ஒரு மார்பகத்தின் ஜாதகம்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,720
Location
Germany
#1
மார்பகம் என்பது என்ன?

ந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொண்டால்தான் மார்பகத்தில் ஏற்படும் புற்று நோயையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கே தெரியும்.. பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் அனைத்தையும் கண்காணித்து அவற்றை செயல்படச் செய்வது ஈஸ்ட்ரோஜன், புரோடோஸ்ட்ரான் என்ற ஹார்மோன்கள்தான். நம் உடலுக்குள்ளேயே உலவும் ரதி - மன்மதன் அந்த ஹார்மோன்களே!

உடலுறவு நடப்பதற்கு அடிப்படையான பாலுணர்வைத் தூண்டுவதில் ஆரம்பித்து, கர்ப்பப்பைக்குள் கரு சுகமாகத் தங்குவதற்கு மென்மையான மெத்தையை அமைத்து வைப்பது வரை அனைத்தும் அவர்களின் ஏற்பாடுதான். குழந்தையைப் பிறக்க வைப்பதற்காக இத்தனை பாடுபடும் இந்த ஹார்மோன்கள், குழந்தை பிறந்த பிறகு அதற்கு உணவு வேண்டுமே என்று சிந்திக்காதா என்ன? அப்படி சிந்திப்பதன் பயன்தான் மார்பகம்

நமது உடலின் எல்லா பாகத்திலும் தோல் மூடியிருக்கிறது. தோல் முழுக்க மிக நுண்ணிய வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அந்த வியர்வை / எண்ணெய் சுரப்பிகளை எல்லாம் பிரெய்ன் வாஷ் செய்து, பால் சுரப்பிகளாக மாற்றி விடுகிறது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். ஒவ்வொரு மார்பகத்திலும் சுமார் 20 முதல் 22 சுரப்பிகள் வரை இப்படி பால் சுரப்பிகளாக மாற்றப்படுகின்றன.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். ஒவ்வொரு மார்பகத்திலும் சுமார் 20 முதல் 22 சுரப்பிகள் வரை இப்படி பால் சுரப்பிகளாக மாற்றப்படுகின்றன. பால் பயணிப்பதற்காக ஒவ்வொரு சுரப்பியும் தனக்கென ஒரு குழாயை ஏற்படுத்திக் கொள்கின்றன. அந்தக் குழாய்களின் முடிவில் ஒரு பை போன்ற அமைப்பும் உருவாக்கப்படுகிறது. இங்குதான் பால் சேமித்து வைக்கப்படும். வெளியில் உள்ள வெப்பநிலைகளால் பால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே.. அதனால், அந்த சுரப்பிகளைச் சுற்றிலும் கொழுப்பு சூழ்ந்து கொள்கிறது. இதுதான் ஒரு மார்பகத்தின் ஜாதகம்!
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,720
Location
Germany
#2
மார்பகத்தில் உள்ள செல்கள் கேன்சர் செல்களாக மாறக் காரணம்

இறுக்கமான உள்ளாடைகள், புகைப்பழக்கம், வலிநிவாரண மாத்திரைகள், எண்ணெய்ப் பதார்த்தங்கள் என்று இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமானது மன நிம்மதியின்மை, அதாவது, மன அழுத்தம். ஆம்.. எப்போதும் சோகம், கவலை என்று மௌனமாகவே இருக்கும் பெண்கள் மார்பகப் புற்று நோயை நோக்கி மெள்ள நகர்கிறார்கள் என்பதுதான் உண்மை. கேன்சர் நோயாளிகளில் 70 சதவிகிதம் பேருக்கு அந்நோய் வரக் காரணமாக இருப்பது மன அழுத்தம்தான் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மனம் விட்டு சிரித்து மன நோய் விரட்டி மார்பகம் காப்போம்
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#3
nice information....viji...
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.