ஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
ஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்

1527072821101.png


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து விட்டன. பிளே-ஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டியான குவாலிபையர் 1 ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

இந்நிலையில், இந்த சீசனில் பல்வேறு அணிகளால் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சொதப்பிய 11 முக்கிய வெளிநாட்டு வீரர்களில் பற்றி பார்க்கலாம்.


பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் அதிகமான தொகையான ரூ.12.50 கோடிக்கு எடுக்கப்பட்ட வீரர் ஆவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இடம் பெற்று இருந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு போட்டியில் கூட பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் முத்திரை பதிக்கவில்லை. 13 போட்டிகளில் களமிறங்கி பென் ஸ்டோக்ஸ் 136 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இவரின் ஒவ்வொரு ரன்னுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொடுத்த விலை ரூ.6.38 லட்சமாகும். 13 போட்டிகளில் 29 ஓவர்கள் பந்துவீசி 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார் பென் ஸ்டோக்ஸ். இவரின் ஓவர் எக்கானமி ரேட் 9 ரன்களாகும். பேட்டிங்கிலும் சராசரி 16 ரன்களாகும். பென் ஸ்டோக்ஸின் சொதப்பல் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.


பென் ஸ்டோக்ஸ்


கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெலின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமும் தலைகீழானது. சர்வதேச ஆல்ரவுண்டர் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் மேக்ஸ்வெல்லை ரூ.9 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. ஆனால் ஒரு போட்டியில் கூட மேக்ஸ்வெல் மேட்ச் வின்னராக அணிக்குத் திகழவில்லை என்பது வேதனையாகும். 12 போட்டிகளில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 169 ரன்கள் சேர்த்தார். சராசரியாக 14 ரன்களும், அதிகபட்சமாக 49 ரன்களாகும்.


கிளென் மேக்ஸ்வெல்


கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் இந்த முறை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். பெங்களூரு அணி ஏலத்தில் ரூ.7.60 கோடிக்கு வோக்ஸை ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டில் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற வோக்ஸ் 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால், நம்பி எடுத்த வோக்ஸை எடுத்த பெங்களூரு அணி மோசம் போனது. 5 போட்டிகளில் பங்கேற்ற வோக்ஸ் 17 ரன்கள் சேர்த்தால், 8 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார்.


கிறிஸ் வோக்ஸ்


ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.6.2 கோடிக்கு ஏலத்தில் ஆரோன் பிஞ்சை ஏலத்தில் எடுத்தது. பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், முதல் இரு போட்டிகளிலும் தொடக்க வீரராக பிஞ்ச் களமிறக்கப்பட்டு, டக்அவுட்சில் தலைதெறிக்க ஓடினார். அதன்பின் நடுவரிசையில் களமிறக்கப்பட்டும் ஆரோன் பிஞ்ச் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்தத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய பிஞ்ச் 134 ரன்கள் சேர்த்தார். அதிகபட்சமாக 46 ரன்களும், சராசரியாக 16 ரன்களும் சேர்த்திருந்தார்.


ஆரோன் பிஞ்ச்


கெய்ரான் பொல்லார்ட் (மேற்கிந்திய தீவுகள்)

மேற்கிந்தியத்தீவுகள் வீரரான கெய்ரான் பொல்லார்ட் சிறந்த ஆல்ரவுண்டர். பொலார்டின் திடீர் அதிரடி பேட்டிங், விக்கெட் வீழ்த்தும் திறமை ஆகியவற்றுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் இவரை 5.40 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது. கடந்த சில ஐபிஎல் சீஸன்களாக சொதப்பி வந்த பொல்லார்டை இந்த முறை மும்பை அணி கழற்றிவிட்டு இருக்க வேண்டும். ஆனால், தக்கவைத்ததற்கு நல்ல தண்டனை கிடைத்தது. இந்த ஐபிஎல் சீசனில் கேப்டன் ரோகித் சர்மா பலமுறை பொலார்டுக்கு வாய்ப்பு கொடுத்தும் பேட்டிங்கில் சொதப்பினார். இதனால், 7 போட்டிகளோடு பொல்லார்டை கழற்றிவிட்டனர். இந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய பொல்லார்ட் 76 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.


