ஒற்றை தலைவலி நீங்க

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
ஒற்றை தலைவலி நீங்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால்தானே தெரியும் என்ற வார்த்தைகளில் எவ்வளவு உண்மையுள்ளது. அதுவும் ஒற்றைத் தலைவலி வருபவர்களின் வேதனை சொல்லி மாளாது.

மூளையில் நரம்பு மண்டலத்திற்கும் வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையில் ஏற்படும் மாற்றத்தினால் தலைவலி ஏற்படும். இந்த மாற்றத்திற்கு மன மற்றும் வேலை அழுத்தம், மசாலா கலந்த உணவு ஆகியவை முக்கிய காரணங்கள்.


இதனை அப்போதைக்கு தீர்வு காண, மாத்திரைகள் சாப்பிடுவார்கள். ஆனால் அவை சிறு நீரகத்தை பாதிக்கும். வந்த பின் தீர்வு காண்பதை விட வராமல் பாதுகாக்கலாம் எப்படியென்றால், நல்ல உணவு முறையை பின்பற்றி வந்தால் தலை வலி வராமல் தடுக்கலாம்.

கீரை வகைகள் :
கீரைகளில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இவை ஒற்றை தலைவலியை குணப்படுத்தும். நரம்புகளி உள்ள இறுக்கத்தை தளர்த்தும். புத்துணர்வை தரும்.

மீன் :
ஒமேகா 3 வகை கடல் உணவுகள் ஒற்றை தலைவலி வராமல் காக்கும். ஒற்றைத் தலைவலியால் உண்டாகும் பாதிப்புகளை சரிப்படுத்திவிடும்.

தானியங்கள் :
தானியங்களில் அதிக நார்ச்சத்தும், ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் கனிம சத்துக்களும் உள்ளது. இவை தலைவலிகளை உண்டு பண்ணாமல் தடுக்கும். அதிக தானிய உணவுகளை எடுத்துக் கொண்டால், தலைவலி வராது.

இஞ்சி :
தலைவலியைப் போக்கும் நிவாரணி இஞ்சி . அது வலியை மரத்துப் போகும் மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இஞ்சியை தட்டி, நெற்றியில் பத்து போட்டுக் கொள்ளலாம். அல்லது இஞ்சி டீ அருந்தினால் விரைவில் புத்துணர்வு கிடைக்கும்.

பால் :
பால் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது.பாலிலுள்ள ரைபோஃப்ளேவின் தலைவலியை குறைக்கும். நரம்புகளுக்கு ஊட்டம் தரும்.

ஆளி விதை :
ஆளிவிதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இவை நார்ச்சத்தும் கொண்டுள்ளது. கடும் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும்.


புருக்கோலி :
புருக்கோலியில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. தலைவலியை குறைக்கும் ஆற்றல் கனிம சத்துக்களுக்கு உள்ளது. புருக்கோலி சாலட் செய்து அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பை சேர்த்து சப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#2
useful info dear enakku rombah thevana info tfs...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.