ஒரு பூவின் ரகசியம் - ORU POOVIN RAGASIYAM by kodiuma

Status
Not open for further replies.

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#1


ஹாய் ஹாய் திரும்பவும் நானே .. ஒரு முழு கதையை கொடுக்கலாம் தான் நினைச்சேன் நண்பர்களே .. ஆனால் முடியவில்லை , அதான் உடனே களத்துல குதிச்சிட்டேன் ..

கதையின் தலைப்பு : ஒரு பூவின் ரகசியம் ..

கதையின் கரு : இப்போதைக்கு ரகசியம் ..

கதையின் ஹீரோ ஹீரோயின் : அதுவும் இப்போதைக்கு ரகசியம் ..

ஆக மொத்தத்தில் எல்லாமே இப்போதைக்கு ரகசியம் தான் மக்கா ..

இந்த கதைக்கு பதிவு வாரம் ஒன்று அல்லது இரண்டு தான் இனி கொடுப்பேன் , ஏனெனில் அடுத்து நிறைய வேலை அணிவகுத்து இருக்கிறது எனக்கு ..

ஆகையால் நண்பர்களே மெதுவா வந்து கொடுத்தாலும் , கதையை உங்களுக்கு பிடித்த விதத்தில் தான் கொடுக்க போகிறேன் ..

இந்த கதை மற்ற கதை போல் சிறிதாக இருக்காது , கொஞ்சம் பெரிய கதையா தான் இருக்கும் ..

சோ நான் பொறுமையா தான் கொடுக்க நினைக்கிறன் மக்களே .. உங்கள் ஊக்கமும் உற்சாகமும் தான் என் பலமே , உங்க கருத்துக்கள் தான் மேலும் என்னை பலப்படுத்த உதவும் ..

ஆகையால் நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் , அது என் தவறுகளை சுட்டி காட்டி , எனக்கு ஊக்கமும் , உற்சாகமும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ..



கடைசியா ஒரு ரகசியம் , இந்த கதைக்கு தலைப்பு தேர்ந்தெடுத்து கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய நமது தோழி @naanathithi uchu விற்கு என் மனமார்ந்த நன்றி பல .. லவ் உ டா ..

நாளை முதல் பதிவோடு வருகிறேன் நண்பர்களே ..

அன்புடன் ,
கோடிஉமா ...
 

Attachments

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#2

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#3



அத்தியாயம் – 1

இடம் : பெங்களூர் , பெண்கள் விடுதி .

நேரம் : நள்ளிரவு பன்னிரெண்டு மணி .

அந்த விடுதியில் ஒரு அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது . அந்த அறையில் பல்லூன் வெடிக்கும் சத்தம் , பெண்களின் ஆராவாரம் காதை பிளந்தது .

இதனால் மற்ற அறை மாணவிகள் , விடுதியை நடத்தும் வார்டன் என்று யாராலும் தூங்கவும் முடியாமல் , அவர்களை அதட்டவும் முடியாமல் சலித்தபடி இருந்தனர் . ஆனால் அங்கே புதிதாக விடுதியில் சேர்ந்த ஒரு மாணவியால் , அப்படி இருக்க முடியவில்லை .

அவள் நேராக அந்த அறை கதவை தட்டி , கதவு திறப்பதற்காக காத்து நின்றாள் . யாரும் கதவை திறப்பதாக தெரியவில்லை எனவும் , அவள் இன்னும் தன் பலம் கொண்டு அந்த அறை கதவை ஓங்கி தட்டினாள் .

சிறிது நேரத்தில் அங்கே கதவை திறந்த ஒரு பெண் , அவளை பார்த்து என்னவென்று தன் புருவம் உயர்த்தி வினவினாள் .

“ நீங்க கொஞ்சம் சத்தத்தை குறைச்சு கொண்டாடுங்க , இப்படி சத்தம் போட்டா , எல்லோரோட தூக்கமும் கெடுது “ என்று கூறிய பெண்ணை பார்த்து சிரித்தாள் அந்த பெண் .

“ இந்த விடுதிக்கு புதுசா வந்து இருக்கியா “ என்று கேட்டாள் அப்பெண் .

“ ஆமாம் ஏன் கேட்குறீங்க “ என்றாள் .

“ அதான் உனக்கு ரூல்ஸ் தெரியல , இவ்வளவு சத்தம் கொடுக்குறோம் யாராவது எங்களை வந்து கேட்டாங்களா , வார்டன் தான் வந்தாங்களா , இல்லையே . இதுலையே நீ புரிஞ்சு இருக்கணும் , ஆமா உன் பெயர் என்ன , எந்த காலேஜ் நீ “ என்று வினவினாள் .

“ என் பெயர் ஸ்ரீஜா , பைனல் இயர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் . பக்கத்துல இருக்கிற v.r.s . இன்ஜினியரிங் காலேஜ் ல படிக்கிறேன் . நீங்க என்ன படிக்குறீங்களா , இல்லை வேலை பார்க்குறீங்களா “ என்று அப்பெண்ணிடம் தன்னை பற்றி கூறி பதிலுக்கு அப்பெண்ணை பற்றி கேட்டாள் ஸ்ரீஜா .

“ ம்ம்.. அதை நீயே உள்ள வந்து தெரிஞ்சிக்கோ “ என்று அப்பெண் அவளை உள்ளே இழுத்துக் கொண்டு கதவை சாற்றினாள் .

அங்கே cd பிளேயரில் ஒலித்த பாட்டை அமர்த்தி விட்டவள் , பாடல் ஒலி நின்ற சத்தத்தை கேட்டு அங்கே இருந்த அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர் .

“ ஹலோ லேடீஸ் , இந்த பொண்ணு நம்ம விடுதிக்கு புதுசா வந்து இருக்கா , பெயர் ஸ்ரீஜா “ என்று கூறி அவளை பற்றிய தகவல்களை கூறினாள் .

“ இப்போ நம்ம ஸ்ரீஜாக்கு நான் யார் , என்ன வேலை பார்க்குறேன் எல்லாம் தெரியனுமா , கொஞ்சம் எடுத்து சொல்லுங்க “ என்று கூறிவிட்டு அங்கே இருந்த டேபிளில் ஏறி , ஒரு காலை மட்டும் டேபிள் மேல் வைத்துக் கொண்டு , மற்றொரு காலை ஆட்டிக் கொண்டே , அவர்களை பார்த்து எடுத்துக் கூறுமாறு தெனாவட்டாக போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தாள் .

“ ஹாய் ஸ்ரீஜா அவ பெயர் மதுஸ்ரீ , கோயம்புத்தூர் தான் அவ சொந்த ஊர் . அவங்க அப்பா சிங்காரமுத்து மினிஸ்டர் , அரசியல் ல பெரிய புள்ளி . அவங்க அம்மா வள்ளியம்மை குடும்ப தலைவி , அண்ணா தேவராஜன் அவங்க குடும்ப தொழில் ஜவுளி கடை வியாபாரம் பார்க்குறாங்க “.

“ அவங்க அண்ணி கல்யாணி வக்கீல் , கிரிமினல் லாயர் . அவங்க பையன் நிரஞ்சன் இப்போ U .K.G . படிக்கிறான் இதான் அவ குடும்ப வரலாறு “ என்று கூறி முடித்தாள் மதுவின் உற்ற தோழி அமுதா @ அம்மு .

“ அது சரி அவங்க என்ன படிச்சு இருக்காங்க , அவங்க என்ன பண்ணுறாங்க இப்போ . நான் அதை தான் கேட்டேன் , அதை சொல்லுங்க முதல “ என்று ஸ்ரீஜா சற்று அழுத்தி கேட்கவும் , மதுவிற்கு சிரிப்பு வந்தது .

“ நான் M.Phil கணிதம் முடிச்சு இருக்கேன் , இப்போ இங்க இருக்கிற St . Joseph காலேஜ் ல விரிவுரையாளரா வேலை பார்க்குறேன் . அப்படியே என் சீனியர் உதவியோட , நான் PHD பண்ணிக்கிட்டு இருக்கேன் “.

“ என்ன ஸ்ரீஜா , விவரம் போதுமா , இல்லை இன்னும் வேணுமா “ என்று மது அப்போதும் அதே தெனாவட்டு போஸ் கொடுத்து கெத்தாக கேட்கவும் ஸ்ரீஜா அவளை ஏற இறங்க பார்த்தாள் .

தலையை சரியாக வாராமல் , சும்மா கொண்டை மட்டும் போட்டுக் கொண்டு , முன் நெற்றியில் சிறிய அளவு முடியை மட்டும் தவள விட்டு இருந்தாள் . நெற்றியில் சிறிதாக ஒரு போட்டு , ஒரு கையில் பேஷன் ப்ரேஸ்லெட் , மற்றொன்றில் ஒரு வாட்ச் .

காதில் கடுக்கன் அளவு தோடு , கழுத்தில் சிறிய கயிறு போன்று செயின் , ஒரு வைட் டாப்ஸ் இடுப்பு வரைக்கும் , சாயம் போன ஜீன்ஸ் , தெனாவட்டான ஒரு போஸ் என்று அவள் பார்பதற்கு ஒரு பக்கா மார்டர்ன் சொர்ணாக்கா மாதிரி இருக்கவும் ஸ்ரீஜா சிரித்தாள் .

“ என்னது நீங்க கல்லூரி விரிவுரையாளரா , உங்களை பார்த்தா மார்டர்ன் சொர்ணாக்கா மாதிரி இருக்கு , பொய் சொல்லாம உண்மையை சொல்லுங்க “ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் .

இப்பொழுது சிரிப்பது , அங்கே இருக்கும் அனைவருடைய முறையானது . எல்லோரும் சிரிக்கவும் , ஸ்ரீஜா சட்டென்று தன் சிரிப்பை நிறுத்திவிட்டு , கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மதுவை முறைத்தாள் .