கெய்ரான் பொல்லார்ட்


டார்கி ஷார்ட் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான இவர், அங்கு நடந்த பிக் பாஷ் டி20 லீக்கில் சிறப்பாக விளையாடினார். ஹோபர்ட் ஹரிக்கன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அவர் 572 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இவரை ரூ.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஆனால், ராஜஸ்தான் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய ஷார்ட் இதுவரை 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்துள்ளார்.


டார்கி ஷார்ட்


பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கல்லம் 3.60 கோடி ரூபாய்க்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான சதம், அரை சதங்களால் வெற்றியை எளிதாக்கிக் கொடுத்தவர், பிரண்டன் மெக்கல்லம். கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த மெக்கல்லம் இந்த முறை ஐபிஎல் போட்டியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தார். பெங்களூரு அணியில் விராட் கோலி, டீகாக், மெக்கல்லம், டிவில்லியர்ஸ் எனச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் அந்த அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி முடியவில்லை. மிகச்சிறந்த பேட்ஸ்மேனான மெக்கல்லம் 6 போட்டிகளில் களமிறங்கி 127 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் அதிபட்சம் 43 ரன்களாகும்.


பிரண்டன் மெக்கல்லம்


கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் 2.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் காயம் காரணமாக விலகியதை அடுத்து நியூசிலாந்து ஆல்ரவுண்டரான கோரி ஆண்டர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கோரி ஆண்டர்சனின் மோசமான பாஃர்மைப் பார்த்து நியூசிலாந்து அணியில் இடம்பெறாமல் இருந்தார். இருப்பினும் அவர் நன்றாக விளையாடுவார் என நம்பி ஆண்டர்சனை எடுத்த பெங்களூர் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற ஆன்டர்சன் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 3 விக்கெட் வீழ்த்தினார்.


கோரி ஆண்டர்சன்


மிச்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் மிட்ஷெல் ஜான்சன் பந்துவீச்சில் அனல் பறக்கும். அத்தகைய சிறந்த பந்துவீச்சாளர் இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். அவரை 2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் ஜான்சன் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், 10 போட்டிகளில் பந்துவீசிய ஜான்சன் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். சராசரியா ஓவருக்கு 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.


மிச்செல் ஜான்சன்


கொலின் முன்ரோ (நியூசிலாந்து)

நியூசிலாந்து வீரரான காலின் முன்ரோ சிறந்த தொடக்க ஆட்டக்காரர். இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.1.90 கோடிக்கு விலைக்கு வாங்கியது. டி20 பேட்ஸ்மேன் தர வரிசையில் 2-ம் இடத்தில் காலின் முன்ரோ இருப்பதால் மிகப்பெரிய பலமாக அணிக்கு இருப்பார் என்று டெல்லி அணி நினைத்தது. ஆனால், ஒரு போட்டியில் கூட முன்ரோ சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் களமிறங்கிய முன்ரோ 63 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதில் அதிகபட்சம் 33 ரன்களாகும்.


கொலின் முன்ரோ


இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா)

தென் ஆப்பிரிக்காவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தாஹிர் அதன்பின் சொதப்பினார். இதனால் சிஸ்கே அணி இம்ரானை ஓரம் கட்டியது. 6 போட்டிகளில் விளையாடிய இம்ரான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


இம்ரான் தாஹிர்
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
இறுதிப்போட்டியில் சென்னை- பின்வரிசை வீரர்களுக்கு டோனி பாராட்டு

ஐ.பி.எல். தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதியது. முதலில் விளையாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்னே எடுக்க முடிந்தது.

பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 42 பந்தில் 67 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 13 பந்தில் 22 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கு டு பிளிஸ்சிஸ் முக்கிய பங்கு வகித்தார். சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது. இதனால் தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கிய டு பிளிஸ்சிஸ் இறுதி வரை களத்தில் நின்று சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

கடைசி கட்டத்தில் அவருக்கு தீபக் சாஹரும், ‌ஷர்துல் தாக்கூரும் உதவியாக இருந்தனர். சாகர் 6 பந்தில் 10 ரன்னும் (1 சிக்சர்), ‌ஷர்துல் தாக்கூர் 5 பந்தில் 15 ரன்னும் (3 பவுணடரி) எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-

சி.எஸ்.கே. அணியின் பின்வரிசை வீரர்களுக்கே பாராட்டு எல்லாம் சேரும். நெருக்கடியான கட்டத்தில் அவர்கள் டு பிளிஸ்சுக்கு ஜோடியாக நின்று வெற்றியை தேடி தந்தனர். இந்தப்போட்டிக்கான அனுபவத்தில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்வது முக்கியமானது.

