ஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்' &#29

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,054
Location
Germany
#1
ஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்'

ரூ .25 ஆயிரம் தர, 200 கோடி ஒதுக்கியது அரசு


தமிழகத்தில், பணிபுரியும் பெண்களில், ஒரு லட்சம் பேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியத் தில், இந்தாண்டு இருசக்கர வாகனங்கள் வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மட்டுமின்றி, சிறு கடைகளில் வேலை செய்யும் பெண்களும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.


கடந்த, 2016 தமிழக சட்டசபை தேர்தலின் போது, 'பணியிடங்களுக்கு, மகளிர் எளிதில் செல்லும் வகையில், இருசக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவீத மானியம் வழங்கப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2017 பிப்ரவரியில், முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் பழனிசாமி, 'அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
'ஆண்டுதோறும், ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு, இருசக்கர வாகனம் வாங்க, 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவிடப்படும்' என்றும் தெரிவித்தார்; அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.


இந்த ஆண்டு, கவர்னர் உரையில், 'பெண்களுக்கான இருசக்கர வாகன மானியம்,


25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தை, ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல், முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். எனவே, திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும், இத்திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் பெற விரும்புவோர், இன்று முதல் விண்ணப்பிக்க லாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.


அனைத்து மாவட்டங்களிலும், இன்று முதல், பிப்., 5 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன; அந்த விண்ணப்பங்கள், பிப்., 10ல் ஆய்வு செய்யப்படும். பிப்., 15ல் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தில், எளிதில் இயங்கக்கூடிய, கியர் இல்லாத அல்லது தானியங்கி கியர் வசதி உடைய, விருப்பமான இருசக்கர வாகனங்களை வாங்கலாம். மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்ட, இருசக்கர வாகனங்கள் வாங்கலாம். வாகனத்தின் விலையில், 50 சதவீதம் மானியம் அல்லது, 25 ஆயிரம் ரூபாய் என, இதில், எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.


சொந்த முதலீடு அல்லது வங்கி கடன், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து பெற்று, இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும். 125 'சிசி'க்கு மிகாமல், மோட்டார் வாகன சட்டம், 1988ன் கீழ் பதிவு செய்யக் கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். கடந்த, 1ம் தேதிக்கு பின் உற்பத்தி செய்யப்பட்ட, புதிய மாசு ஏற்படுத்தாதவாகனமாக இருக்க வேண்டும். மாவட்டங்களில், கலெக்டர் தலைமையிலான குழுவும், சென்னை மாநகராட்சியில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலான குழுவும், பயனாளிகளை தேர்வு செய்யும். இத்திட்டத்தில் பயன்பெற, ஏராளமான விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு கிடைக்கும்?

* கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி


அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில், இதற்கான விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்


* தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இங்கு வசிக்கும், 18 முதல், 40 வயதிற்குட்பட்ட, வேலை செய்யும் மகளிர் பயன் பெறலாம்


* ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பெண்களின் ஆண்டு வருமானம், 2.50
லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்


* குடும்ப தலைவி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பினர், திருநங்கையர் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்


* விண்ணப்பதாரர்கள், வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ், பணிபுரிவதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், புகைப்படம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்றால், அதற்கான ஜாதிச் சான்று; மாற்றுத்திறனாளி என்றால், அரசின் அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.