ஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை

1524724065772.png

இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளரான் உமேஷ் யாதவ் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் உமேஷ் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவர் சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.இந்த விக்கெட் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனைப்படைத்தார். இதுவரை 4 இந்திய வீரர்கள் இந்த சாதனைப்படைத்துள்ளனர். புவனேஷ்வர் குமார், ஆஷிஸ் நேஹ்ரா, வினய் குமார், ஜாகீர் கானுக்கு அடுத்து இந்த சாதனையைப்படைத்த ஐந்தாவது இந்தியர் உமேஷ் யாதவ் ஆவார்.ஐபிஎல் 2018 சீசனில் உமேஷ் யாதவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் இதுவரை யாதவ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
119 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் சுருண்டது மும்பை: பேட்ஸ்மேன்கள் மீது ரோகித் சர்மா சாடல்

1524724411524.png

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 118 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த எளிய இலக்கை கூட அதுவும் சொந்த மண்ணில் எட்ட முடியாமல் மும்பை அணி 18.5 ஓவர்களில் 87 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் (34 ரன்), குணால் பாண்ட்யா (24 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் 120-க்கும் குறைவாக ரன்கள் எடுத்து இதில் வெற்றி பெற்ற 2-வது அணி ஐதராபாத் ஆகும். ஏற்கனவே 2009-ம் ஆண்டு சென்னை அணி பஞ்சாப்புக்கு எதிராக 117 ரன்களை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

5-வது தோல்விக்கு பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்த தோல்விக்காக எங்களை நாங்களே தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும். 119 ரன்கள் இலக்கு என்பதை எந்த மைதானத்தில் என்றாலும் எடுத்திருக்க வேண்டும். எங்களது பந்து வீச்சு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒரு முறை சொதப்பி விட்டனர். நான் உள்பட சில வீரர்களின் ஷாட் தேர்வு மோசமாக இருந்தது.’ என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்

1524724486910.png

ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூர் அணி டிவில்லியர்ஸ் - டி காக் ஜோடியின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் தோனி, அம்பதி ராயுடு ஜோடியின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.

இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்த தொடரில் தாமதமாக பந்து வீசுவது பெங்களூர் அணிக்கு இது முதல் முறை. எனவே அணி கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவித்தனர். #VIVOIPL
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
ஐபிஎல் போட்டியில் ராயுடு, தோனியின் அதிரடியில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை அணி

1524724713842.png

ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். கோலி விரைவில் அவுட்டானார்.அந்த அணியின் டிவில்லியர்ஸ் - டி காக் ஜோடி சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டது. சிறப்பாக விளையாடிய இரண்டு பேட்ஸ்மேன்களும் அரைசதம் கடந்தனர். டி காக் 37 பந்தில் 53 ரன்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. அவரைத்தொடர்ந்து டி வில்லியர்ஸ் 30 பந்தில் 68 ரன்கள் (2 பவுண்டரி, 8 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

சென்னை அணி சார்பில் சர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், அம்பதி ராயுடுவும் இறங்கினர். வாட்சன் முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய ரெய்னா, சாம் பில்லிங்ஸ், ஜடேஜா ஆகியோர் விரைவில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அதன்பின் களமிறங்கிய கேப்டன் தோனி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் பெங்களூர் அணியினரின் பந்து வீச்சை சிக்சர், பவுண்டரியாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். ராயுடு 82 ரன்களில் அவுட்டானார். இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பெங்களூர் அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், நெகி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.