இந்தப்போட்டி தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். வீரர்களின் அறை இதற்கு முக்கிய பங்கு வகித்தது. அணியின் நிர்வாகத்துக்கு பாராட்டு எல்லாம் சேரும். வீரர்களின் அறை சுமூகமாக இல்லாவிட்டால் ஆடுவது கடினமாகும். இறுதிப்போட்டிக்கு நுழைந்தது மிகவும் மகிழ்ச்சியானது. இந்த வெற்றி முக்கியமானது.

இவ்வாறு டோனி கூறினார்.

தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “இது ஒரு சிறந்த ஆட்டம். நாங்கள் சில ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். சென்னை அணியின் பின்வரிசை வீரர்கள் எங்கள் வெற்றியை பறித்துவிட்டனர்” என்றார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
சதம், டக்அவுட்டை பதிவு செய்த வீரர்கள் சாதனையில் இணைந்தார் அம்பதி ராயுடு

ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 1 நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 139 ரன்கள் சேர்த்தது. பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

4-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா க்ளீன் போல்டானர். அதன்பின் இந்த தொடரில் அசத்தி வரும் அம்பதி ராயுடு களம் இறங்கினார். இவர் தான் சந்தித்த முதல் பந்திலே க்ளீன் போல்டானார். இதன்மூலம் ஒரே அணிக்கெதிராக ஒரு சீசனில் சதமும், டக்அவுட் ஆகியும் சாதனை புத்தகத்தில் அம்பதி ராயுடு இடம்பிடித்துள்ளார்.இதற்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 2009-ல் சதமும், டக்அவுட்டும் ஆகியுள்ளார். டேவிட் வார்னர் 2010-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராகவும், கிறிஸ் கெய்ல் 2011-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராகவும், 2011-ல் கில்கிறிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராகவும், முரளி விஜய் 2012-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராகவும், விராட் கோலி 2016-ல் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிராகவும் சதம் அடித்ததுடன் டக்அவுட்டும் ஆகியுள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
7-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் பங்குபெறும் சிஎஸ்கே: சாதனை விவரங்கள்


ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களைக் குவித்தார்.

4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 67 ரன்களுடன் டுபிளெஸிஸும் 15 ரன்களுடன் தாகுரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டுபிளெஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை 80 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது. 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 20, 17 ரன்களை சென்னை எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
7-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனை விவரங்கள்:

* சென்னை சூப்பர் கிங்ஸ், டி20 கிரிக்கெட்டில் 9-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கிறது.
இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்
2008: ஐபிஎல்
2010: ஐபிஎல்
2010: சாம்பியன்ஸ் லீக்
2011: ஐபிஎல்
2012: ஐபிஎல்
2013: ஐபிஎல்
2014: சாம்பியன்ஸ் லீக்
2015: ஐபிஎல்
2018: ஐபிஎல்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிகமுறை பங்கேற்ற அணிகள்
சென்னை - 6 (2 வெற்றி)
மும்பை - 4 (3 வெற்றி)
பெங்களூர் - 3 ( 0 வெற்றி)
கொல்கத்தா - 2 (2 வெற்றி)
தில்லி - 1 (1 வெற்றி)
பஞ்சாப் - 1 (0 வெற்றி)
ராஜஸ்தான் - 1 (1 வெற்றி)
புணே - 1 (0 வெற்றி)
ஹைதராபாத் - 1 (1 வெற்றி)
தில்லி - 0

* 9 முறை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி, 7-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கிறது. 11 முறை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, 8-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ளார். 2017-ல் மட்டும் புணே அணிக்காக இறுதிச்சுற்றில் பங்கேற்றார். மற்ற அனைத்து வருடங்களிலும் சென்னை அணிக்காக இறுதிச்சுற்றில் பங்கேற்றார்.

