ஒரு ஆணின் கல்யாண கனவு !!

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
எப்படிங்க இருக்கணும் உங்களோட marriage life?
இப்படி இருந்தா? கொஞ்சம் கற்பனை பண்ணி தான் பாருங்களேன்!!!

உங்களோட 25 / 26 வையசுல திடீர்னு parents உங்களுக்கு ஒரு பொண்ண
பார்த்தாச்சு அப்படின்னு சொன்னதும்,மனசுக்குள்ள 1000 Butterfly பறக்குமே அத எப்படி கொண்டாடனு அப்படின்னுயோசிச்சிகிட்டே இருக்கற சமயம்,Friends கு எல்லாம் உடனே Treat குடுக்க ஒரு நல்ல Resturant போய்டு Happyயா enjoy பண்ற டைம்ல,உங்க friend ஒருத்தேன், "மச்சா பொண்ணு நல்ல இருக்கா! இல்லையானுதெரியாமலயே treat அஹ!!" ன்னு கேட்டதும்,உடனே ஒரு பயம், அவ எப்படி இருப்பாளோன்னு.......

சரி ன்னு, ஒரு நாள் அம்மா, அப்பா, அக்கா, மாமா இன்னு எல்லாரும் அந்தபொண்ண பார்க்க போவிங்க,கண்டிப்பா அந்த பயம் இருக்கும்.... ஆனாலும் அதுக்குன்னு புதுசா ஒருshirt வாங்கி அத போட்டுட்டு,குழந்தைங்க ஏதும் செஞ்சா திட்ற நீங்க அன்னைக்கு மட்டும் அவங்களோட
விளையாடிகிட்டே பொண்ண பார்க்க ட்ரை பண்ணுவிங்க பாருங்க?அப்ப வழியும் ஒரு water falls .... இத கண்டிப்பா அந்த பொண்ணு பார்திருப்பா......

சரி ஒரு வழியா பெரியவங்க எல்லாம் சேர்ந்து பொண்ண வர சொல்வாங்க....நீங்களும் coffee தட்ட பார்த்துகிட்டே மேல பார்ப்பீங்க அவ்ளோதான் ......ஒரே ஷாக், "நமக்கு இவ்வளவு அழகான பொண்ணான்னு "....அதுக்கப்பறம் பஜ்ஜி எல்லாம் சாப்டு கிளம்பிடுவிங்க....

அப்புறம் எங்க உங்களுக்கு தூக்கம்..... ஒரே நெனப்பு தான். போன் பண்ணலாம்னு யோசிப்பிங்க ஆனா number இருக்காது....அந்த சமயம் உங்களுக்கு, அந்த பொண்ணு கிட்ட இருந்து phone வருது....நீங்களும் phone attend பண்ணுவிங்க..... திட்டிக்கிட்டே "இந்த நேரத்துல்லஎவன்டா disturb பண்றான்னு"..அப்ப கேட்கும் ஒரே female voice அவங்க பேர சொல்லிகிட்டே "நான்தான் xxxxபேசுறேன்" அப்படின்னு ஒரு soft voice ல....அவ்ளோதான் தான் நீங்க... தல கால் புரியாது......

ok இனி daily உங்க call காக அவங்க, அவங்க call காக நீங்க wait பண்ற சுகம்
இருக்கு பாருங்க... அத நீங்க எப்படிங்க சொல்லுவிங்க??????

அந்த கல்யாண நாளுக்காக wait பண்ற சுகுமும், இதுக்கு நடுவுல dress , jewlsனு ஏகப்பட்ட ஷாப்பிங்.....
But wedding கார்டு மட்டும் உங்களோட selection .....

சரிங்க finally கல்யாண நாள், எல்லா relatives , friends , இன்னு உங்கள ஓட்டிகிட்டு கலாட்டா பண்றதும் நைட் ஓடிடும் reception ...
காலைல நல்ல தூக்கத்துல எழுப்பி குளிக்க சொல்லி, நெருப்புக்கு முன்னால உட்கார சொல்லி நமக்கு தெரியாத விசயத்த(மந்திரம்) சொல்ல சொலுவாங்க...சரின்னு அதயும் செய்வோம்... அப்போ அந்த பொண்ணு வந்து பக்கத்துலஉட்காந்ததும் உலகத்துல நீங்க தான் பெரிய ஆளு மாத்ரி ஒரு நெனப்பு...

