்டால் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்வார் என நினைக்கிறேன். அதற்கு பிறகும் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என கேட்டால் அதுதொடர்பாக பேசலாம் என தெரிவித்துள்ளார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,246
Likes
543
Location
chennai
வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினிகாந்த்

1526989990553.png

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 5 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:-

மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.

என தெரிவிக்கப்பட்டுள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
‘ரஜினி முகாம் !

‘‘ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணியினரை மே 20-ம் தேதி ரஜினி சந்தித்துப் பேசினார். அதற்கு முதல்நாள், மக்கள் மன்றத்தின் மூத்த பெண் உறுப்பினரான சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 78 வயதான சாந்தா அம்மாளை நேரில் வரவழைத்துப் பேசினார் ரஜினி.

இந்த வயதிலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டிவருகிறாராம் அந்தப் பெண்மணி. மறுநாள், மகளிர் அணியினரிடம் பேசிய ரஜினி, ‘பூத் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடக்கிறது. அதில் ஈடுபடும் மன்ற நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாராம். வேறு ஏதும் பாலிடிக்ஸ் பேசவில்லையாம். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டார்களாம். ரஜினியும் அவர்களுக்கு வாழ்த்து சொன்னாராம். மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஸ்ரீவித்யா சீனிவாசன்தான் இந்தச் சந்திப்பில் அதிகம் பேசப்பட்டவர்.

இவருக்கு, ராகவேந்திரா மண்டபத்தில் செயல்படும் தலைமை அலுவலகத்தில் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவரின் கணவர் சீனிவாசன், மன்றத்தின் ஐ.டி பிரிவில் முக்கியப் பணியில் இருக்கிறாராம். மாவட்டங்களிலிருந்து வரும் மன்றங்களின் அன்றாடச் செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கேட்டு, மன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் தெரிவிக்கிறாராம் ஸ்ரீவித்யா. அதேபோல், இங்கிருந்து தகவல்களை உடனுக்குடன் மன்றங்களுக்கும் சொல்கிறாராம். கிட்டதட்ட கால் சென்டர் மாதிரி மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடக்கிறதாம். அசுர வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யும் ஒன்பது பேரை ரஜினி களம் இறக்கிவிட்டிருக்கிறாராம்.

அதனால், மன்றத்தினர் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். இவர்களுடன் இணைப்பில் எப்போதும் இருக்கிறாராம் ரஜினி. ஏதாவது பிரச்னையென்றால், ரஜினியே தனக்கு அறிமுகமானவர்களுக்கு போன் போட்டு, நடந்தது என்ன என்று கிராஸ் செக் செய்கிறாராம்.”
‘அவர், டாக்டர் . இவருக்கு இது மூன்றாவது பதவி. முதலில், கடலூர் மாவட்டப் பொறுப்பாளர். அடுத்து, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் உறுப்பினர். இப்போது, மூன்றாவது பதவி. இவர், வடமாவட்ட அரசியல் வி.ஐ.பி-களுக்கு உறவினர் என்கிறார்கள். இவரிடம் ஏற்கெனவே உள்ள பதவிகளைத் தகுதியான வேறு நபர்களுக்கு மாற்றித்தரும்படி ரஜினி சொல்லிவிட்டாராம். மாற்றும் வரை, மூன்று குதிரைகளில் அவர் சவாரி செய்வாராம். ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பதில் கறாராக இருக்கிறாராம் ரஜினி.”
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.