* தோனி, ரெய்னா ஆகிய இருவருமே 20-வது முறையாக ஐபிஎல் பிளேஆஃப்/அரையிறுதியில் பங்கேற்றுள்ளார்கள். சென்னை அணிக்காக இருவரும் எல்லா வருடங்களிலும் பிளேஆஃப்-பில் விளையாடியுள்ளார்கள். ஆனால் 2016-ல் புணே அணிக்காக தோனி விளையாடியபோதும் 2017-ல் குஜராத் அணிக்காக ரெய்னா விளையாடியபோதும் பிளேஆஃப்-பில் விளையாடமுடியாமல் போனது.
* இந்த வருட புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 2-ம் இடத்தைப் பிடித்தது. இதுபோல இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிகள், ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்றுள்ளன (2011, 2012, 2013, 2014, 2015). ஆனால், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற அணிகள் இருமுறை மட்டுமே (2008, 2017) சாம்பியன் ஆகியுள்ளன. இந்த அதிர்ஷ்டம், சென்னை அணிக்கு இந்த வருடம் உதவுமா?

ஐபிஎல் இறுதிச்சுற்றில் சென்னை
2008 - தோல்வி
2010 - வெற்றி
2011 - வெற்றி
2012 - தோல்வி
2013 - தோல்வி
2015 - தோல்வி
2018 - ?
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
ஒவ்வொரு முறையும் புதிய ஆட்ட நாயகனை உருவாக்கும் சிஎஸ்கே!


ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களை
குவித்தார்.

4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 67 ரன்களுடன் டுபிளெஸிஸும் 15 ரன்களுடன் தாகுரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டுபிளெஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை 80 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது. 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 20, 17 ரன்களை சென்னை எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இதுவரை இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இதுவரை பங்களிப்பு செய்யாத டுபிளெஸிஸ் நேற்று கடைசிவரை விளையாடி சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உதவினார். இந்த வருடம் ஆட்ட நாயகன் விருது பெரும் 8-வது சிஎஸ்கே வீரர் இவர். வேறு எந்த அணியிலும் இந்தளவுக்கு பலர் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்ததில்லை.

ஐபிஎல் 2018 - ஆட்ட நாயகன் விருது பெற்ற சிஎஸ்கே வீரர்கள்
ராயுடு
வாட்சன்
பில்லிங்ஸ்
பிராவோ
தோனி
ஜடேஜா
இங்கிடி
டு பிளெஸ்ஸிஸ்

ஐபிஎல் 2018 - ஒவ்வொரு அணியில் ஆட்ட நாயகன் விருது பெற்றவர்களின் எண்ணிக்கை
8 - சென்னை
5 - தில்லி
5 - மும்பை
4 - பஞ்சாப்
4 - கொல்கத்தா
4 - ராஜஸ்தான்
4 - ஹைதராபாத்
3 - பெங்களூர்
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
ஐபிஎல் 2018 இறுதிப் போட்டி- சென்னை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு - ஹர்பஜன் சிங் இல்லை

1527432508267.png
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் மாலை 6.30 மணிக்கு சுண்டப்பட்டது. டோனி டாஸ் சுண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ‘டெய்ல்’ என அழைத்தார்.

ஆனால் ‘ஹெட்’ விழ டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கலீல், சகா நீக்கப்பட்டு சந்தீப் மற்றும் கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளனர்.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தவான், 2. கேன் வில்லியம்சன், 3. ஷாகிப் அல் ஹசன், 4. யூசுப் பதான், 5. தீபக் ஹூடா, 6. கோஸ்வாமி, 7. பிராத்வைட், 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. சித்தார்த் கவுல், 11. சந்தீப் சர்மா


 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

1527432675197.png

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 10 சீசன் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற இரண்டு முறை சென்னை அணிக்கு, ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணி முதல் பிளே-ஆப் போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இது சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது ஏழாவது முறையகும். இதுவரை ஐபிஎல்லில் 9 முறை விளையாடியுள்ள சிஎஸ்கே இரண்டு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள இறுதிப் போட்டிகள் குறித்து காணலாம்:

முதல் சீசன் (2008):

2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அரையிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் யூசூப் பதான் 39 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் உட்பட 56 ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பாலாஜி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்னே பவுண்டரி அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது.


2008 சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்

2009-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.


மூன்றாவது சீசன் (2010):

மூன்றாவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று முடிவில் நான்கு அணிகள் 14 புள்ளிகளை எடுத்திருந்தன. ஆனால் பெங்களூரு அணியும், சென்னை அணியும் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறின. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன.

