ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு சொல்லிக் கொ&#2975

#1
ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு 18 வயது ஆவதற்கு முன்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய 7 முக்கியமான விஷயங்கள்!

குழந்தைகள் வளர வளர, மகன் என்றால் தந்தையிடம் அதிக நெருக்கம் காண்பிப்பான் என்றும் மகள் என்றால் தாயிடம் அதிகம் நெருக்கம் காண்பிப்பாள் என்றும் பலரும் கருதி வருகின்றனர். இருப்பினும், இந்த நம்பிக்கைக்கு மாறாக, தாய்மார்களும் மகன்களும் ஒரு விசேஷ பந்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

மகன்கள் தங்கள் தந்தையை முன்மாதிரியாக கருதி வளர்ந்தாலும், அவர்கள் தங்களின் தாயின் சொல்லை தான் அதிகமாக கேட்பார்கள். குழந்தைகளை வளர்க்கும் தாய் தான் குழந்தைகளின் நேசத்திற்கு அதிகமாக ஆளாகிறவர்கள்.

மகன்களை வளர்ப்பதிலும் மகள்களை வளர்ப்பதிலும்
சற்று
வித்தியாசங்கள் உள்ளன. அதற்கு காரணம், ஆண்களின் சிந்தனை, விருப்பங்கள் மற்றும் நடத்தை முறைகள் பெண்களிடம் இருந்து வேறுபாடும்.

பெரும்பாலான பையன்கள் தங்களின் 5 வயது முதலே மிகவும் குறும்புத்தனத்துடன் துறு துறுவென இருப்பார்கள். அதனால் அவர்களை வளர்ப்பதில் தாய்மார்கள் தங்களை தாங்களே தயார்படுத்திக்கொள்ள வேண்டி வரும்.

வளரும் பையன்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன; குறிப்பாக இந்த காலகட்டத்தில், அதாவது பாலினத்தை ஒரு காரணமாக காட்டாமல் நாம் அனைவரும் முன்னோக்கி நடக்கும் நேரத்தில்.

அதனால் ஒரு தாயாக, உங்கள் பையனுக்கு 18 வயது முடிவடைவதற்குள் அவனுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாமா!

1. ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு பாலின சமத்துவத்தை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அதே போல், சமையல் மற்றும் வீட்டு வேலைகள் என்பது பெண்களுக்கு மட்டுமே என்ற சில மாறா நிலையான கருத்துக்களை அவர் மனதில் தகர்த்தெறிய முயற்சி செய்ய வேண்டும்.

2. உங்கள் மகனுக்கு 12 வயது தொடங்கியது முதலே, அவனுக்கு நீங்கள் அடிப்படை சமையல் ஆற்றல்களை கற்றுக் கொடுக்க தொடங்குங்கள். சமையல் என்பது ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை ஆற்றலாகும்.

3. எந்த ஒரு சூழ்நிலையிலும் உடல் ரீதியான வன்முறை என்பது கண்டிப்பாக தவறு என்பதை ஒரு தாய் தன் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

4. பெண்களிடம் எப்படி மரியாதையுடன் நடந்து கொள்வது மற்றும் அவர்களை எப்படி சரிசமமாக பார்ப்பது என்பதை பற்றி தாய்மார்கள் தங்கள் மகன்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

5. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகன்கள் அழும் போதோ அல்லது உணர்ச்சிகளை கொட்டும் போதோ அவர்களை கடிந்து கொள்வார்கள். இப்படி செய்வதால் அவர்களின் வாழ்க்கையில் பின்னாட்களில் உளவியல் ரீதியான கோளாறுகள் ஏற்படலாம். தன் உணர்வுகளை கொட்டி தீர்க்க வேண்டும் என்னும் பொது அழுவது ஒன்றும் தவறில்லை என்பதை உங்கள் மகன் தெரிந்து கொள்ளட்டும்.

6. பல நேரங்களில், பையன்கள் என்றால் ஆஜானுபாகுவான முரட்டுத்தனுடன் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் பிறரிடம் எப்படி அன்புடனும் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு தாய் தன் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

7. சமையலுடன் சேர்த்து, வீட்டு வேலைகள், கருவிகளை கொண்டு வேலை செய்தல், முதலுதவி போன்ற பிற வாழ்க்கை ஆற்றல்களையும் ஒரு தாய் தன் மகனுக்கு கற்றுத் தர வேண்டும்.

 
#3
Re: ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு சொல்லிக் கொ&a

good information .TFS .................but now a days mothers are very busy
 

saza

New Member
#6
Re: ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு சொல்லிக் கொ&a

arumaiyaana seithi...:thumbsup
 

Important Announcements!