அப்புறம் நீங்க தாலிய கட்டுவிங்க.... அந்த second அந்த பொண்ணு கண்லஇருந்து வரும் பாருங்க ஒரு சொட்டு கண்ணீர், என்னங்க அர்த்தம் அதுக்கு?இவ்வளவு நேரம் comedy யா இருந்த story இனி தான் serious .....

அந்த கண்ணீற்கு அர்த்தம், "இந்த second ல இருந்து நான் எல்லாத்தியும்விட்டுட்டு, உன்ன மட்டுமே நம்பி வரேன். இப்ப பிடிச்சிருக்கிற என் கையேஎப்பவும் விட்டுட மாட்டீங்களேன்னு கேட்பா"....
அத நீங்களும் புரிஞ்சிகிட்டு "விடமாட்டேன்னு" அவளோட கைய இறுக்கிபிடிச்சிப்பீங்க பாருங்க? அங்க ஆரம்பிக்கிது உங்களோட சந்தோஷம்...

யாரோ ஒரு பொண்ணா இருந்தவங்க இப்போ உங்களோட மனைவி.... நல்லா இருக்கு இல்ல?
ஆமாங்க first day office கு போகும் போது , "ஏங்க சிக்கிரம் வந்துடுங்க"அப்படின்னு ஒரு குரல். யாரும் இல்ல உங்க wife தான் புதுசா இருக்கு இல்ல?

அதுக்காகவே எப்பவும் 11 மணிக்கு வர நீங்க daily 6 மணிக்கெல்லாம் வர
ஆரம்பிப்பீங்க ... அதுவும் நல்லா தான் இருக்கும்....

பாவம் உங்களுக்காக சமைக்கிற அவங்களுக்கு help பண்ணிகிட்டே ஒரு சின்ன விளையாட்டு... அவ்ளவுதான் எல்லாம் veggs .... ஸ்பாயில் இப்போ ரெண்டு பேரும் அத கிளீன் தான் பண்ணனும் no சமையல்.... order பிரோம் resturant ....
same time ல அவங்க அம்மா call பண்ணுவாங்க, உடனே ஒரு பொய் சமைச்சு சாப்பிட்டாச்சின்னு....

நல்லா இருக்கு இல்ல? கொஞ்சம் நேரம் relax ஆ TV அதுவும் அவங்க தோள் மேல கை...போட்டுக்கிட்டே .........
after few months .. getting a news.... that u gonna be dad.....

வேற என்னங்க வேணும்... இனி அவங்க கால் கூட தரைல படமா பார்த்துக்கணும்னு பார்த்துபீங்க .... அவங்கள evening beech ku walking கூட்டிட்டு போறது,
புடிச்சதெல்லாம் வாங்கி குடுக்கறது.... அவங்க tired ஆ இருந்தா உங்க தோள்ள
சாய்ச்சி தூங்க வைக்கறதுன்னு ரொம்ப நல்லா இருக்கும்...

கால் வலி வந்தா கால புடிச்சு தூங்க வைக்கறது, தூங்கும் போது அவங்க கை
உங்க மேல இருந்தா நீங்க திரும்பி படுக்கணும் போல இருக்கும் ஆனாலும்,
எங்க அவங்க தூக்கம் களஞ்சிடோமொனு அப்படியே பொறுத்துகிட்டு இருக்கிறதும்.........
ஒரு சுகம் இருக்குமுங்க....

திடிருன்னு அவங்க முழிச்சு பார்த்து நீங்க தூங்கலன்னு தெரிஞ்சதும் உங்க நெற்றி மேல ஒரு முத்தம் குடுத்து "தூங்குங்க" ன்னு சொன்னதும்!!!!! அத விட வேற என்னங்க வேணும் உங்களுக்கு?

உங்க குழந்தை பிறக்க போற தருணம், hospital ல tension ஓட என்ன பண்றதுன்னு
தெரியாம இருக்கும் போது உங்க கண்ல இருந்து உங்களுக்கே தெரியாம ஒரு சொட்டு
கண்ணீர் வரும் பாருங்க? அதுக்கு என்னங்க அர்த்தம்?

ஒண்ணும் இல்ல அன்னைக்கு உங்க கல்யாண நாள்ல உங்க wife கைய இறுக்கி
புடிச்சிங்களே அதுக்குதாங்க!!!..