சென்னை அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எளிதாக வென்று இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய சென்னை அணி, மும்பை அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து விளையாடிய மும்பை அணியால் 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.


2010 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்

நான்காவது சீசன் (2011):

4-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி பெங்களூரை வென்று நேரடியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி மீண்டும் பெங்களூரு அணியைச் சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முரளி விஜய் மற்றும் மைக் ஹசியின் சிறப்பான ஆட்டத்தால் 205 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 52 பந்தில் 95 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.


2011 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐந்தாவது சீசன் (2012):

5-வது சீசன் தொடரில் லீக் சுற்றில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் தலா 17 புள்ளிகளை எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை நான்காவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. மும்பை, டெல்லி, கொல்கத்தா அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய மற்ற மூன்று அணிகளாகும்.

பிளே-ஆப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. பிளே-ஆப் குவாலிபையர்-2 சுற்றில் டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே இறுதிப் போட்டியில் கொல்கத்தாவைச் சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் ஹாட்ரிக் சாதனை படைத்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கு 191 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது. சென்னை அணி தரப்பில் ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் 2 ரன்களில் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான பிஸ்லா 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். காலிஸ் 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.

இறுதி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்து வீச மனோஜ் திவாரி இரண்டு பவுண்டரிகளை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற உதவினார்.


2012 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆறாவது சீசன் (2013):

இந்த சீசனில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. மும்பை , ராஜஸ்தான், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.

முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் மும்பை அணி இராண்டாவது குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்று, மீண்டும் சிஎஸ்கே அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்களை குவித்தது. சென்னை அணியில் தோனியைத் தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 20 ஓவர்களில் சென்னை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் சென்னை அணி தொடர்ந்து இரு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தது.


2013 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

2014-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.


எட்டாவது சீசன் (2015):

இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தோடு குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை அணி. மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணியிடம் 25 வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது. இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்மித் தவிர சென்னை அணியில் யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸால் 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டாவது முறையாக மும்பை அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை தவறவிட்டது சென்னை அணி.


2015 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

அடுத்த இரு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டதால், சென்னை அணி பங்குபெறவில்லை.


11-வது சீசன் (2018):

இதையடுத்து இந்தாண்டு மீண்டும் களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுதவிர ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

முதல் பிளே-ஆப் போட்டியில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இதுவரை விளையாடிய ஆறு இறுதிப் போட்டிகளில் சென்னை அணி நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அதிக முறை இறுதிப் போட்டியில் தோற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ஏற்கனவே மூன்று முறை தோற்கடித்துள்ளது. இதற்கு ஐதராபாத் பதிலடி கொடுக்குமா அல்லது சென்னை அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்பது நாளை தெரிந்துவிடும்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: ஐதராபாத் 6 ஓவரில் 42/1

1527433344097.png

11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 6 ரன்கள் கிடைத்தது.

இரண்டாவது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 2 ஒவர் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்தது.

3-வது ஓவரை மீண்டும் சஹார் வீசீனார். அந்த ஓவரில் அவர் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் வில்லியம்சன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது.

ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்துள்ளது. தவான் 18 ரன்களுடனும், வில்லியம்சன் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்சுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

1527436200311.png


11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். 2-வது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார்.4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது. ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. ஏழாவது ஓவரை கரண் சர்மா வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணியினர் 9 ரன்கள் எடுத்தனர். 8-வது ஓவரை வீசிய பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

9-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஷகிப்-அல்-ஹசன் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த ஓவரில் ஜடேஜா 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.10-வது ஓவரில் சஹார் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். சஹார் 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது.

11-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஒவரில் ஐதராபாத் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. 12-வது ஓவரை பிராவோ வீசினார். ஐதராபாத் அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 100-ஐ எட்டியது. அந்த ஓவரில் பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 13-வது ஓவரை கரண் சர்மா வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சன் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார். 13-வது ஓவரில் ஐதராபாத் அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது.16-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன், ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். அவர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். 17-வது ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அதன்பின் கார்லோஸ் பிரத்வெய்ட் இறங்கினார். 18-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. பிராவோ 4 ஓவர் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரத்வெய்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். யூசுப் பதான் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.