ஓட்டமா? நடையா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஓட்டமா? நடையா?


இதயம் காப்போம்

அதிகாலையில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.

அண்மையில் வெளிவந்த மருத்துவ சர்வே ஒன்றிலோ, நடப்பதை விட காலையில் ஓடுவதே இதயத்துக்கு நலம் பயக்கும் என தெரிவித்திருந்தது. ஓடுதல், நடத்தல் - இரண்டில் இதயத்துக்கு நல்லது எது? இதயநல மருத்துவர் ஜாய்.எம்.தாமஸிடம் கேட்டோம்.

``ஓடுவதை விட சற்று வேகமாக நடக்கும் பிரிஸ்க் வாக்கிங் (Brisk walking) அதிக பலன் தரும். ஒருமணி நேரத்துக்கு 5-6 கிலோமீட்டர் தொலைவு நடப்பவர்களுக்கு இதயம் நல்ல முறையில் இயங்கும். தசைகளும் வலுப்படும். இது ஓடுவதை விட அதிக பலன்கள் தரக்கூடியது. மூட்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் வராது. கால்களில் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

ஓடுபவர்கள் அதற்கு ஏதுவான டீ ஷர்ட், சாக்ஸ், கால்களுக்கு தகுந்த ஷூக்களை அணிவதும் முக்கியம். அப்போதுதான் தடையின்றி ஓட முடியும். இல்லாவிட்டால் குதிகால்களில் வலி ஏற்பட வாய்ப்புண்டு. வெறும் கால்களிலோ, சாதாரண செருப்பு அணிந்தோ ஓடக்கூடாது. காற்றில் இருந்து கால்கள் தரை நோக்கி வரும் அழுத்தத்தினால் குதிகால் எலும்புகளில் முறிவு ஏற்படக்கூடும். வேகமாக ஓட இயலாதவர்கள் மெதுவாக ஓடலாம். மெது ஓட்டமும் பயன் தரும்.

காற்றோட்டம் மிக்க பூங்காவிலோ, கடற்கரை ஓரங்களிலோ, மைதானங்களிலோ ஓடலாம். ஓடும் தளம் சமமாக இருக்க வேண்டும். சிமென்ட், காங்க்ரிட் கற்கள் பதித்த கடினமான தரையில் ஓடுவதைத் தவிர்த்துவிடுங்கள். முதியவர்களுக்கு நடைப்பயிற்சி நல்ல பலன் தரும். காலை, மாலை என இரண்டு வேளைகளும் தலா அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்து வரலாம். வெளியில் நடக்க முடியாதவர்கள் வீட்டில் டிரெட்மில் இருந்தால், அதில் நடக்கலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு வேக நடை நல்ல பயன் தரும்.

நடக்கும் போது தேவைக்கு அதிகமாக உடலில் உள்ள குளுக்கோஸை தசைகள் எடுத்துக்கொள்வதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். தினமும் சரியான முறையில் உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓடுவதையோ, நடப்பதையோ வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

40 வயதுக்கு குறைவானவர்கள் தசைகளையும் மூட்டுகளையும் வலுப்படுத்தும் பயிற்சிகளை தினமும் செய்துவர வேண்டும். எவ்வளவு தூரம் வாழ்க்கையில் நடக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்கள் ஆயுளும் நீடிக்கும் என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சிகரெட், மது இல்லாத வாழ்க்கை, சத்தான இயற்கை காய்கறிகள், கனிகள் உண்பதையும் வழக்கமாக்கிக் கொண்டால், இதய நலத்துக்கு ஒரு குறையும் வராது.’’

ஓடுவதை விட சற்று வேகமாக நடக்கும் பிரிஸ்க் வாக்கிங் அதிக பலன் தரும். ஒரு மணி நேரத்துக்கு 5-6 கிலோமீட்டர் தொலைவு நடப்பவர்
களுக்கு இதயம் நல்ல முறையில் இயங்கும். தசைகளும் வலுப்படும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.