ஒருவேள இதுக்கு பேருதான் கைவைத்தியமோ?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஒருவேள இதுக்கு பேருதான் கைவைத்தியமோ???நம் கையே நமக்கு உதவி என்பார்கள். ஆனால், நம் கையே நமது மருத்துவர் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது கைகளில் உள்ள மைய்ய புள்ளிகளை கொண்டு உடலின் எந்த பாகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் சரி செய்ய முடியும் என்பார்கள்.

உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன சொல்கிறது என்று தெரியுமா?

அதே போல நமது உள்ளங்கை மற்றும் கைவிரல்களை கொண்டு பயிற்சி செய்வதாலும் கூட தலை முதல் கால் வரை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண முடியும் என்று கூறுகிறார்கள். இது ஒன்றும் கடினமான செயல் அல்ல. மிக எளிய முறையில் மசாஜ் செய்தலே போதுமானது...


கட்டைவிரல் : தலைவலி, மன அழுத்தம்
நமது கட்டைவிரல் மண்ணீரல், வயிறு மற்றும் உணர்வுகளோடு தொடர்புடையது. தலைவலி, மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படும் போது, உங்கள் கட்டைவிரலை பிடித்து, கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மிருதுவாக மசாஜ் போன்று செய்து வந்தால் மன அழுத்தம், தலை வலி குறையும்.


ஆள்காட்டி விரல் :
தசைவலி, விரக்தி நமது ஆள்காட்டி விரல் அச்சம், குழப்பம், சிறுநீரகம் போன்றவற்றுடன் தொடர்புடையது, ஆள்காட்டி விரலுக்கு மசாஜ் செய்வதால் சிறுநீரக செயல்பாடு கோளாறுகள் குறையும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் தசைவலி, முதுகுவலி கை கால் வலி போன்றவற்றுக்கும் இது தீர்வு தருகிறது.


நடுவிரல் : மயக்கம், சோர்வு, கோவம்
உங்கள் நடுவிரலுக்கு மிருதுவாக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் கல்லீரல் பிரச்சனை, இரத்த ஓட்டம் போன்றவை சரி ஆகின்றன. மேலும் இது கோவத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் இந்த பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயனளிக்கிறது.


மோதிர விரல் : செரிமானம், எதிர்மறை எண்ணங்கள்
மோதிர விரலுக்கு மசாஜ் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள், மனக் குழப்பங்கள், செரிமான கோளாறுகள் போன்றவை குறைகின்றன.


சற்று அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் சுவாச கோளாறுகள் மற்றும் நெஞ்சு வலிக்கும் கூட நிவாரணமாக அமைகிறது இந்த பயிற்சி. இந்த பயிற்சியை செய்யும் போது நீங்கள் அமைதியான சூழலில், மூச்சை நன்கு இழுத்து விட வேண்டியது அவசியம்.

சுண்டுவிரல்: பதட்டம், தன்னம்பிக்கை
மிகவும் உணர்ச்சிமிக்க நபர்களாக இருப்பவர்கள் சுண்டு விரலுக்கு மசாஜ் செய்வதால் அச்ச உணர்வுகளில் இருந்து வெளிவர முடியும். மற்றும் இது சீரான, தெளிவான எண்ணங்கள் பிறக்கவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறதாம்.


உள்ளங்கை: குமட்டல், மலமியக்கம் உள்ளங்கையை மிருதுவாக
சுழற்சி முறையில் மசாஜ் செய்வதாலும், இந்த பயிற்சி செய்யும் போது நன்கு மூச்சை இழுத்து விடுவதாலும் குமட்டல், மலமியக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண முடியுமாம்.


கைகள்: வலிமை, இரத்த ஓட்டம் இரு கைகளின் உள்ளங்கை
இணையும் படி ஒரு சேர்த்து அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இது குடல் மற்றும் சிறுநீரக செயல்திறனையும் ஊக்குவிக்கின்றன. மற்றும் உங்கள் உடல் திறனை அதிகரிக்க இது ஒரு சிறந்த பயிற்சி என்றும் கூறப்படுகிறது.
 
Last edited:

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#3
Nice sharing lakshmi, irukkalam, namma munorgal ellame oru karanathoda than per vaichirukkanga pola.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.