அவளின் முறைப்பை பார்த்து தனக்குள் சிரித்து விட்டு , பின்னர் கண் ஜாடையில் எல்லோரையும் அமைதி படுத்தினாள் . அதன் பின் பார்வையை ஸ்ரீஜா பக்கம் திருப்பி , அவளை தன்னருகே வருமாறு சைகை செய்தாள் .

அங்கே அவளின் அருகே சென்ற ஸ்ரீஜா , என்னவென்பது போல் பார்த்தாள் . மது அவளிடம் ஒரு பைலை நீட்டவும் , அதை வாங்கி பார்த்தவள் அதிர்ந்தாள் . ஏனெனில் அதில் மது கூறிய அனைத்தும் உண்மை , என்று கூறியது .

“ ஹே ஸ்ரீஜா , என்ன படிப்புக்கும் , ஆளுக்கும் சம்மந்தமே இல்லையேன்னு பார்க்குறியா . இப்போ தான இங்க சேர்ந்து இருக்க , இனி போக போக உனக்கே இது பழகிடும் “ என்று அமுதா அவளை தட்டி கொடுத்தாள் .

அப்பொழுது தான் ஸ்ரீஜா , தன்னை சுற்றி அனைவரையும் பார்த்தாள் . அவளுக்கு ஏதோ ஒரு ரவுடி கும்பலுக்குள் தெரியாமல் நுழைந்த ஒரு பீல் உருவானது .

இருந்தாலும் மதுவிடம் ஏதோ ஒன்று இருக்கிறது போல் உணர்ந்தாள் , அவளிடம் நட்பு பாராட்ட விருபினாள் . எனவே ஸ்ரீஜா , அவளை நோக்கி சிரித்த முகமாக , நட்பு கரம் நீட்டினாள் .

“ ம்ம்.. நீ செம பாஸ்ட் ஸ்ரீஜா , என்னை சீக்கிரம் புரிஞ்சுகிட்டு நட்பு கரம் நீட்டிட “ என்று மதுவும் சிரித்துக் கொண்டே அவள் புறம் கையை நீட்டி , அதை பற்றிக் கொண்டு அவள் நட்ப்பை ஏற்றுக் கொண்டாள் .

பின்னர் அங்கே புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் , மேலும் சில ஆரவாரமுடன் அந்த இடம் பழைய உற்சாகத்தோடு கலகலத்தது . சிறிது நேரத்தில் அந்த இடத்தை , எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்தனர் .

மதுவிற்கு ஸ்ரீஜாவை பார்க்கும் பொழுது , வேறு ஒரு முகம் அவள் நினைவில் வந்து அவளை வேதனை அடைய செய்தது . அவளின் முக மாற்றத்தை கண்டு கொண்ட அம்மு , ஸ்ரீஜாவை அவள் அறைக்கு அனுப்பி வைத்தாள் .

பின்னர் மதுவின் தோளில் கை வைத்து அழுத்தவும் , மது சுதாரித்துக் கொண்டாள் . பின்னர் அம்முவிடம் தூக்கம் வருகிறது என்று கூறி , அங்கே தன் கட்டிலில் படுத்துக் கொண்டு , போர்வையை இழுத்து மூடினாள் .

என்ன தான் கண் மூடி படுத்து இருந்தாலும் , அவளால் தூங்க முடியவில்லை . நடந்து போன சில கசப்பான சம்பவங்களின் நினைவில் , அவள் மனதில் மீண்டும் பாரம் ஏறியது . அதை நினைத்துக் கொண்டு படுத்தவள் , எப்பொழுது உறங்கினாள் என்று தெரியவில்லை .

நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை , அவளின் செல்பேசி காலை எட்டு மணியளவில் அவளை எழுப்பியது . எரிச்சலுடன் எடுத்து யார் என்று பார்த்தவள் , அவளின் அன்னை அழைப்பதை பார்த்து வேகமாக எடுத்து காதுக்கு கொடுத்தாள் .

“ என்ன மா திடிர்ன்னு இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க , என்ன விஷயம் “ என்று எடுத்த உடனே கேட்டாள் .

“ அது சரி , அம்மா போனை போட்டு இருக்காளே , எப்படி இருக்கா என்னனு ஒரு வார்த்தை கேட்காம , நேரா விஷயத்துக்கு வாங்கன்னு சொல்லுற பிள்ளை நீ ஒருத்தி தான் டி “ என்று அவர் காலை சுப்ரபாரதம் வாசிக்க தொடங்கினார் .

“ ஹையோ வள்ளிம்மா , நேத்து தான செல்லம் உங்க கிட்ட எப்படி இருக்கீங்ன்னு கேட்டு , கொஞ்சிகிட்டே ஊர்ல இருக்கிற நடப்பன , பறப்பன , மிதப்பனன்னு இப்படி எல்லோரை பத்தியும் கேட்டேன் . வர வர உங்களுக்கு நியாபக மறதி அதிகமாகிட்டே இருக்கு , ஒரு நல்ல டாக்டர் கிட்ட முதல உங்களை காட்டனும் “ என்று மது அவரை உற்சாகத்துடன் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தாள் .

“ ஆரம்பிச்சிடியா , சரி , சரி பேசிகிட்டு இருக்க நேரம் இல்லை . நீ சீக்கிரம் குளிச்சிட்டு , எல்லாம் எடுத்து எடுத்து வச்சு தயாரா இரு . உன்னை கூப்பிட சிபி தம்பி வந்துகிட்டே இருக்கு , இங்க உங்க பெரியப்பா பொண்ணு லக்ஷ்மிக்கு நிச்சயம் ஆகிருக்கு “ என்று அவர் கூறியதை கேட்டவுடன் , அவள் கட்டிலில் இருந்து எழுந்து குதித்துக் கொண்டு இருந்தாள் .

“ ஹையோ சூப்பர் வள்ளிமா , இதை தான நீங்க முதல சொல்லி இருக்கணும் “ என்று குதித்தாள் மது .

“ அது சரி , உனக்கும் அவளுக்கும் தான் ஆகாதே . ஏதோ ஜென்ம விரோதி மாதிரி தான முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருப்ப , அவளை பார்த்தா . இப்போ அவளுக்கு முடிவு ஆகிருக்கு சொன்ன உடனே , இவ்வளவு சந்தோஷப்படுற என்ன விஷயம் “ என்று அவளை பற்றி அறிந்தவராக கேட்டார் .

“ வேற என்ன எனக்கு தான் ரூட் கிளியர் ஆகிருச்சே , ஷப்பா எப்போ டா இவளுக்கு முடியும்ன்னு காத்துகிட்டு இருந்தேன் . நல்ல வேலை , என் பீலிங்க்ஸ் புரிஞ்ச ஒரு நல்லவான் வந்து , இந்த லக்ஸ்சை தள்ளிகிட்டு போயிட்டான் “ என்று அவள் கூறியதை கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் வள்ளியம்மை .

“ உன்னை எல்லாம் திருத்த முடியாது , சீக்கிரம் கிளம்பு இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த சிபி தம்பி அங்க வந்திடும் “ என்று சில பல அறிவுரைகள் கூறி போனை வைத்தார் .

போனை வைத்தவுடன் , அவர் கூறிய சிபி தம்பி மதுவின் காதில் ஓடி அவளை பல்லை கடிக்க வைத்தது . கடிகாரத்தை பார்த்தவள் , செல்லை சார்ஜில் போட்டுவிட்டு , குளிக்க தேவையானதை எடுத்துக் கொண்டு , குளியறைக்குள் சென்று குளித்து விட்டு வந்தாள் .

அதன் பின் வேகமாக தான் எடுத்து செல்ல வேண்டியதை எல்லாம் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துவிட்டு , மீண்டும் ஒரு முறை சரிபார்த்து சார்ஜெரையும் செல்லையும் தன் கைபையில் போட்டுக் கொண்டு அறையில் இருந்து வெளியேறி கீழே லாபிக்கு வந்து சேர்ந்தாள் .

அங்கே அவள் வந்தவுடன் , முதலில் அவள் பார்த்தது திமிராகவும் , தெனாவெட்டாகவும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டு இருந்த சிபி தான் . இவள் வந்ததை பார்த்தவன் , அவனின் கண் அசைவில் அவனோடு வந்து இருந்தவர்கள் அவளின் பெட்டியை வாங்கிக் கொண்டு காருக்கு விரைந்தனர் .

“ இன்னைக்கு ஒழுங்கா நீ என் கூட கார் ல வருகிறது நல்லது , மீறி நீ ஏதாவது செய்ய நினைச்சா அப்புறம் உன்னை தொட்டு தூக்கிட்டு வர மாதிரி இருக்கும் . யோசிச்சு நல்ல முடிவா எடு , புரிஞ்சு இருக்கும் நினைக்கிறன் , நேரம் ஆகிருச்சு வண்டியில் ஏறு “ என்று சிபி கூறியதை கேட்டு , தன் பல்லை கடித்துக் கொண்டே வண்டியில் பின் பக்கம் ஏறி அமர்ந்தாள் .

அவள் அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்ததை பார்த்து , சிபி தனக்குள் புன்னகைத்துக் கொண்டான் . பின்னர் காரின் முன் கதவை திறந்து கொண்டு , டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் ஏறி அமர்ந்து அவரை வண்டியை எடுக்க கூறினான் .

அவனின் கட்டளைக்கு அடி பணிந்தவர் , காரை சீரான வேகத்தில் கோயம்பத்தூர் நோக்கி ஓட்ட தொடங்கினார் . நேற்றைய இரவில் சரியாக தூங்காமல் இருந்ததால் , காலையில் தான் நன்றாக தூங்க தொடங்கினாள் மது .