அந்த குழந்தைய பார்த்ததும், தூக்கிட்டு ஒரு முத்தம் கொடுத்து அப்படியே உங்க wife கைய பிடிச்சு கிட்டு அவங்க நெற்றி ல ஒரு முத்தம் கொடுப்பீங்க பாருங்க............அவ்ளோ தான், உங்க மனைவி படும் சந்தோசத்துக்கு அளவே இருக்காது.....

எப்படிங்க இருக்கும் இந்த மாதிரி உங்களோட marriage life இருந்தா?
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#2
இப்படி எல்லாம் இருந்தா ஜிவ்வ்ன்னு பறக்கற மாதிரி தான் இருக்கும்...

ஆனா இப்படி தான் இருக்குமா? தெரியலையே... ஆனா இதுல சிலது நிஜம் என் husband என்னை பொண்ணு பார்க்க வரும் போது கடைல போய் புதுசா சட்டை பேண்ட் எல்லாம் எடுத்தாராம்... டென்ஷனா வேற இருந்துச்சுன்னும் சொன்னார்...
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#4
அது வெறும் கனவு தான்.

பொண்ணுங்க முதல கல்யாணத்துல கண்ணீர் விட மாட்டாங்க(ஒரு சிலர் விதி விலக்கா இருக்கலாம்). அப்படி விட்டாங்கன்னா அதுக்கு அர்த்தம், "நாளையிலிருந்து இந்த மனுஷன் அழுவப்போறது தெரியாம இப்படி சந்தோஷமா இருக்காரே"ன்னு அது ஒரு பரிதாப கண்ணீர் மட்டும் தான் :rolleyes:.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#5
ippidlaam katpanai aankal pannuvaangala enna!!! katpanai ellam penkalthaan...
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#6
ஓ..இப்படி எல்லாம் வேற கற்பனையா???ஆனா பாதி உண்மை தான்...
 

Priyathozhi

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 11, 2011
Messages
453
Likes
635
Location
coimbatore
#7
சூப்பரான வர்ணனைபா ....,

என்னோட கல்யாணத்துல தாலிகட்டப் போற சமயத்துல என்ன நடக்குதுன்னு புரியாத ஒரு மோன நிலையிலைதான் இருந்தேன்பா ..

அவருமே ஒரு பதட்டத்துலதான் இருந்ததா பின்னால சொன்னாரு.........

ஆனா அந்த சமயத்துல போட்டோக்ராபர் பக்கத்துல வந்து

" கார்த்தி மெதுவா பொறுமையா பதட்டப்படமா நிதானமா கட்டு" ன்னு சொன்னார். அவர் சொன்னது காதுல விழுந்தப்ப எனக்கு என்னடா இவர் இப்டி சொல்றாருன்னு தோனுச்சு. ஆனா அதற்கு பிறகும், இப்பவும் யோசிச்சுப்பார்க்கும் போது, அந்த நேரத்திற்குத் தேவைப்படற எவ்வளவு முக்கியமான வார்த்தைகள்னு புரிஞ்சது. ஏன்னா எல்லாருமே ஒரு அவசரத்துல இருப்பாங்க... வாழ்க்கையில் அது எவ்வளவு முக்கியமான நொடி. அந்த நேரத்தில் அந்த இடத்தில் நம்மை சரியாய் வழிநடத்தின வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் .....

அந்த போட்டோக்ராபர் இப்பவரைக்கும் அவர் மேல பிரியமான அண்ணன் போலத்தான் பழகுறார்.
 

babyarasu22

Friends's of Penmai
Joined
Feb 29, 2012
Messages
205
Likes
175
Location
trichy
#8
இந்த விஷயங்களோட இதையும் சேர்த்துக்கோங்க
30 வருடங்களுக்கு முன்பு பொண்ணும்,மாப்பிளையும் நேரில் பார்த்துக் கொள்ள மாட்டங்க.அதனால் கல்யாணம் வரைக்கும் எப்படி இருப்பாங்க என்ற கற்பனையும் டென்ஷனும்இருக்கும்.

பேபி
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
இப்படி எல்லாம் இருந்தா ஜிவ்வ்ன்னு பறக்கற மாதிரி தான் இருக்கும்...

ஆனா இப்படி தான் இருக்குமா? தெரியலையே... ஆனா இதுல சிலது நிஜம் என் husband என்னை பொண்ணு பார்க்க வரும் போது கடைல போய் புதுசா சட்டை பேண்ட் எல்லாம் எடுத்தாராம்... டென்ஷனா வேற இருந்துச்சுன்னும் சொன்னார்...
Oho......appo idhula konjam unmaiyum irukku.......
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.