ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் வியக்கத்தகு &#2950

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் வியக்கத்தகு ஆரோக்கிய நன்மைகள்!

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது என 1930-களிலிருந்தே கருதப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளிலேயே அவற்றின் உடல்நல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தில் நிறைய சுவாரசியமான மற்றும் முக்கியமான உடல்நல பயன்கள் உள்ளன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் இது இயல்பாக நமது உடலில் சுரப்பது கிடையாது. எனவே நாம் உட்கொள்ளும் சரியான ஊட்டச்சத்துகளின் வழியாக மட்டுமே நாம் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் பயனை பெற இயலும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நமது மூளைக்கும், இதயத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இது பிரசவக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது மற்றும் மாரடைப்பு, ஒற்றை தலைவலி, மன இறுக்கம் போன்றவற்றில் இருந்தும் நம்மை காத்திட உதவிகிறது. மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் பற்றி அறிந்திட தொடர்ந்து படியுங்கள்...

பிரசவக்காலப் பிரச்சனைகளை குறைக்கிறது ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் மிக முக்கியமான பயன்களில் ஒன்று, இது பெண்களுக்கு ஏற்படும் பிரசவக்கால பிரச்சனைகளை வெகுவாக குறைக்கிறது.

குறைமாத பிரசவம் போன்ற காலங்களில் பெண்களுக்கு முக்கியமான தேவைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலமும் கூட ஒன்றாகும். எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கும் இது நல்ல பயனளிக்கிறது. கரு மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நல்ல ஆரோக்கியம் அளிக்கிறது.

அறிவாற்றல் மற்றும் ஞாபகசக்தி ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் மூலம் நமது அறிவாற்றலும், நினைவாற்றலும் மேன்மையடைகிறது. ஓர் ஆராய்ச்சியில் அறிஞர்கள் கண்டறிந்துள்ளது என்னவெனில் அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தை உட்கொண்டு வந்தால் அறிவாற்றல் மேம்படும் என்பதாகும்.

மனநிலை மேம்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் முக்கிய பயன்களில் ஒன்றாக கருதப்படுவது, இது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் குறைப்பாடு வரும் போது மூளை கோளாறுகள் ஏற்படுகின்றன என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் கூடுதல் துணையால் நரம்பியல் அம்ற்றும் மனநிலை கோளாறுகளில் இருந்து மீண்டு வர இயலும்.

மூளையைப் பாதுகாக்கிறது ஜங்க் ஃபுட் மூலம் மூளையில் ஏற்படும் தொய்வுகளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சரி செய்கிறது. இது மட்டுமின்றி தீய கொழுப்பு நிறைந்த உணவுகள் மூலம் வரும் பாதிப்புகளை தவிர்க்கவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உதவுகிறது.

குழந்தைகளின் நடத்தை மேம்பட ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள செய்தி என்னவெனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது குழந்தைகளின் நினைவாற்றலையும், கற்கும் திறனையும் அதிகரிக்க பயனளிக்கிறது மற்றும் அவர்களது நடத்தையை மேம்படுத்தவும் உதவுகிறது.

தனிமை மற்றும் மன சோர்வு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நமது தனிமை உணர்வுகளை போக்கவும், மன சோர்வு மற்றும் அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

ஒற்றை தலைவலி அன்றாட வாழ்க்கையில் ஒற்றை தலைவலி என்பது நம்மோடு சேர்ந்து தினமும் பயணிக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் ஓர் சிறந்த பயன் என்னவெனில் இது ஒற்றை தலைவலியை குறைக்க உதவுகிறது.

மாரடைப்பில் இருந்து காக்கிறது ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நம் உடலில் இருக்கும் தீய கொழுப்பு சக்திகளை குறைக்க உதவுகிறது. இதனால் நம்மை இதயம் சார்ந்த நோய்களிடம் இருந்து தள்ளி இருக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலம் பெரும் அளவில் உதவி செய்கிறது.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் வியக்கத்தகு &a

its really useful.............
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.