அதற்குள் அவளின் அன்னை எழுப்பிவிடவும் , கிளம்ப தொடங்கினாள் மது . இப்பொழுது சற்று தூங்கி எழுந்தால் தான் , அடுத்து மூளை சுறுசுறுப்பாக இருக்கும் என்று எண்ணியதால் , உடனே அங்கு இருந்த சிறிய தலையணையை கதவுக்கு அருகில் போட்டுக் கொண்டு , கதவு சரியாக லாக்காகி இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு , கால்லை நீட்டி படுத்து விட்டாள் .

அவள் படுத்து நன்றாக உறங்கியவுடன் , சிபி அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தனக்குள் பொருமிக் கொண்டு இருந்தான் . அவன் இப்படி ஒரு சந்தர்பத்திற்காக தான காத்துக் கொண்டு இருந்தான் , அவளை கடத்த இதுவே சரியான சமயம் என்று எண்ணினான் .

“ டிரைவர் நீங்க வண்டியை அந்த பஸ் ஸ்டாப் கிட்ட நிறுத்துங்க , நீங்க பஸ்ஸை பிடித்து போங்க . நானே இவளை வேகமா அங்க கூட்டிட்டு வந்து விட்டுறேன் , அப்புறம் இவ எழுந்தா அவ எப்படி எல்லாம் ஒடுவாளோ தெரியாது “ என்று சிபி கூறியதை கேட்டு அவர் புன்னகைத்துக் கொண்டார் .

“ தம்பி பாப்பா நல்லா அசதியா இருக்கு , இப்போ அது அவ்வளவு சீக்கிரம் எழுந்துக்காது . நீங்க தைரியமா இருங்க , அது மட்டும் இல்லை , அய்யா என்னை இருந்து கையோட கூட்டிட்டு வர சொல்லி இருக்கார் “ என்று இருபது வருடம் , அங்கே வேலை செய்த விசுவாச டிரைவர் மணி கூறினார் .

“ ஹ்ம்ம்.. இந்த சந்தர்ப்பமாவது பயன்படுத்திக்கலாம் நினைச்சேன் , இதுவும் போச்சா . இன்னும் எவ்வளவு நாள் காத்து இருக்கிறது இவளை கடத்திட்டு போக , ஏதாவது சீக்கிரமா ஒரு வழி கிடைச்சா நல்லா இருக்கும் “ என்று மனதிற்குள் பொரிந்தான் சிபி .

அவனுக்கு தெரியவில்லை , இவளை கடத்துவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று இல்லை என்று . இன்னும் சிறிது நாட்களில் அவனுக்கு இவள் பெரிய அதிர்சிகளை கொடுத்து , அவனை மிரள செய்ய போகிறாள் என்பதை இவன் அறிவானா .

மதியம் ஒரு ஊரில் நிறுத்தி சாப்பிட்டு விட்டு , மீண்டும் கார் பயணம் . அந்த பயணத்தில் சிபி இவளை எப்பொழுது கடத்துவது , என்று யோசித்தான் ஒரு புறம் . மற்றொரு புறம் சிபி வந்து சேர்ந்த விதத்தை நினைத்து , தனக்குள் பொரிந்து கொண்டு இருந்தாள் மது மற்றொரு புறம் .

இப்படி இவர்கள் ஒருவருக்கு ஒருவர் நினைத்துக் கொண்டு இருக்கையில் , இரவு எட்டு மணி அளவில் கோயம்பத்தூர் வந்து சேர்ந்தனர் . அந்த வீட்டை பார்த்து இறங்கிய மது , எப்பொழுதும் போல் அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டு இருந்தது .

பார்பவர்களுக்கு அவள் ரொம்ப நாள் கழித்து வீட்டிற்கு வந்ததால் , இப்படி அழுகிறாள் என்று தான் எண்ணுவர் . ஆனால் அவள் மனதின் ஆழத்திற்கு தான் , அந்த கண்ணீரின் ரகசியம் தெரியும் .

உள்ளே கார் வந்த சத்தத்தை கேட்டு , வீட்டில் இருந்து வெளியே வந்தார் வள்ளியம்மை . மது அதற்குள் தன்னை சுதாரித்து , அவரை பார்த்தவுடன் ஓடி சென்று அவரை கட்டி அனைத்துக் கொண்டாள் .

“ என்ன மதுமா இப்படி இளச்சிட்ட , வா முதல இங்க வெளியே கை , கால் கழுவிட்டு உள்ளே வா “ என்று கூறி அவளை உள்ளே அழைத்து சென்றார் .

மதுவின் இந்த கலங்கிய நிலையை பார்த்த சிபிக்கு , எரிச்சல் வந்தது .

“ இன்னும் நல்லா அழுவ டி நீ , உன் குடும்பத்தையே அழ வைக்குறேன் . எங்க குடும்பத்தை ஏன் டா பகைசிட்டோம்னு உங்க அப்பாவை வருத்த பட வைக்குறேன் , உன்னை சீக்கிரமே இவங்க கிட்ட இருந்து பிரிக்கிறேன் “ என்று மனதிற்குள் கருவிக் கொண்டான் .

வீட்டிற்க்குள் உள்ளே வந்த மதுவை , வள்ளியம்மை அவளை அமர வைத்து முதலில் சாப்பாடை கொடுத்து உபசரித்தார் . அவரின் அன்பில் எப்பொழுதும் போல் , அவள் கண்கள் கலங்கியது .

“ இது என்ன மது எப்போ பார்த்தாலும் இப்படி அழுகை , வீட்டுக்கு வந்த உடனே அழுதா நல்லதுக்கு இல்லை டா . அதான் உன்னை இங்கேயே இருக்க சொன்னேன் , நீ கேட்டா தான “ என்று அவர் பிரிந்து இருப்பதால் தான் மகள் அழுகிறாள் என்று நினைத்து கூறினார் .

ஆனால் அவள் அழுவதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறதே , அது ரகசியமாகவே இருக்கிறது .

“ சரி மா இனி அழ மாட்டேன் , ஆமா அப்பா எங்க . இந்நேரம் நான் வந்தா , என்னை வரவேற்க உனக்கு முந்தியே வந்து நிற்பாரே “ என்று தந்தையை பற்றி பேச்சு எடுத்தாள் .

“ அவர் கட்சி மீட்டிங் முடிஞ்சு , உங்க பெரியப்பா கூட ஒரு சோலியா வெளியூர் போயிருக்கார் . ராத்திரி பதினொரு மணிக்கு மேல தான் வருவார் , லக்ஷ்மிக்கு நிச்சய சடங்கு நாளைக்கு வைக்குறாங்க மது அந்த வேலையா தான் போய் இருக்காங்க “ என்று அன்னை கூறியதை கேட்டு புன்னகைத்து விட்டு , சாப்பிட்டு முடித்தவுடன் , கையை கழுவிவிட்டு , மேலே அவள் அறைக்கு வந்தாள் .

அறை கதவை பூட்டிவிட்டு , அவள் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு முதலில் குளிக்க சென்றாள் . குளித்துவிட்டு வழக்கம் போல் நைட்டி பண்ட் அணிந்து வந்தவள் , தன் அறை ஜன்னல் வழியே உள்ளே பைப் மூலம் கீழே தோட்டத்திற்கு வந்தாள் .

சுற்றி முற்றும் பார்த்துவிட்டு , அவள் தோட்டத்தின் பின்னே சென்றாள் . அங்கே அவள் சென்றதை பார்த்துவிட்டு , சிபி அவளை பின் தொடர்ந்து சென்றான் .

அங்கே ஓரத்தில் உள்ள மரம் நோக்கி சென்று , அங்கே தரையில் அமர்ந்து அந்த மண்ணை எடுத்து அழுது கொண்டே இருந்தாள் . அவள் அழுவதை பார்த்து , இவனுக்கு ஏன் இவ்வளவு அழுகிறாள் என்று புரியவில்லை .

அருகில் சென்றவன் , அங்கே அவள் உதிர்த்த வார்த்தைகளை கேட்டு அவன் ஸ்தம்பித்து நின்றான் .

பூவின் ரகசியம் வரும் ...



 

Attachments

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#4
ஹாய் நண்பர்களே இதோ பூவின் முதல் ரகசியம் பதித்துவிட்டேன் , படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் தெரிவியுங்கள் ..

கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய இடம்


ஒரு பூவின் ரகசியம் - ORU POOVIN RAGASIYAM by kodiuma (comments)



 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#6
Hai friends ellorum eppadi irukeenga
Naan site pakkam vanthe two months aaga poguthu ...
Unga elloraiyum miss pannen ..
Romba busy a irukken but kathaiyai paathiyil Vida manasu illai so July first week illai June last la intha story continue panna poren ..
Enakkaaga ivvalavu thooram Kathu iruntha unga ellorukkum en nandrigal Pala ...

Innoru mukiyamaana vishyam intha Friday vantha naan writer avathaaram eduthu two yrs complete aaga poguthu ... aanalum me innum kathukutty thaan innum niraya naan correct panna vendi irukku ...

Unga elloroda support kandippa iruntha innum Pala padigal pogalaam .. so plz do keep supporting dear friends...

See u all soon...

Anbudan ,
Kodiuma.....
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#7
Hi friends eppadi irukeenga
So so sorry friends naan kandippa intha kathaiyai thodarven athukku neenga innum konjam porumaiyaa irukkanum nu kettukuren
Because enga veettu kutty kannan kooda time spend panna vendi irukku
So ini ud typing ellam avar sleeping kku ponathukku appuram thaan
So antha schedule a naan konjam correct a kondu vara konjam time edukum .

May be next week illai month last LA irunthu neenga regular uds yethirpaarkalaam

Appuram one small request best serial writers vote pool poguthu plz do vote for the best writers ...

Missing u all a lot soon we will meet
Take care friends....

Anbudan
Kodiuma
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#8
ஹாய் நண்பர்களே , நான் திரும்ப வந்துவிட்டேன் . நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் .. இனி வாரம் இரண்டு பதிவு போடா வந்திடுவேன் மக்களே ..

