ஓட்ஸ் என்னும் அரக்கன்..

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#1


இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.
ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் கொஞ்சம் ஐரோப்பிய நாடுகளிலும் விளையும் ஒரு பயிர்.அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. சில கிராம் மட்டுமே (ஒரு ஸ்பூன்) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டும் குணம் மட்டுமே இதற்கு உண்டு.
அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் க்கு சமம். ஒரு கிலோ ராகி மாவு 35 ரூபாய். 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய்.
எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது இல்லை )ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை உள்ளது. சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் ,மருத்துவர் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கிவிட்டன.[குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட். குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்ததுபோல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.]
அங்கிருந்து இங்கு வர ஆகும் எரிபொருள் செலவு, MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை நம் தலையில் கட்டுகின்றன.
அதைவிட ராகி,கம்பு,சோளம்,திணை,வரகு,சாமை .. எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு.
சிந்தியுங்கள்...
 

Attachments

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#2
நாகரீகம் என்ற பெயரில் புண்ணாக்கை தின்னுட்டு திரியிறாங்க ....Rolling on the floorRolling on the floor
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Correct thaanga. Ana Rathi sonna mathiri namma sonna yaaru ketpa. Verum sakkai la enna satthu irukkum idhula OATS aa oru perumai kaga sappiduravangalum irukkanga hmm
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S
#6
இதெல்லாம் சொன்னா யாரு கேட்பாங்க க்கா...
இங்கல்லாம் இது ஒரு பேஷனா ஆகிடுச்சு... காலையில என்ன ப்ரேக்பாஸ்ட்னு கேட்டா, ஓட்ஸ் சாப்பிட்டோம்னு சொல்லுறதை பெருமையா நினைக்கிறாங்க நம்ம மக்கள்... என்னத்தை சொல்லுறது....??
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,234
Likes
5,305
Location
Puducherry
#10
Super information namba ninaicha mudiathathu illa ithai thapunu solrathaivida namba unava perumaia puriavakanum namba kidsuku ena avangathan etirgalam ragi,kambu,solam,thinai,varagu vachi differenta tastya samaikanum sapda vakanum.Hi 5
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.