ஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
`கிறிஸ் லின், உத்தப்பா அபாரம்' - பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த கொல்கத்தா அணி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். பிளே ஆஃப் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ள இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி களமிறங்கியது. இதனையடுத்து களம்கண்ட ஹைதராபாத் அணிக்கு இந்த முறை ஷிகர் தவானுடன், கோஷ்வாமி துவக்க வீரராகக் களமிறங்கினார். இருவரும் நன்றாக இன்னிங்சை துவக்கினர். கோஷ்வாமி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த தவான் - வில்லியம்சன் இணை இந்த முறையும் அதிரடியாக ஆடியது. இருப்பினும் தவான் 50 ரன்களுக்கும், வில்லியம்சன் 36 ரன்களுக்கும் வெளியேற அணியில் ஸ்கோர் குறைய ஆரம்பித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

இதன்பின்னர் கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் - சுனில் நரேன் ஜோடி துவக்கம் தந்தது. வழக்கம் போல் சுனில் நரேன் குறைந்த பந்துகளில் அதிரடி காட்டிவிட்டு சென்றார். அவர் 10 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார்.

பின்னர் இணைந்த உத்தப்பா - கிறிஸ் லின் ஜோடி பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கிறிஸ் லின் 55 ரன்களும், உத்தப்பா 45 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்ப, கேப்டன் தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து கொல்கத்தா அணி வெற்றி இலக்கை எட்டியது. வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை கொல்கத்தா அணி உறுதி செய்துள்ளது. ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

1526820404121.png


ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் 3.30 மணிக்கு சுண்டப்பட்டது.

இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. பிரித்வி ஷா, 2. ஷ்ரேயாஸ் அய்யர், 3. ரிஷப் பந்த், 4. மேக்ஸ்வெல், 5. விஜய் சங்கர், 6. அபிஷேக் ஷர்மா, 7. ஹர்ஷல் பட்டேல், 8. அமித் மிஸ்ரா, 9. லியாம் பிளங்கெட், 10. சந்தீப் லாமிச்சேன். 11. டிரென்ட் போல்ட்.

மும்பை இந்தியன்ஸ் அணயில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சூர்யகுமார் யாதவ், 2. எவின் லெவிஸ், 3. இஷான் கிஷான், 4. ரோகித் சர்மா, 5. குருணால் பாண்டியா, 6. பொல்லார்டு, 7. ஹர்திக் பாண்டியா, 8. பென் கட்டிங், 9. மயாங்க் மார்கண்டே, 10. பும்ரா, 11 முஷ்டாபிஜூர் ரஹ்மான்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
மும்பை இந்தியன்ஸ்க்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்

1526820530653.png

ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பிரித்வி ஷா, மேக்ஸ்வெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 12 ரன்னிலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 44 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா முறையே 43 ரன்களும், 15 ரன்களும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் எடுத்தது.

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
டெத் ஓவர் பந்து வீச்சு சூப்பராக அமைந்தது- ஷுப்மான் கில்

1526820627586.png

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 54-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

ஒரு கட்டத்தில் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோர் 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களாக இருந்தது. ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 12.5 ஓவரில் 17 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை கட்டுப்படுத்தினார்கள்.கடைசி 7 ஓவரில் (42 பந்தில்) 44 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். குறிப்பாக இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா 4 ஓவரில் 30 ரன்கள் மட்டு விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியதே வெற்றிக்கு காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஆன ஷுப்மான கில் கூறியுள்ளார். இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சாளர்கள் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியதே டர்னிங் பாயின்ட்டாக அமைந்தது. பிரதிஷ் அருமையாக பந்து வீசினார். டெத் ஓவரில் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள்’’ என்றார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
மும்பை அணியின் பிளே ஆஃப் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த டெல்லி!
மும்பை அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை அடுத்து மும்பை அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.