இதோ அடுத்த அத்தியாயம் பதிக்க போகிறேன் படித்துவிட்டு உங்கள் பொன்னான கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ...
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#9
அத்தியாயம் – 2

இடம் : சென்னை

காலை மணி ஏழு , அந்த இரண்டு மாடி பங்களாவில் உள்ள ஒரு உடற்பயிற்சி அறையில் அருள்மொழிவர்மன் தன் ட்ரெட்மில்லில் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தான் . அவனின் எண்ணமெல்லாம் நேற்று அவன் தம்பி சிபி , போனில் கூறியதை மனதில் அசை போட்டுக் கொண்டு இருந்தது .

அதற்குள் ஓடுவதற்கான நேரம் , முடிந்ததற்கான அறிகுறி அவனின் டைமரில் சிக்னல் வரவும் ஓடுவதை நிறுத்திக் கொண்டான் , அதோடு அவனின் சிந்தனையையும் . அதன் பின் வழக்கம் போல் அவனின் காலை நேர ஓட்டம் , அவனை முழுவதும் இழுத்துக் கொண்டது .

அவனின் ஹோட்டலுக்கு செல்ல தயாராகி கீழே இறங்கி வரும் பொழுது , சாப்பாடு மேஜையில் அவனுக்கான உணவு தயாராகி இருந்தது . அவனின் மொத்த குடும்பமும் , அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தனர் .

எப்பொழுதும் போல் அவர்களை பார்த்து , ஒரு சின்ன சிரிப்பு சிரித்துவிட்டு , அவனின் உணவை முடித்துக் கொண்டு ஒரு தலையசைப்புடன் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு , தன் ரேஞ்சு ரோவரில் கிளம்பினான் .

அவனின் இந்த செய்கை , அவனின் மொத்த குடும்பத்தையும் வருத்தத்தில் ஆழ்த்தியது . கடந்த பத்து வருடமாக இவன் இப்படி தான் இருக்கிறான் , அதற்கான காரணம் தெரிந்தாலும் அவர்களால் அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் போனது .

அருள் அவனின் T.A .C செயின் ஆப் ஹோட்டல்ஸ் அலுவலக வளாகத்திற்குள் காரை செலுத்தினான் . அவனின் கார் சத்தத்தை வைத்தே , அவனின் காரியதரிசி மித்ரா தயாரான நிலையில் இருந்தாள் .

“ இவன் எந்த நேரத்துல என்ன மாதிரி ரியாக்ட் செய்வானோ , இவனோட பெரிய தொல்லை . எல்லாம் பக்காவா இருக்கணும் , கொஞ்சம் தாமதமானாலும் பிடிச்சு திட்ட வேண்டியது “ .

“ இவன் சிரிக்க காசு கேட்குற ஆள் வேற , எப்போ பார்த்தாலும் மூஞ்சை உம்னு வச்சு இருக்கான் . சிரிச்சா குறைஞ்சா போயிடுவான் , பார்க்க நல்லா இருக்கான் , இந்தியாவிலே பெரிய தொழிலதிபர் வேற , அந்த கெத்து தான் இவனை இப்படி இருக்க வைக்குது போல “ .

“ கொஞ்சம் சிரிச்சிகிட்டே , பாராட்டி , தட்டி வேலை வாங்கினா நல்லா இருக்கும் , நமக்கும் வேலை பார்க்க . எப்போ பார்த்தாலும் ரோபட் மாதிரியே , எல்லோரையும் நடத்துறது “ என்று எப்பொழுதும் போல் இன்றும் மனதிற்குள் கருவிக் கொண்டு இருந்தாள் மித்ரா .

அதற்குள் அருள் அவனின் அலுவலக அறைக்குள் செல்வதை பார்த்துவிட்டு , மித்ரா அவன் கேட்க போகும் அணைத்து விவரங்களையும் பைல் செய்து அவனின் அழைப்புக்காக காத்து இருந்தாள் .

“ மிஸ் மித்ரா அந்த சிங்கப்பூர் ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட டிடைல்ஸ் எல்லாம் , எடுத்துட்டு வாங்க “ என்று இண்டர்காம் வழியாக அருள் செய்தி சொல்லவும் , மித்ரா அதை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றாள் .

“ குட் மார்னிங் சார் , இதோ நீங்க கேட்ட டிடைல்ஸ் “ என்று அவன் கேட்ட விவரத்தை கொடுத்தாள் .

“ குட் மார்னிங் மிஸ் மித்ரா , அப்புறம் இன்னைக்கு உள்ள மீட்டிங் எல்லாம் சொல்லுங்க “ .

“ சார் மதியம் ஒரு மணிக்கு , நம்ம மெயின் பிரான்ச் ஹோட்டல் ல மிஸ்டர் நந்தகுமார் கூட ஒரு மீட்டிங் . அப்புறம் மாலை அஞ்சு மணிக்கு அந்த சிங்கப்பூர் clients கூட , omr ரோடு ல இருக்கிற நம்ம பீச் வியூ ஹோட்டல் ல மீட்டிங் சார் “ என இன்று அவனுக்குரிய முக்கியமான மீட்டிங் பட்டியலை கூறி முடித்தாள் மித்ரா .

“ ஒ , சரி அப்புறம் நாளைக்கு அந்த அனாதை ஆஸ்ரமம் ல இருக்கிற குழந்தைகளுக்கு , நம்ம தாம்பரம் ரிசார்ட் கார்டன் ஹோட்டல் ல தான் மூணு வேளை சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கேன் “.

“ அங்க அந்த இன்சார்ஜ்க்கு கால் பண்ணி , எல்லாம் சரியா இருக்கணும்னு சொல்லிருங்க . இல்லைனா அடுத்து என்ன நடக்கும்ன்னு உங்களுக்கு தெரியும் , தெளிவா சொல்லிடுங்க “ என்று அருள் அழுத்தி கூறவும் , மித்ரா புரிந்ததற்கான அடையாளாமாக தலையை ஆட்டினாள் .

“ மிஸ் மித்ரா நாம ரெண்டு நாள் சிங்கப்பூர் பயணம் போகணும் , அதற்கான ஏற்பாடு எல்லாம் பண்ணுங்க . வர சனி , ஞாயிறு ரெண்டு நாள் டிக்கெட் புக் பண்ணிருங்க “ என்று அருள் கூறியதை கேட்டு அதிர்ந்தாள் .

“ நாம அன்னைக்கு ஊருக்கு போக பிளான் போட்டோம் , இவன் அதை கெடுத்துடுவான் போலையே . எப்படியாவது இந்த ட்ரிப்பை போஸ்ட்போன் பண்ண வைக்கணும் , கடவுளே காப்பாத்து “ என்று கடவுளிடம் ஒரு மனு போட்டுவிட்டு அவனிடம் தன் தைர்யத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள் .

“ சார் எனக்கு அன்னைக்கு ஊருக்கு போக வேண்டி இருக்கு , என் தங்கச்சி பிறந்தநாளைக்கு நான் அங்க இருக்கிறதா வாக்கு கொடுத்து இருக்கேன் . அதனால ட்ரிப்பை போஸ்ட்போன் பண்ணலாம் சார் , ப்ளீஸ் “ என்று கெஞ்சினாள் மித்ரா .

“ உங்க தங்கச்சி பிறந்தநாள் , வருஷா வருஷம் வர தான் செய்யும் . இந்த ப்ராஜெக்ட் ரொம்ப முக்கியம் அது உங்களுக்கே தெரியும் , சோ நேரத்தை கடத்தாம நான் சொன்னதை செய்யுங்க முதல “ என்று கட்டளை இடவும் அவளும் மண்டையை உருட்டிவிட்டு வெளியேறி , அவன் சொன்னதை செய்ய தன் அறைக்குள் விரைந்தாள் .

அதன் பின் அருள் அவனின் ஹோட்டல்களை எல்லாம் மேற்பார்வையிட , அவனின் மெய்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு சென்றான் . அங்கே இருக்கும் குறைகளை கண்டு அறிந்து அங்கே உள்ள மேனேஜரை பிடித்து வசை பாடிவிட்டு , அன்றைய மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீடு திரும்பினான் .

காலில் சக்கரம் கட்டி ஓடாத குறையாக தான் , அவனின் நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கும் . இப்படியே நாட்கள் ஓடி , வெள்ளி இரவு அருளும் , மித்ராவும் சிங்கப்பூர் செல்ல விமானம் ஏறினர் . அருள் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் அவளுக்கும் சேர்த்து எடுத்து வைக்க கூறியதால் , மித்ரா அவளுக்கு முதன் முதலாக எடுத்து இருந்தாள் .

இருவருக்கும் அடுத்த அடுத்த சீட் , முதல் முறையாக அவனோடு இப்படி நெருக்கமாக அமர்ந்து பயணம் செய்வதால் மித்ரா ஏதோ முள்ளின் மேல் அமர்வது போல் அமர்ந்து இருந்தாள் .

“ இவன் கூட இப்படி பேசாம உட்கார்ந்து வரணும்ன்னு வேண்டுதல் வாங்கிட்டு வந்து இருக்கேன் போல . ச எப்போவும் போல பின்னாடி எகனாமி கிளாஸ் எடுத்து இருந்தா , பக்கத்துல யார் கூடயாவது அரட்டை அடிச்சிட்டு , வெளியே விமானம் மேகத்துக்கு உள்ள போறதை ரசிச்சிகிட்டு வந்து இருக்கலாம் “.

