ஐம்பதுகளில் ஆரம்பமாகும் தம்பதியின் உண்&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஐம்பதுகளில் ஆரம்பமாகும் தம்பதியின் உண்மையான காதல் வாழ்க்கை


நீங்கள் மற்றவருக்காக வாழும் வாழ்க்கை உங்கள் திருமணத்தில் ஆரம்பித்து, உங்கள் குழந்தைகளின் திருமணத்தில் முடிவடைகிறது. எப்படியும் இந்த பொறுப்பை எல்லாம் முடிப்பதற்கு ஐம்பது, அறுவது வயது முடிந்துவிடும். ஐம்பதுகளில் தான் ஒரு தம்பதியின் உண்மையான காதல் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

உடல் உறவுகள் இன்றி, மனதின் இணைப்பு மட்டுமே வலுவாய் இருக்கும் தருணம் அது. முழுக்க, முழுக்க ஒருவருக்கு ஒருவர் என்பதை நீங்கள் உணர்ந்து வாழும் நேரமும் இது தான். ஐம்பதிகளில் வரும் காதலில் சகிப்புத்தன்மையும், வாழ்க்கையின் முதிர்ச்சியும், முழு அறிதலும் இருக்கும். எந்த வகையான குழப்பமாக இருந்தாலும் அதற்கான தீர்வு, ஐம்பதுகளில் வாழும் தம்பதியிடம் இருக்கும்.. கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பார்கள்.

ஆனால், உண்மையில் ஐம்பதுகளில் தான் நீங்கள் உறுதியான துணையாய் அறிவீர்கள். முழுக்க, முழுக்க உங்களுக்கு அவர், அவருக்கு நீங்கள் என்று நீங்கள் வாழும் நாட்கள் அவை. சிலர் பேரன் பேத்தி எடுத்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள், சிலர் பேரன், பேதியை எதிர்பார்த்து இருப்பர்கள். குழந்தையை வளர்ப்பதோடு, பேரனை வளர்ப்பதில் இருக்கும் அந்த இன்பமும், மகிழ்ச்சியும் கடலை விடவும் பெரியது.

அனைத்து பொறுப்புகளையும் முடித்துவிட்டு ஐம்பது, அறுவதுகளில் நீங்கள் வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பிக்கும் அந்த நேரம் தான் உண்மையான் ஓய்வு. இந்த காலத்தில் ஐம்பது, அறுவதுகள் நோய்களுக்கான வயதாகிவிட்டது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த வகையில் நோயற்ற ஐம்பது, அறுவதுகள் தான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான பொன்னான நேரம்.

இந்த காலகட்டத்தில் தான் தம்பதிக்குள் ஒன்றுமையும், பாசமும் அதிகரிக்கும். திருமணம் நடந்ததில் இருந்து இந்த காலகட்டம் வரை மனைவி தனக்கு செய்த பணிவிடைகளையும், அர்ப்பணிப்பையும், சகிப்புத்தன்மையையும் நினைத்து ஐம்பதுகளில் மனைவிக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், அன்பும் அதிகரிக்கும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: ஐம்பதுகளில் ஆரம்பமாகும் தம்பதியின் உண&#302

சரியான கருத்து.......
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.