ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்க&#2995

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#1
உணவுகள் தயாரிப்பில் உயர்ந்த தொழில்நுட்பம், நவீன வசதிகள் எவ்வளவு தான் வந்தாலும் நம்ம மக்கள் விலை குறைந்த உணவு பொருட்களையே நாடி செல்கிறார்கள். விலை குறைந்த உணவுகளை உட்கொள்வதால் பலவித நோய்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நோய்களுக்கு ஆகும் மருத்துவ செலவோ மிக அதிகம்.

masal.JPG

சரி இப்ப என்ன சொல்ல வர்றேன்னு நினைக்கிறிங்களா?

விலை குறைந்த உணவுகளில் தரம் எந்த அளவுக்கு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? நம் உயிரையே எடுக்கும் அளவுக்கு ஸ்லோ பாய்சனாக இருக்கும். ஆமாம், ஏனெனில் விலை குறைந்த, ரோட்டோர உணவுகளில் கலருக்காக சேர்க்கப்படும் சாய பொடிகள், தரம் குறைந்த மசாலாக்கள், பல முறை பயன்படுத்திய எண்ணெய்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்னையில் தரம் குறைந்த உணவு பொருட்கள் தெரு ஓரங்களில் விற்கப்படுவதாக (சென்னையில மட்டுமா?) சுகாதார துறைக்கு புகார் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருந்ததால் ரெய்டு நடத்தியிருக்கார்கள். இதில் அதிகம் சிக்கிய பொருட்களாக ஐஸ்கிரீம் வகைகளும், குளிர்பானங்கள், பாக்கிங் உணவுகளும் தான். சுமார் ரெண்டு டன் எடையுள்ள தரம் குறைந்த பொருட்கள் பிடிபட்டுள்ளன.

புரூட் மிச்சர் என ஒரு ஜூஸ் பேமஸ். எப்படி தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?

fr 3.JPG

எல்லா வித அழுகிய பழங்களை வெறும் கைகளால் பிசைந்து, தரம் குறைந்த தண்ணீர் சேர்த்து, சுவையை கூட்ட எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப் படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் தயாரித்த ஐஸ் கட்டிகள் உபயோகித்து குளிர வைக்கப்படுகிறது.மேலும் முதல் நாள் மீந்து போன ஜூஸ் களை புதிய ஜூஸ் களுடன் கலப்பதும் நடக்கிறது. இந்த பழ ஜூஸை நாம் அருந்துவதால் முதலில் இருமல் சளி என ஆரம்பித்து புட் பாய்சனாக மாறி பல நாட்கள் டாக்டரை பார்க்க வைக்கிறது. ஒரு பத்து ருபாய் புருட் மிச்சருக்கு ஆசைப்பட்டு பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி வருகிறது.

இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம் வகைகள் தான். வென்னிலா, ஸ்ட்ராபெரி, சாக்லேட், மேங்கோ, காசாலட், என பலவித சுவைகளில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்க படுகிறது. இந்த விதவிதமான பிளேவர்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என தெரியுமா? கலருக்காக சாய ஆசிட்களும், சுவைக்காக தரம் குறைந்த ஜெல்லி, ஜாம் என கண்ணை கவரும் பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இதனால் கான்சர் முதல் மஞ்சள்காமாலை, டைபாய்டு என உடலை பாதிக்கும் நோய்களின் பட்டியல் நீளுகிறது.

rom_eis.jpg

நம்ம ஏதாவது பொருட்கள் வாங்கனும்னு கடைக்கு போறோம். நம்ம வீட்டுல இருந்து அந்த கடை இருக்கும் இடம் வரை கொஞ்சம் ரோட்டோரத்தில் பாருங்களேன். ஒவ்வொரு போஸ்ட் மரத்துக்கும் ஒரு தள்ளுவண்டி கடை இருக்கும். ஒவ்வொரு கடையிலும் ஈ மொய்க்கிற மாதிரி மக்கள் கூட்டம் இருக்கும். அப்படி மொய்க்க அங்க தரமான உணவு பண்டங்களா இருக்கும்? இல்லை. விலை குறைவாக இருப்பதே அந்த மொய்ப்புக்கு காரணம்.

வடை, பஜ்ஜி, போண்டா எல்லாமே ஒரு ருபாய் தான், இந்த குறைவான விலைக்கு அடக்கம் ரொம்ப குறைவு. ஆமாம், ரேசன் பருப்பு, பல முறை உபயோகிக்கப்பட்ட எண்ணெய்கள், என இன்னும் நிறைய சொல்லலாம். பத்து ரூபாய்க்கு வாங்கினால் வீட்டில் எல்லோருக்கும் கிடைக்குமே. நல்ல தரமான கடைகளில் விலை ஐந்து முதல் கிடைக்கும். அங்கே வாங்கினால் நம் வரவு செலவுக்கு கையை கடிக்கும். நமது இந்த நினைப்பே ரோட்டோர கடைகளுக்கு முதலீடு.
தரமான உணவை நாடி சென்றோமானால் நம் ஆரோக்கியம் குறையாது. விலையை பார்த்தோமானால் டாக்டரிடம் விலை போக வேண்டி வரும். 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#3
Re: ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்க&a

ellorum therinjika vaendiya....information.....Anitha....
 

IRSDEVI

Citizen's of Penmai
Joined
Jun 6, 2011
Messages
520
Likes
100
Location
chennai
#4
Re: ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்க&a

Thanks for sharing.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.