“ என்னைக்கும் இல்லாம , இந்த தடவை இப்படி எனக்கு பிசினஸ் கிளாஸ் ல சேர்த்து எடுக்க சொல்லும் பொழுதே சுதாரிச்சு இருக்கணும் . ஹ்ம்ம்.. இந்நேரம் நான் எங்க ஊருக்கு போய் இருக்க வேண்டியது , தங்கச்சி தான் பாவம் நான் வருவேன்னு ரொம்ப ஆசையா இருந்தா , இந்த தடியனால இந்த தடவையும் போக முடியல “ என்று மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தும் , தன்னை நினைத்து புலம்பிய படியும் இருந்தாள் மித்ரா .

அருளோ இவளுக்கு நேர்மாறாக , யோசனையில் மூழ்கி இருந்தான் . அன்றைக்கு சிபி கூறிய தகவலை நினைத்து பார்த்து , அவன் ஒரு முடிவுக்கு வந்து இருந்தான் , அதை இந்த சிங்கப்பூர் பயணம் முடிந்த பிறகு செயாலாற்ற முடிவு செய்தான் .

அதற்குள் விமான பணிப்பெண் , சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க போவதாக அறிவிப்பு விடவும் , அருள் தன் நினைவுகளில் இருந்து திரும்பினான் .

“ அப்பாட ஒரு வழியா தரை இறங்க போறோம் , எவ்வளவு நேரம் தான் இந்த உம்மணா மூஞ்சியோட ஒரே இடத்தில உட்கார்ந்துட்டு வரது . முதல ஹோட்டல்க்கு போய் நல்லா ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்துக்கணும் , அப்போ தான் கொஞ்சமாவது பிரெஷா இவன் கூட மீட்டிங் போக முடியும் “.

“ அதுவும் கால் ல ஏதோ சக்கரம் கட்டி விட்ட மாதிரி தான் , எல்லாம் வேகமா போவான் , பின்னாடியே ஓடனும் . இவனை கல்யாணம் பண்ண போற புண்ணியவதி , இவன் கூட ஓட ரெடியா இருக்கணும் போல , பாவம் அந்த பொண்ணு “ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே சிறிது சத்தமாக முணுமுணுத்தது இவன் காதில் விழுந்தது .

உடனே அருள் அவனறியாமல் முதல் முறையாக , அவளை முழுதாக தன் எக்ஸ் ரே கண்களால் பார்வையிட்டான் . தலையை வாரி தூக்கி வைத்து போட்ட கொண்டை , கண்ணுக்கு கண்ணாடி , நெற்றியில் சிறிது பெரிய சைஸ் பொட்டு , கழுத்தில் சிறிய டாலர் செயின் , கைத்தறி புடவை என்று நேர்த்தியாக ஒரு காரியதரிசி உடை போல் இருந்தவளை பார்த்து ஆச்சரியம் அடைந்தான் .

அவன் பார்த்த , பழகிய காரியதரிசி அனைவரும் , தங்களை அலங்கரித்து கவரவே முயல்வர் . ஆனால் மித்ரா அந்த பதவிக்குரிய மரியாதையை கொடுக்கும் விதமாக உடை அணிந்து இருந்தது , அவனை வியக்க வைத்தது .

அதற்குள் விமானம் தரையிறங்கவும் , பயணிகள் எல்லோரும் இறங்க தொடங்கினர் . அருளும் சுதாரித்து மித்ராவுடன் இறங்கினான் . அதன் பின் அங்கே அவர்களுக்கான பார்மாலிடீஸ் முடிந்து , வெளியே இவர்களுக்காக காத்து இருந்த வண்டியில் ஏறி ஹோட்டல் வந்து சேர்ந்தனர் .

செக் இன் முடிந்து அவரவர் அறை சாவியை வாங்கிக் கொண்டு , லிப்டில் ஏறினர் . பத்தாவது தளத்தை அழுத்தி விட்டு , அருளும் , மித்ராவும் தளம் வரவும் அவர்களுக்கு அளிக்கப்பட அறைக்கு சென்றனர் .

அறைக்குள் சென்றவுடன் அருள் தன் அலைபேசியை எடுத்து சிபிக்கு கால் செய்தான் . அந்த பக்கம் சிபி இவனின் அழைப்பை பார்த்து , உடனே ஒரு மறைவிடத்திற்கு சென்று எடுத்து பேச தொடங்கினான் .

“ என்ன அண்ணா , இந்த நேரம் கூப்பிட்டு இருக்க . எதுவும் முக்கியமான விஷயமா , எதுவும் பிளான் போட்டு இருக்கியா அடுத்து “ என்று சிபி வேகமாக பேசுவதை வைத்து , அப்பொழுது தான் அருளுக்கு நேர வித்தியாசம் உரைத்தது .

“ சாரி டா சிபி , நான் நேரத்தை கவனிக்கல . ஆமா டா பிளான் பண்ணிட்டேன் , அது விஷயமா தான் பேச கூப்பிட்டேன் . நீ அவளை கடத்த வேண்டாம் டா , அதுக்கு பதிலா அவளை லவ் பண்ணிரு . நமக்கு தெரியாத ரகசியம் நிச்சயம் அவ கிட்ட இருக்கு , அதுக்கான சாவி தான் காதல் “ .

“ நீ அவளை காதலிக்கிற மாதிரி நடிச்சி , எப்படியாவது நமக்கு தேவையான சில உண்மைகளை கரைந்திடு . நீ இனி ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் , எக்காரணம் கொண்டும் உன்னோட பின்புலம் தெரிய கூடாது , புரியுதா “ என்று அருள் கூறிய திட்டத்தை கேட்டு சிபி ஒரு நிமிடம் திடுகிட்டான் .

அதன் பின் சுதாரித்துக் கொண்டு அண்ணன் இட்ட கட்டளைக்கு கீழ்பணிந்து அவன் சொன்னதை செய்ய தயாரானான் . சிபியிடம் விஷயத்தை கூறிய பிறகு தான் , அருளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது .

அதன் பின் சற்று தூங்கி எழுந்தவுடன் , அவனுக்கு தொழில் பற்றிய சிந்தனை ஆக்கிரமித்தது . உடனே அவனின் காரியதரிசி மித்ராவிற்கு அழைத்து , மீட்டிங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய சொல்லிவிட்டு அவன் தயாராக சென்றான் .

“ என்னடா இன்னும் போனை காணோமேன்னு இப்போ தான் நினைச்சேன் , அதுக்குள்ள இந்த ரோபோ கூப்பிட்டிருச்சு . இவன் கூப்பிடுவான் தெரிஞ்சு , நாம தயாரா இருந்தது நல்லதா போச்சு “ .

“ மித்ரா இனி உன்னால ஒரு நிமிஷம் கூட உட்கார முடியாது , ரோபோ பின்னாடி வேகமா சுத்த தான் நேரம் சரியா இருக்கும் “ என்று எண்ணிக் கொண்டே மித்ரா அவனிட்ட கட்டளைகளை சரியாக செய்ய தன் அறையில் இருந்து வெளியேறினாள் .

நேராக அந்த ஹோட்டலில் உள்ள conference ஹாலிற்கு சென்று , மீட்டிங்கிர்க்கு தேவையான அணைத்து ஏற்பாடுகளையும் அங்கு உள்ள உதவியாளர் ப்ரியாவை வைத்து எல்லாவற்றையும் செய்து முடித்தாள் .

“ மித்ரா அக்கா நீங்க ரொம்ப லக்கி ல , உங்க M .D செம ஸ்மார்ட் , ஹன்ட்சம் . அந்த கெத் இன்னும் சும்மா நச்சுனு இருக்கு , உங்களுக்கு அவர் கூடவே இருக்கிறது வரம் ல “ என்று அந்த ப்ரியா அருளை ஸ்லாகித்து பேசவும் , மித்ராவிற்கு சிரிப்பு வந்தது .

“ ப்ரியா நீ அவன் கூட ஒரு மணி நேரம் இருந்து பாரு , துண்டை காணோம் , துணியை காணோம்னு ஓடிருவ . அந்த அளவுக்கு செம கோவம் வரும் , அழுத்தமா ஒரு பார்வை பார்த்தாலே எல்லோரும் அலெர்ட் ஆகிருவாங்க தெரியுமா “.

“ கிட்ட தட்ட ஒரு ரோபோ அவன் , எப்போவும் கால் ல சக்கரம் கட்டி ஓடிகிட்டே இருக்கிற ஒரு பக்கா தொழிலதிபன் . அவன் கூட இருக்கிறவங்களும் , அவனை மாதிரியே ஒடனும்ன்னு நினைக்கிறவன் “.

“ இன்னைக்கு என் தங்கச்சி பிறந்தநாள் ஊருக்கு போகணும்ன்னு லீவ் கேட்டேன் , அதுக்கு கூட லீவ் போட பெர்மிஷன் இல்லை . இவனுக்கு வர பொண்டாட்டி தான் பாவம் , இவன் கூட ரோபோ மாதிரி அவளும் மாறனும் “ என்று மித்ரா கூறியதை கேட்டு ப்ரியா வாயை பிளந்தாள் .

“ அட கடவுளே , இப்படியா அக்கா ஒருத்தர் இருப்பார் . ஹ்ம்ம்.. உண்மைக்குமே நீங்க பாவம் தான் அக்கா , ஆமா எத்தனை மாசமா நீங்க இந்த வேலையை பார்க்குறீங்க “ என்று பிரியா கேட்கவும் அவள் சிரித்தாள் .

“ நான் மூணு வருஷமா , இந்த வேலையை பார்க்குறேன் டா ப்ரியா . என் குடும்பத்துக்காக மட்டும் தான் நான் இன்னும் இந்த வேலை ல இருக்கேன் டா , இல்லைனா இந்நேரம் நான் எஸ்கேப் ஆகிருப்பேன் “ என்று கூறி கண்ணடித்து சிரிக்கவும் , ப்ரியாவும் சேர்ந்து சிரித்தாள் .