Photo Credit: Twitter/IPL

டெல்லி அணி நிர்ணயித்த 175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 3 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், லாமிசேன் வீசிய 4-வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த இஷான் கிஷான் பொறுமைகாக்க மறுமுனையில் லீவிஸ் அதிரடி காட்டினார். பவர் பிளேவில் 57 ரன்களைக் குவித்த மும்பை, 7வது ஓவரின் முதல் பந்தில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே லீவிஸூம் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 48 ரன்கள் எடுத்தார். லீவிஸைத் தொடர்ந்து கிரண் போலார்ட் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் லாமிசேன் வீசிய 10வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அப்போது மும்பை அணி, 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

இதையடுத்து கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடியை ஹர்ஷல் படேல் பிரித்தார். ரோகித் ஷர்மா 13 ரன்களுடன் வெளியேறிய அடுத்த ஓவரிலேயே பாண்ட்யாவும் 27 ரன்களுடன் நடையைக் கட்டினார். மும்பை அணியின் வெற்றிக்குக் கடைசி 5 ஓவர்களில் 58 ரன்கள் தேவைப்பட்டது.

இறுதி ஓவர்களில் பென் கட்டிங் அதிரடி காட்ட, மும்பை அணி வெற்றியை நோக்கி மெதுவாக முன்னேறியது. கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பென் கட்டிங், ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். 3 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 163 ரன்களுக்கு ஆட்டமிழந்த மும்பை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வியை அடுத்து, மும்பை அணி நடப்பு, ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. டெல்லி தரப்பில் போல்ட், லாமிசேன் மற்றும் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை

1526842553515.png

ஐபிஎல் 11-வது சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸ், பவுண்டரி, அரைசதம், சதம் என அசத்தினார். இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.இந்த சீசனில் ரிஷப் பந்த் 14 போட்டிகளில் விளையாடி 5 அரைசதம், ஒரு சதத்துடன் 684 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்கு முன் ராபின் உத்தப்பா 2014-ல் கொல்கத்தா அணிக்காக 660 ரன்கள் அடித்திருந்தார். இதுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அத்துடன் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய ஒரே விக்கெட் கீப்பர் உத்தப்பாதான்.கேஎல் ராகுல் இந்த சீசனில் 659 ரன்கள் குவித்து ஒரு ரன் இடைவெளியில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜாஸ் பட்லர் இந்த சீசனில் 248 ரன்கள் குவித்து 4-வது இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் 2013-ல் 510 ரன்களும், கில்கிறிஸ்ட் 2009-ல் 495 ரன்களும், டோனி 2013-ல் 461 ரன்களும், குயின்டாக் டி காக் 2016-ல் 445 ரன்களும் குவித்துள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

1526842920387.png

ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்

1526843476294.png

ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹர். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி.
இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி உடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மனோஜ் திவாரி 30 பந்தில் 35 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்தில் 24 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின் வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்பதி ராயுடு, டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர். ராயுடு 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், மோகித் சர்மா வீசிய 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். 4-வது ஓவரை அன்கித் ராஜ்பூட் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் டு பிளெசிஸ் ஆட்டமிழந்தார், தொடர்ந்து வந்த சாம் பில்லிங்ஸ் முதல் பந்திலேயே போல்டானார்.

இதனால் சென்னை அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அதன்பின் ரெய்னா உடன், ஹர்பஜன் சிங் ஜோடி சேர்ந்தார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் 10 ஓவர்களில் சென்னை அணி 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தீபக் சஹார் களமிறங்கினார்.

15-வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் சஹார் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய சஹார் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடங்கும். அவரைத்தொடர்ந்து கேப்டன் டோனி களமிறங்கினார்.
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஒவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய ரெய்னா 45 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. டோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் அக்னித் ராஜ்பூட், அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்? கேப்டன் அஸ்வின் விளக்கம்

1526990795663.png

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் (0), லோகேஷ் ராகுல் (7 ரன்) சோபிக்காத நிலையில் கருண் நாயர் அரைசதம் அடித்து (54 ரன், 3 பவுண்டரி, 5 சிக்சர்) சரிவில் இருந்து காப்பாற்றினார். பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 9-வது வெற்றியை ருசித்தது. துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் டோனி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியை 100 ரன்களுக்குள் மடக்கினால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் பஞ்சாப் அணி தோல்வியுடன் (மொத்தம் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி) பரிதாபமாக வெளியேறியது.

தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சரியில்லை. ‘பவர்-பிளே’யிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. கருண் நாயர் நன்றாக ஆடினாலும் 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே எடுத்து விட்டோம். ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினோம். ஆனால் மே மாதம் (கடைசி 7 ஆட்டங்களில் 6-ல் தோல்வி) மோசமாக அமைந்து விட்டது.

இந்த தொடரை எடுத்துக் கொண்டால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடினோம். ஆனால் பிற்பகுதியில் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் போய் விட்டது. தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் மட்டுமே அணியில் கணிசமான ரன்களை குவித்து இருக்கிறார்கள். மிடில் வரிசை பேட்டிங் எதிர்பார்த்தபடி ‘கிளிக்’ ஆகவில்லை. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இதே போல் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வி (88 ரன்னில் சுருண்டது) எங்களது முன்னேற்றத்தை கெடுத்து விட்டது என்று சொல்லலாம். அந்த தோல்வியால் ரன்ரேட் குறைந்ததோடு, வீரர்களின் மனஉறுதியும் வெகுவாக சீர்குலைந்து போனது.

இவ்வாறு அஸ்வின் கூறினார்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
இறுதிச் சுற்றில் சென்னை: 2 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி திரில் வெற்றி

டுபிளெஸிஸை மகிழ்ச்சியில் ஆரத்தழுவும் சென்னை வீரர்கள்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார்.

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களை குவித்தார். ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்று முதலாவது தகுதிப் போட்டி மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன் முதல் தகுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பீல்டிங்கை தேர்வு செய்தது.

துவக்கமே ஹைதராபாதுக்கு அதிர்ச்சி
ஹைதராபாத் அணி சார்பில் ஷிகர் தவன், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் துவக்கமே ஹைதராபாத்துக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தவன் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே சஹார் பந்தில் போல்டானார். 12 ரன்களில் கோஸ்வாமியும், 24 ரன்களுடன் கேப்டன் வில்லியம்ஸனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பிரோவா 2 விக்கெட்

ஷகிப் அல் ஹசன் 12 , மணிஷ் பாண்டே 8, பதான் 24, புவனேஸ்வர் குமார் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கார்லேஸ் பிராத்வெயிட் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 139 ரன்களையே எடுத்தது. சென்னை தரப்பில் பிராவோ 2 விக்கெட்டையும், சஹார், கிடி, தாகுர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரன் ஏதுமின்றி வாட்சன் அவுட்
140 ரன்கள் எடுத்தால் வென்ற என்ற இலக்குடன் சென்னை அணி சார்பில் வாட்சன்-டுபிளெஸிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதலாவது ஓவரிலேயே புவனேஸ்வர் குமாரின் அபாரமான பந்துவீச்சால் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் கீப்பர் கோஸ்வாமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 1 ரன்னையே சென்னை எடுத்தது.

சித்தார்த் கெüல் அபாரம்
டுபிளெஸிஸ் உடன் இணை சேர்ந்த ரெய்னா சந்தீப் சர்மாவின் ஓவரில் தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். எனினும் அவர் 4 பவுண்டரியுடன் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த போது சித்தார்த் கெüல் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

பின்னர் வந்த அம்பட்டி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே கெüல் பந்தில் போல்டானார். அப்போது 3.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு சென்னை 24 ரன்களை எடுத்திருந்தது.

சென்னை திணறல் 80/6
தோனி-டுபிளெஸிஸ் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். கேப்டன் தோனி 9 ரன்கள் எடுத்திருந்த போது ரஷீத்கான் பந்துவீச்சில் போல்டானார். பிராவோ 7 ரன்களுக்கு ரஷீத் கான் பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஆட வந்த ரவீந்திர ஜடேஜாவும் நிலைக்கவில்லை. 3 ரன்கள் எடுத்த அவர் சந்தீப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை 80 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது.

ஹர்பஜன் சிங் 2, சஹார் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 20, 17 ரன்களை சென்னை எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 67 ரன்களுடன் டுபிளெஸிஸýம், 15 ரன்களுடன் தாகுரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டுபிளெஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஹைதராபாத் தரப்பில் சந்தீப், கெüல், ரஷீத் கான் தலா 2 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் சென்னை அணி ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சீசனில் தொடர்ந்து 3-வது முறையாக சென்னையிடம் தோல்வியை தழுவியது ஹைதராபாத்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.