ஒரு பாட்டி கதை. !

Joined
Aug 8, 2011
Messages
88
Likes
130
Location
Muscat,Oman
#1
[h=6]ஒரு ஊரிலே ஒரு கணவன் மனைவி இருந்தா.
ரெண்டு பெரும் வயல்ல வேல செஞ்சு, பொழச்சிண்டிருந்தாளாம்
அந்த கணவனோட அம்மா வேற ஊரிலே இருந்தாளாம்.

ஒரு நாளைக்கு, அந்த ஆள், "வரியா, நாம ரெண்டு பேரும் போய் எங்கம்மாவ பாத்துட்டு வரலாம்" ன்னு கேட்டானாம்.
அதுக்கு அவ, "எனக்கு நெறைய வேலை இருக்கு" ன்னு பட்டியல் போட்டாளாம். "நீ மாட்டும் காலம்பர சீக்கிரம் கிளம்பி போய், ராத்திரி இருட்டறதுக்குள்ள வந்துடணும்" ன்னு சொன்னாளாம்.

அவனும் "சரி" ன்னுட்டு, தன் நிலத்தில வெளஞ்ச அரிசி கொஞ்சம் எடுத்துண்டு புறப்பட்டானாம்.

போற வழி ரொம்பதூரம். நடுவில ஒரு ஆறு. அதை கஷ்டப்பட்டு தாண்டி, களைச்சி போயி, ஊர் சேந்தான்.

அவன் அம்மா அவனை பாத்து ரொம்ப சந்தோஷப்பட்டு, நல்ல சாப்பாடெல்லாம் பண்ணி போட்டாளாம். அதுல ஒரு ஸ்பெஷல் item கொழக்கட்டை !
அதை அவன் பெண்டாட்டி செய்ததே இல்ல.

"அம்மா, இதுக்கு என்ன பேரு சொல்லு; நான் அவளை பண்ணி தரச்சொல்றேன்" ன்னானாம். அம்மா பேரை சொல்லி குடுத்தாளாம்.
அவனுக்கு, தான் மறந்து போயிடுவோமோன்னு பயம். அதுக்கு அந்த அம்மா, "போற வழி எல்லாம் 'கொழக்கட்டை, கொழக்கட்டை' ன்னு சொல்லிண்டே போ" ன்னு சொல்லி குடுத்தாளாம்.

அவனும் அதே மாதிரி, விடாம சொல்லிண்டே போனானாம்.
வழியில அந்த ஆறு வந்துடுத்து.
அப்ப, எதிர் பக்கத்திலிருந்து ஒரு ஆள், "அத்தரி பச்சா" ன்னு சொல்லிண்டே ஒரே தாவலில் ஆத்தை தாண்டினானாம் !
இவனுக்கு, அந்த "அத்தரி பச்சா" வார்த்தை மனசில பதிஞ்சு போயிடறது.

கொழக்கட்டை பேரை மறந்துட்டு, 'அத்தரி பச்சா' ன்னு சொல்லிண்டே வீட்டுக்கு வரான்.
வீட்டிலே, "அம்மா எப்படி இருக்கா, என்ன சமாசாரம்' ன்னு அவன் பெண்டாட்டி கேக்கறா.
இவன், "எங்கம்மா ஒரு புது பட்சணம் பண்ணி குடுத்தா. நீயும் பண்ணி குடு" ன்னு கேக்கறான்.
பேர் கேட்டா, "அத்தரி பச்சா" ங்கறான்.
அவளுக்கு ஒண்ணும் புரியல்லே.. திரும்ப திரும்ப சொன்னாலும் அவளுக்கு புரியாததாலே, அவளை போட்டு, அடிச்சி துவம்சம் பண்றான் !

அப்போ, எதிர் வீட்டு பாட்டி (என்னாட்டமா - வம்பு) வந்து, என்ன ஆச்சு ன்னு கேக்கறான். இவன் "என் பெண்டாட்டி எனக்கு பிடிச்ச பட்சணம் பண்ண மாட்டேங்கிறா" ன்னு சொல்றான்.
அதுக்கு அந்த பாட்டி, "அதுக்காக இப்படியா அடிப்பா? பாரு, கொழக்கட்டை மாதிரி வீங்கிடுத்து" ன்னு சொல்றா. !
அய்யா, அவனுக்கு பேரு ஞாபகம் வந்துடுத்து !!

"கொழக்கட்டை, கொழக்கட்டை" ன்னு சந்தோஷமா கூவறான்.
அப்புறம் என்ன... அவள் கொழக்கட்டை பண்ணி கொடுக்க, அவன் சாப்பிட்டு, ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்கா !!

ராத்திரி, கொழந்தைகளுக்கு , இந்த கதையை சொல்லி தூங்க வெய்யுங்கோ !![/h]
 

natpudan

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
264
Likes
164
Location
Doha
#2
சூப்பர் - எனக்கு எங்க பாட்டி இந்த கதை தான் எப்பவும் சொல்லுவாங்க.
அந்த இனிய நாட்களின் நினைவுகள் இதைப் படித்தவுடன் ஞாபகம் வந்து விட்டது.
ஒவ்வொரு நாளும் இதே கதையைச் சொன்னாலும் அவ்ளோ அழகா சொல்லுவாங்க பாட்டி.

பகிர்வுக்கும் அந்த நினைவுகளை நிழலாட விட்டதற்கும் நன்றிகள் பல.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.