அதற்குள் மீட்டிங்கிர்க்கு அனைவரும் வரவும் , மித்ரா மீண்டும் பம்பரமாக அருள் கோடிட்ட தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டாள் . மீட்டிங் முடிந்தவுடன் , அதை அவன் பார்வைக்கு வைத்தாள் .

“ மிஸ் மித்ரா மீட்டிங் வெற்றிகரமா , நமக்கு சாதகமா முடிஞ்சிருக்கு . இந்த தகவல்களை எல்லாம் ஒரு டாகுமென்ட் மாதிரி தயாரித்து , நாளைக்கு வக்கீல் மூலமா இதை எல்லாம் லீகலாக்கணும் “ .

“ இன்னைக்கு வேற எந்த வேலையும் இல்லை , உங்க பர்சனல் வேலை எதுவும் இருந்தா அதை பாருங்க . நாளைக்கு காலையில் வக்கீல் முன்னாடி சைன் பண்ணிட்டு , நாம நாளைக்கே சென்னைக்கு போகலாம் . அப்புறம் இங்க இருக்கிற ஒரு நம்பிக்கையான ஆளை வைத்து வேலையை ஆரம்பிக்கணும் “ என்று அருள் கூறியதை கேட்டு அவள் ஆனந்தம் அடைந்தாள் .

அவனிடம் மண்டையை உருட்டிவிட்டு , அவன் கூறிய வேலைகளை வேகமாக முடித்துவிட்டு , அவன் பார்வைக்கு வைத்து சரி பார்த்து முடித்தவுடன் அதை அவள் பத்திரமாக தன் பைலில் எடுத்து வைத்து விட்டு தன் அறைக்கு விரைந்தாள் .

“ அப்பாடி நான் கூட டைம் கிடைக்காதோன்னு நினைச்சேன் , ஒரு வழியா டைம் கிடைச்சு அவனும் போயிட்டு வான்னு அனுமதி கொடுத்துட்டான் “ என்று அவன் கொடுத்த அரை நாள் லீவை நினைத்து சந்தோசம் அடைந்தாள் .

அதன் பின் வேகமாக திரும்பவும் ஒரு குளியலை போட்டுவிட்டு , அவள் நீண்ட தலை கூந்தலில் ஒரு கிளிப்பை மட்டும் மாட்டிவிட்டு , முடியை படர விட்டாள் . அவளுக்கு பிடித்த டாப்ஸ் , ஸ்கர்ட் அணிந்து கொண்டாள் .

முகத்திற்கு சிறிது காம்பக் பவுடர் போட்டுவிட்டு , நெற்றியில் ஒரு பொட்டு வைத்து , உதட்டுசாயம் மட்டும் போட்டுவிட்டு கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டாள் . அதன் பின் ஒரு கையில் வாட்ச் , மற்றொரு கையில் ஒரு ஜோடி வளையல் அணிந்து கொண்டு தன் செல்பேசி , கைப்பை சகிதம் அவள் அறையில் இருந்து வெளியேறினாள் .

முதலில் அங்கு உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு , அதன் பின் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அருகே உள்ள மாலில் சுற்ற தொடங்கினாள் . அங்கே உள்ள கண்கவர் பொருட்களை எல்லாம் பார்த்து ரசித்தாள் .

அதன் பின் சில இடங்களில் தன்னை செல்பி எடுத்து , வாட்ஸ் அப்பில் தன் தங்கைக்கு அதை அனுப்பி வைத்தாள் . அதற்க்கு அவள் தங்கையிடம் இருந்து கோவமாக ஒரு ஸ்மைலி வந்து சேர்ந்தது .

அதை பார்த்து சிரித்துக் கொண்டாள் மித்ரா , அதன் பின் அந்த மாலில் தன் தங்கைக்கு பிடித்த மாதிரி சில கிளிப் , கம்மல் என பார்த்து பார்த்து வாங்கி குவித்தாள் . அதன் பின் நேரமாதலால் , அவள் அந்த மாலில் இருந்து வெளியேறி , ஹோட்டலுக்குள் நுழைந்தாள் .

“ சார் இங்க துணையோட வர தான் அனுமதி , நீங்க தனியா எல்லாம் போக முடியாது சார் “ என்று அந்த ஹோட்டலில் உள்ள பப்பில் வெளியே இருந்த அடியாட்கள் போல் இருந்தவர்கள் , அருளை உள்ளே விட மறுத்தனர் .

அப்பொழுது அவன் தன் கண்களை சுழல விட்டான் , யாரும் தனியாக தென்படுகிறார்களா என்று . எல்லோரும் அவரவர் ஜோடிகளுடன் சுற்றி திரிந்து கொண்டு இருந்தனர் . அவனுக்கு இருந்த எரிச்சலில் யாரையாவது இழுத்துக் கொண்டு உள்ளே செல்லலாம் போல் தோன்றியது .

அப்பொழுது ஒரு ஓரத்தில் மின்தூக்கிக்காக காத்துக் கொண்டு இருந்த மித்ராவை பிடித்து இழுத்துக் கொண்டான் . அவளை அவன் சரியாக பார்க்கவில்லை , தனியாக ஒரு பெண் நிற்கவும் அவனின் அவசரத்திற்கு அவளை இழுத்து சென்றான் .

“ இதோ என் துணை “ என்று அவர்களிடம் கூறிவிட்டு அவளோடு உள்ளே சென்றான் .

கண்களை சுழல விட்டவன் , கண் ஒரு இடத்தில் நிலைத்து நின்றது . நேராக அங்கே சென்று , அந்த இளைஞனை போட்டு அடி பின்னி எடுத்து விட்டான் .

“ ஏன்டா நாயே உனக்கு டைம் பாஸ் பண்ண , என் தங்கச்சி தான் கிடைத்தாளா . நீ மினிஸ்டர் பையன்னா , என்ன வேண்ணாலும் மிரட்டுவியா அவளை . குடிச்சிட்டு இப்படி கும்மாளம் அடிக்கிற உனக்கு , காதல்ன்னா என்னனு தெரியுமா டா ராஸ்கல் “ .

“ இன்னொரு தடவை நீ என் தங்கச்சியை மிரட்டி , என்னை காதல் பண்ணுன்னு சொல்லி மிரட்டுரதை பார்த்தேன் , அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள் தெரிஞ்சிக்கோ “ என்று அவனை மேலும் அடித்துவிட்டு வெளியேறினான் அருள் .

கோபத்துடன் வெளியேறியவனை பின் தொடர்ந்து வந்த மித்ரா , அவன் மின்தூக்கியில் ஏறவும் , இவளும் பின் தொடர்ந்து சென்றாள் . பத்தாவது தளத்தை அழுத்திவிட்டு , அவன் நிமிரும் பொழுது அவன் எதிரே உக்கிரமாக நின்று கொண்டு இருந்தாள் மித்ரா .

பூவின் ரகசியம் வரும் ...
 

