ஒற்றை தலைவலி - Migraine

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
ஒற்றை தலைவலிஉலகில் 70 சதவீதம் பெண்கள், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவதாக ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. முறையான வழிகாட்டுதல், சிகிச்சைகள் இல்லாததாலும், இருந்தும் எடுத்துக் கொள்ளாததாலும் பலர் இத்தலைவலியால் அவதிப்படுகின்றனர். இதனால், பக்கவாதம் உட்பட வேறு ஆபத்தான நோய்களுக்கு ஆட்பட்டு சிரமப்படுகின்றனர்.

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போது தான் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படுகின்றது.

தலைக்கு செல்லும் நரம்புகள் சுருங்கி ரத்த ஓட்டம் தடைப்படுவதால் தான் ஏற்படுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. புதிய கண்டு பிடிப்புகளின் படி, மூளையை சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால் தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.

கணவன்- மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75 சதவிகித வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால், 50 சதவீத வாய்ப்பு உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது. அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்கு சில வழிகள் உள்ளன.

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும்.

இதனால், நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது. தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள், காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகி விட்டது. அதனால், நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி தான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால், மூளை நன்கு செயல்படத் துவங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி வராது. அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால், இவற்றைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

இது போன்று ஒற்றைத் தலைவலி அல்லது பொதுவான தலைவலி அடிக்கடி வரும் போது, மருத்துவரை அணுகித் தான் மருந்து சாப்பிட வேண்டும். தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் அல்லது தலைவலிக்கு மருந்துக் கடைகளில் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் முறையானது அல்ல. அதிகளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால், மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.