ஐஸ் வாட்டரா குடிக்கறிங்க? இதை படிச்சுட்ட

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=2]ஐஸ் வாட்டரா குடிக்கறிங்க? இதை படிச்சுட்டு குடிங்க![/h]உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ குளிர்பானமோ
குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ச ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும் கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது. இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான்.

இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால் அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் தண்ணீரை தொடவே கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

நெஞ்செரிச்சல், உயர் ரத்தஅழுத்தம், சரும பாதிப்பு,பக்கவாதம்,வயிற்றுவலி,மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.


 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Re: ஐஸ் வாட்டரா குடிக்கறிங்க? இதை படிச்சுட்&#2

Very much essential information! thank you!
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#4
Re: ஐஸ் வாட்டரா குடிக்கறிங்க? இதை படிச்சுட்&#2

வீட்ல எப்போதுமே சாப்பிட்ட உடன் குளிர்ந்த தண்ணி குடிக்க அனுமதிக்கமாட்டேன். நன்றி லக்ஷ்மி :)

All Rounder Kuraichukonga :rolleyes:
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#5
Re: ஐஸ் வாட்டரா குடிக்கறிங்க? இதை படிச்சுட்&#2

Essential Information.Thank you.
 

kavithasankar

Citizen's of Penmai
Joined
Feb 2, 2012
Messages
508
Likes
350
Location
kanchipuram
#6
Re: ஐஸ் வாட்டரா குடிக்கறிங்க? இதை படிச்சுட்&#2

very important news for adamant peoples those are taking only ice water.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,988
Location
Atlanta, U.S
#7
Re: ஐஸ் வாட்டரா குடிக்கறிங்க? இதை படிச்சுட்&#2

பயனுள்ள பதிவு..... நன்றி...
நல்லவேளை எனக்கு இந்த பழக்கமில்லை...!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.