Attachments

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,364
Location
sivakasi
#10


[h=1]அத்தியாயம் – 3[/h][h=1][/h][h=1]இடம் : கோயம்புத்தூர் மதுஸ்ரீ வீடு ..[/h][h=1][/h][h=1]காலை நேரம் அந்த வீட்டு ஆட்கள் பம்பரமாக சுற்றி கொண்டு இருந்தனர் . மதுஸ்ரீயின் பெரியப்பா மகள் லக்ஷ்மிக்கு , அன்று நிச்சய சடங்கு வீட்டில் வைத்து இருந்தனர் .[/h][h=1][/h][h=1]“ ஏய் சரசு , அந்த பெரிய குத்து விளக்கை இங்க எடுத்து வை . டேய் ராசப்பா , அந்த குமாரு பையன் பூ வாங்கிட்டு வர எப்போவோ போனான் , இன்னும் ஆளை காணோம் போய் என்னனு பாரு “ என்று வள்ளியம்மை மதுவின் அன்னை அங்கு உள்ள வேலையாட்களை எல்லாம் விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருந்தார் .[/h][h=1][/h][h=1]“ என்னமா வள்ளி , காலையில் இருந்து ஓடிகிட்டே இருக்க , கொஞ்சம் ஒய்வு எடு மா “ என்று அங்கு உள்ள வயதான மூதாட்டி ஒருவர் அவரை ஒய்வு எடுக்க கூறினார் .[/h][h=1][/h][h=1]“ இல்லை பெரியம்மா , லக்ஷ்மிக்கு அம்மா , அப்பா ஸ்தானத்துல இருந்து நாங்க தான எல்லாம் செய்றோம் . எல்லாம் சரியா செய்யணுமே , லக்ஷ்மி எனக்கு பொண்ணு மாதிரி அவ சடங்கு எந்த ஒரு குறையும் இல்லாம நடக்கணும் “.[/h][h=1][/h][h=1]“ அதனால தான் , நானே எல்லாத்தையும் மேற்பார்வை பார்க்குறேன் பெரியம்மா “ என்று வள்ளியம்மை கூறினார் .[/h][h=1][/h][h=1]அதன் பின் வேலைகள் எல்லாம் துரித கதியில் மடமடவென நடந்து கொண்டு இருந்தது . வெளி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு , உள்ளே வந்த சிங்காரமுத்து வீட்டின் அலங்காரங்களை எல்லாம் பார்த்து அசந்து விட்டார் .[/h][h=1][/h][h=1]“ வள்ளிமா நம்ம வீடு தானா இது , ம்ம்.. அசத்திட்ட பிள்ளை . என்ற பொண்டாட்டினா என்ன சும்மாவா , காளிமுத்து அண்ணே பார்த்தீங்களா , லஷ்மி நிச்சயம் இன்னைக்கு ஜாம் ஜாம்னு நடக்கும் “ .[/h][h=1][/h][h=1]“ வர போற விருந்தாளிகள் எல்லாம் அசந்து இருக்க போறாங்க . உங்க பொண்ணு நிச்சயம் இன்னைக்கு சிறப்பா இருக்க போகுது பாருங்க “ என்று சிங்காரமுத்து தன் அண்ணன் காளிமுத்துவிடம் ஸ்லாகித்து பேசினார் .[/h][h=1][/h][h=1]“ ஆமாம் தம்பி , எல்லாம் உங்க ரெண்டு பேரோட முயற்சினால தான் . ஆமா உன் பொண்ணு மதுஸ்ரீ கண்ணுலையே படலையே , பிள்ளை நேத்தே வந்திருச்சு ல “ என்று மதுஸ்ரீ பற்றி விசாரித்தார் காளிமுத்து .[/h][h=1][/h][h=1]“ ஆமாம் ல மது எங்க மா வள்ளி , பிள்ளையை இன்னும் பார்க்க கூட இல்லை “ என்று மதுவை பற்றி விசாரித்தார் சிங்காரமுத்து .[/h][h=1][/h][h=1]“ அவ காலையிலே வழக்கம் போல , அவ பிள்ளையாரை பார்க்க போயிட்டாங்க இப்போ வர நேரம் தான் . நேத்தே உங்க ரெண்டு பேரையும் பிள்ளை தேடினா , நீங்க வர தான் தாமதம் ஆகிடுச்சு “ என்று வள்ளி கூறினார் .[/h][h=1][/h][h=1]“ ஒ சரி சரி , பிள்ளை வரதுக்குள்ள நாங்க மத்த வேலையை எல்லாம் முடிச்சிட்டு இங்க முன்னாடி நடு ஹால் ல உட்கார்ந்து இருக்கோம் “ என்று கூறி சென்றனர் இருவரும் .[/h][h=1][/h][h=1]தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை பார்த்து விட்டு , வீடு வந்த மதுவை வரவேற்றனர் ஹாலில் இருந்த அவளின் அப்பாவும் , பெரியப்பாவும் .[/h][h=1][/h][h=1]“ அப்பா , பெரியப்பா எப்படி இருக்கீங்க “ என்று அவர்களை பார்த்த உற்சாகத்தில் அவர்களை கட்டிக் கொண்டாள் .[/h][h=1][/h][h=1]“ நாங்க நல்லா இருக்கோம் தாயி , நீ என்ன இப்படி இளைச்சு போயிட்ட . பேசாம இங்கேயே வந்திடு மா , இங்க நம்ம ஊர் ல தான் ஏகப்பட்ட காலேஜ் இருக்குதுல “ என்று அவளை கனிவாக விசாரித்துக் கொண்டு இருந்தார் காளிமுத்து , அவளின் பெரியப்பா .[/h][h=1][/h][h=1]“ அச்சோ பெரியப்பா , நான் ஒன்னும் அங்க வேலை மட்டும் பார்க்கிறதுக்காக போகல . என்னோட படிப்புக்காகவும் தான் அங்க போய் இருக்கேன் , அங்க தான் என்னோட குரு இருக்காங்க . அவங்க கிட்ட தான் , என் படிப்பு சம்மந்தமான உதவி கேட்குறேன் “.[/h][h=1][/h][h=1]“ இன்னும் ஒரு நாலு மாசம் தான் , அதுக்கு அப்புறம் நான் இங்கேயே வந்திடுவேன் “ என்று மது கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் .[/h][h=1][/h][h=1]“ அது எல்லாம் சரி மா , அடுத்து உனக்கு தான் மாப்பிளை பார்க்கிறதா இருக்கேன் . அதனால சீக்கிரம் உன் படிப்பை முடிச்சிட்டு வா , இப்போவே லேட்டு . எங்க காலத்துல எல்லாம் இப்படி இல்லை “.[/h][h=1][/h][h=1]“ ஏதோ மினிஸ்டர் பொண்ணு , டாக்டர் பட்டம் வாங்கி இருக்கேனு நாலு பேர் பேசுவாங்கன்னு தான் இத்தனை நாள் உன் போக்குல விட்டேன் . இனி லக்ஷ்மி கல்யாணம் முடிஞ்ச உடனே , அடுத்து உனக்கு தான் பண்ணனும் “ என்று அவள் தந்தை கூறியதை கேட்டு மது உள்ளுக்குள் புகைந்தாலும் , வெளியே சிரித்த முகமாக அவளுக்கு பதில் அளிக்க தொடங்கினாள் .[/h][h=1][/h][h=1]“ அட என்ன அப்பா , அதான் நான் முதலிலே நீங்க போட்ட கண்டிஷன்க்கு எல்லாம் ஒத்துகிட்டேனே . நான் அதை மறப்பேனா அப்பா , நான் அம்மாவை போய் பார்த்துட்டு அப்படியே நானும் தயாராகிட்டு வரேன் அப்பா “ என்று அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு , தன் அம்மாவை காண சென்றாள் .[/h][h=1][/h][h=1]அங்கே அவர்கள் வீட்டின் பின்னால் இருக்கும் தோட்டத்தை , அலங்கரித்துக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் வேலை வாங்கிக் கொண்டு இருந்த தன் அம்மா வள்ளியை பார்த்து இரக்கம் கொண்டாள் . அவரின் அருகே சென்று , அவர் கை பிடித்து அங்கே போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர வைத்தாள் .[/h][h=1][/h][h=1]“ அம்மா நீங்க எவ்வளவு நேரம் , இப்படியே சுத்திக்கிட்டு இருக்க போறீங்க . கொஞ்சம் உங்க உடம்பையும் பார்க்க வேண்டாமா , இங்க தான் இதை எல்லாம் பார்க்க இத்தனை பேர் இருக்காங்கள அப்புறம் என்ன “ என்று செல்லமாக அதட்டிக் கொண்டு இருந்தாள் .[/h][h=1][/h][h=1]“ நல்லா சொல்லு உங்க அம்மாவுக்கு , இதை தான் நானும் உங்க அம்மாவுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன் . எங்க கேட்குறா , கேட்டா லட்சுமிக்கு எந்த மன குறையும் வந்திட கூடாதுங்கறா “ என்று அங்கு வந்த அந்த மூதாட்டி , மதுவிடம் கூறிவிட்டு சென்றார் .[/h][h=1][/h][h=1]“ அம்மா லக்ஸ்க்கு எந்த கஷ்டமும் வராது , எல்லாம் சரியா தான் நடக்குது . இப்போ தான் அப்பாவும் , பெரியப்பாவும் எல்லாம் நல்லா தான் ஏற்பாடு நடக்குது சொன்னாங்கள . அப்புறம் என்ன கொஞ்ச நேரம் போய் ஒய்வு எடுங்க , இங்க இருக்கிறவங்க இதை எல்லாம் பார்த்துப்பாங்க “ என்று தாயிடம் அன்பு கட்டளையிட்டாள் மது .[/h][h=1][/h][h=1]“ என்ன தான் இருந்தாலும் நம்ம வீட்டு விசேஷம் , நாம தான் எல்லாம் சரியா இருக்குதான்னு பார்க்கணும் மது மா . பாவம் லட்சுமிக்கு அம்மா இல்லை , அவ வாழ்கையில் நடக்க போற நல்லதுக்கு எல்லாம் அவளுக்கு பிடித்த மாதிரி சரியா இருக்கணுமேன்னு தான் நான் பார்க்குறேன் “ என்று வள்ளி அவளுக்கு விளக்கம் அளித்தார் .[/h][h=1][/h][h=1]“ அம்மா நீங்க சொல்லுறது எனக்கு நல்லா புரியுது , ஆனா நாளைக்கு எனக்கும் இந்த மாதிரி விசேஷம் வரும் பொழுது நீங்க ஓடி ஆடி பார்க்க வேண்டாமா அம்மா . அதுக்கு தான் சொல்லுறேன் , கொஞ்சம் உங்க உடம்பையும் கவனிங்கன்னு”.[/h][h=1][/h][h=1]“ வீட்டு ஆளா நான் வேணும்னா , மிச்ச இருக்கிற வேலை எல்லாம் சரியா நடக்குதான்னு பார்க்குறேன் . இப்போ சமத்தா நீங்க போய் ஓய்வு எடுங்க , சுமதி அக்கா அம்மாவை கூட்டிட்டு போங்க “ என்று அங்கே இருந்து தன் அம்மாவை ஓய்வு எடுக்க அனுப்பினாள் .[/h][h=1][/h][h=1]“ ம்ம்.. இன்னும் இந்த மேடை அலங்காரமும் , அந்த buffet முறை சாப்பாடு வைக்க தேவையான டேபிள்ஸ் வைக்க மட்டும் பார்கிறது ஒன்னு தான் பாக்கி “ என்று எண்ணிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கே பாதுகாப்புக்கு இருந்த சிபியை பார்த்து , அவள் கண்கள் பளிச்சிட்டது .[/h][h=1][/h][h=1]“ ஹலோ மிஸ்டர் சிபி , கொஞ்சம் இங்கே வாங்க “ என்று அதிகாரத் தோரணையில் மது அவனை அழைத்தாள் .[/h][h=1]“ இந்த லூசுக்கு என்ன ஒரு அகங்காரம் , என்னை இப்படி அதிகாரமா கூப்பிடுறா . போயும் , போயும் இவளை போய் என்னை காதல் செய்ய சொன்னானே என் அண்ணன் . முதல இப்படி அதிகாரமா கூப்பிடுற வேலை எல்லாம் வேண்டாம்னு , கட் அண்ட் ரைட்டா சொல்லணும் “ என்று எண்ணிக் கொண்டே அவளை நோக்கி முறைத்துக் கொண்டே சென்றான் சிபி .[/h][h=1][/h][h=1]“ இங்க இன்னும் சில வேலை எல்லாம் பாக்கி இருக்கு , அது எல்லாம் சரியா நடக்குதான்னு பாருங்க . அப்புறம் மினிஸ்டர் வீட்டு விசேஷம் , பாதுகாப்பு எல்லாம் சரியா இருக்கணும் . இல்லைனா வேலையை விட்டு தூக்க சொல்லிருவேன் , பார்த்து நடந்துக்கோங்க “ என்று மது , அவன் பேச இடம் கொடுக்காமல் எச்சரித்து விட்டு சென்றாள் .[/h][h=1][/h][h=1]“ இவளை “ என்று பல்லை மட்டும் கடிக்க முடிந்தது அவனால் அப்பொழுது .[/h][h=1][/h][h=1]தன் அண்ணன் கூறிய வார்த்தைக்காக , அவன் இவ்வளவு தூரம் பொறுமையாக இருக்கிறான் . இல்லையென்றால் அவனுக்கு இருக்கும் பழி வெறியில் , என்ன செய்து இருப்பானோ .[/h][h=1][/h][h=1]அங்கே மேடை அலங்காரம் , மற்ற வேலைகள் எல்லாம் சரியாக நடக்குமாறு அவன் கண்ணசைவில் ஆட்களை நியமித்து விட்டு அவன் பாதுகாப்பு ஏற்பாடை கவனிக்க சென்றான் .[/h][h=1][/h][h=1]சரியாக விழா தொடங்கும் நேரத்தில் தான் , அங்கே மதுஸ்ரீ வந்து சேர்ந்தாள் . அழகிய பச்சை நிறத்தில் உள்ள , ஒரு சில்க் காட்டன் பட்டு புடவை அணிந்து , அதற்க்கு பொருத்தமான அணிகலன் அணிந்து ஒரு இளவரசி போல் நடந்து வந்தவளை பார்த்த சிபி அதிர்ந்தான் .[/h][h=1][/h][h=1]இதுவரை அவளை ஒரு சாயம் போன ஜீன்ஸ் , ஸ்கர்ட் பாவாடை , ஒரு பர்முடாஸ் என்று ஒரு ரவுடி மங்கம்மா போல் கண்ணில் ஒரு அலட்சிய பார்வை உள்ளவளை தான் பார்த்து இருக்கிறான் . இப்பொழுது புடவையில் பாந்தமாக , அதுவும் தலை முடியை நன்றாக பின்னிவிட்டு , பூ சூடி சாந்தம் தவழும் சிரித்த முகமாக இருந்தவளை பார்த்து அதிராமல் என்ன செய்வான் சிபி .[/h][h=1][/h][h=1]“ இந்த மாதிரியே எப்போவும் இருந்தா என்ன மது , இப்போ பார்கிறதுக்கு நீ அப்படியே மகாலட்சுமி மாதிரியே இருக்க “ என்று அங்கு அவளின் அன்னை கூறிவிட்டு அவளுக்கு சுத்தி போடவும் , அவள் பதிலுக்கு முறைத்தாள் .[/h][h=1][/h][h=1]“ இத்தனை நாள் அப்போ நான் பத்ரகாளியா இருந்தேன்னா என்ன அம்மா , நீங்க நலங்கு வைக்க போங்க உங்களை கூப்பிடுறாங்க அங்க “ என்று தாயை அங்கு அனுப்பிவிட்டு , பெருமூச்சு விட்டாள் .[/h][h=1][/h][h=1]பக்கத்தில் இருந்த சிபி இதை கேட்டு , அவனை அறியாமல் சிரித்து விட்டான் . அவனின் சிரிப்பு சத்தத்தில் திரும்பிய மது , அவனை பார்த்து முறைத்தாள் .[/h][h=1][/h][h=1]“ என்ன சிரிப்பு , போய் வேலையை பாருங்க “ என்று சிடுசிடுத்துவிட்டு மேடையில் தன் குடும்பத்தாருடன் நின்றாள் .[/h][h=1][/h][h=1]லக்ஷ்மியின் நிச்சய சடங்கு ஒரு பக்கம் மேடையில் நடந்து கொண்டு இருக்க , சிபி பாதுகாப்பை பலப்படுத்தி விட்டு , யாருமறியாமல் மதுஸ்ரீயின் அறைக்குள் சென்றான் . அறையை பார்த்த சிபி , ஒரு நிமிடம் அரண்டு விட்டான் .[/h][h=1][/h][h=1]“ பொண்ணுங்க அறையை சுத்தமா வச்சு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க , இங்க அப்படியே தலைகீழா ல இருக்கு . அது சரி முதல அவ ஒரு பொண்ணு மாதிரியா நடந்துக்குறா , சரியான பஜாரி மாதிரி ல இருக்கா “.[/h][h=1][/h][h=1]“ இங்க இன்னைக்கு தான் கொஞ்சம் அடக்கி வாசிச்சு இருக்கா , எப்போவும் இப்படி இருந்தா தேவலை “ என்று சிபி எண்ணிக் கொண்டே அறையை ஆராய்ந்தவன் , தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுகிட்டான் .[/h][h=1][/h][h=1]“ சிபி இது சரி வராது , முதல இங்க உனக்கு உருப்படியான தகவல் இருக்கா என்னனு பாரு “ என்று தனக்கு தானே கூறிக் கொண்டு அறையை அலச தொடங்கினான் .[/h][h=1][/h][h=1]ஒரு மணி நேரமாக அவன் அந்த அறையை அலசி இருக்கிறான் , ஆனால் அவனுக்கு தேவையான எந்த ஒரு தகவலும் அவனுக்கு கிட்டவில்லை . அங்கே விழா முடியும் தருவாயில் இருப்பதால் , உடனே அவன் அங்கே யாருமறியாமல் சென்று அவன் இடத்தில் நின்று கொண்டான் .[/h][h=1][/h][h=1]மேடையில் லக்ஷ்மி சந்தோஷமாக அவளுக்கு நிச்சயம் செய்து இருக்கும் மாப்பிள்ளை சிவநந்தனுடன் பேசிக் கொண்டு இருந்தாள் . மதுவோ அவளின் அம்மா சொல்லுக்கிணங்க , வந்து இருக்கும் விருந்தினரோடு , முகத்தில் எரிச்சல் தெரியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டு இருந்தாள் .[/h][h=1][/h][h=1]அவளுக்கு எப்பொழுது தன் அறைக்கு சென்று உறங்குவோம் என்று இருந்தது , அதனால் கண்களால் தன் தாயை தேடினாள் . அவர் அங்கே லக்ஷ்மியின் புகுந்த வீட்டு ஆட்களோடு , மும்முரமாக கல்யாணத்தன்று என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொண்டு இருந்தார் .[/h][h=1][/h][h=1]“ சரி சம்மந்தியம்மா , அப்போ நீங்க சொன்ன மாதிரியே நாம செய்திடலாம் . அப்புறம் ஒரு வாரத்துல பதிவு திருமணம் செய்துட்டு , அதை வைத்து லக்ஷ்மிக்கு விசா விண்ணப்பம் போட்டு விடலாம் . கல்யாணம் முடிஞ்சு ஒரு ரெண்டு வாரத்துல ரெண்டு பேரும் சேர்ந்தே அமெரிக்கா போயிறலாம் “ என்று வள்ளி லக்ஷ்மியின் மாமியாரோடு பேசிக் கொண்டு இருந்தார் .[/h][h=1][/h][h=1]மது அறுத்துக் கொண்டு இருக்கும் உறவினரிடம் இருந்து தப்பி ஓடி வந்து , தன் தாயை நோக்கி வந்தவளுக்கு அவர் சொன்ன அனைத்தும் காதில் விழுந்தது . அமெரிக்கா மாப்பிளை எனவும் , முதலில் அவளுக்கு தோன்றியது பயம் தான் .[/h][h=1][/h][h=1]“ ஏதோ இங்கேயே நல்ல பெரிய இடத்து மாப்பிளையா , பார்த்து கல்யாணம் பேசி இருப்பாங்க பார்த்தா அமெரிக்கா மாப்பிளையா . முதல நல்லா விசாரிக்கணும் , என்ன தான் லக்ஸ் கூட பிரச்சனைனாலும் இது அவளோட வாழ்க்கை அதனால நாளைக்கு முதல் வேலையா , இந்த சிவநந்தன் பற்றி விசாரிக்கணும் “ என்று தனக்குள்ளே முடிவு எடுத்துக் கொண்டு தாயிடம் சென்று நின்றாள் .[/h][h=1][/h][h=1]“ அம்மா நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு , அதனால நான் இப்போ சீக்கிரம் போய் தூங்க போறேன் “ என்று அவரிடம் கூறிவிட்டு , பக்கத்தில் இருக்கும் மற்ற உறவினர்களிடம் ஒரு தலையசைப்போடு விடைபெற்று விட்டு தனதறைக்கு வந்து சேர்ந்தாள் .[/h][h=1][/h][h=1]அங்கே அவளின் அறை இருந்த நிலையை பார்த்து , ஒரு நிமிடம் மலைத்து நின்றாள் . ஆனால் பின்னர் சுதாரித்துக் கொண்டு , முதலில் தன் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்று உடை மாற்றி விட்டு வந்து அறையை ஒதுக்கினாள் .[/h][h=1][/h][h=1]“ ச இதுக்கு தான் முதலிலே சுத்தமா வச்சு இருக்கணும் , அப்புறம் ரெண்டுகட்டான் வேலை எல்லாம் நாம தான் பார்க்க வேண்டி இருக்கு “ என்று அலுத்துக் கொண்டாள் .[/h][h=1][/h][h=1]கண்கள் மெல்ல சொக்கவும் , மெத்தையை நன்றாக உதறிவிட்டு நன்றாக படுத்து உறங்கி விட்டாள் . மறுநாள் சிபியோடு ஒரு இடத்திற்கு சென்றவள் அங்கே கண்ட காட்சியில் , அதிர்ந்து விட்டாள் .[/h][h=1][/h][h=1][/h][h=1]பூவின் ரகசியம் வரும் ...[/h][h=1][/h][h=1][/h]
 

Attachments

Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.