ஓல்ட் ஏஜ் டிப்ரஷன் (Old Age Depression

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#1
. ஓல்ட் ஏஜ் டிப்ரஷன் (Old Age Depression

"வருடக்கணக்கில் பதவி, அந்தஸ்து, மரியாதை என்றே வளைய வந்தவர்கள், அதை இழக்கும்போது ஏற்படும் இயல்பான மனநல பாதிப்புதான் இது. ஓல்ட் ஏஜ் டிப்ரஷன் (Old Age Depression) எனப்படும் இந்த வயதானோரின் மனக்கவலை, அவர்களை பீடித்த அல்லது அப்படி அவர்களாக கற்பித்துக் கொள்ளும் வெறுமையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்களால் உணரப்படுகிறது.

இதுவே... மத்திம வயதுடையவர்கள் தங்களது உடல் அவயங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பீதியைக் கிளப்பி, அவற்றைத் தீர்மானமாக நம்பும் மனநல பாதிப்பை, சொமோட்டோபோஃர்ம் டிஸ்ஆர்டர் (Somatoform Disorder) என்கிறோம்.

நம்முடைய கலாசாரத்தில் மனநலப் பிரச்னைகளை உள்ளது உள்ளபடியே சொல்லும் வழக்கம் ஏனோ கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை உடல் நலப் பிரச்னைகளாகவே அடையாளம் காண்பார்கள்.

அதீத மனக்கவலை, சிறிய வேலைக்குக்கூட களைப்பு, எதிலும் ஈடுபாடற்ற போக்கு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பசியின்மை, தன்னம்பிக்கையின்மை எனத் தொடரும் இவர்களது பாதிப்புகளின் உச்சமாக தற்கொலை முயற்சியும்கூட இருக்கும். இவர்களுக்கு 'சைக்கோ தெரபி' எனப்படும் மனநல சிகிச்சைதான் ஒரே வழி.

மரபுசார் காரணங்கள்,
தனிப்பட்ட ஆளுமை சார்புள்ள காரணங்கள்,
மூளையில் உள்ள முக்கிய ரசாயனங்களில் ஏற்படும் சீரற்ற மாற்றங்கள்

என பல அடிப்படையான விஷயங்களோடு சம்மந்தப்பட்டவரின் குடும்பச் சூழல், உண்மையான உடல்நிலை இவற்றையும் பரிசீலித்து மனநல மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.

நான்கு முதல் எட்டு வாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைக்கும். இதற்கு குடும்பத்தாரின் பொறுமையான அணுகுமுறை அவசியம்.

சிகிச்சைக்குப் பின்னர்...
இசை கேட்பது,
வளர்ப்பு பிராணிகள்,
நண்பர்கள்,
குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது,
தனக்குப் பிடித்த பகுதி நேர பணியைச் செய்வது,
விரும்பிய பயணங்களை மேற்கொள்வது
, பயனுள்ள பொழுதுபோக்கு,
பொதுநலன் சார்ந்த சேவைகள் உள்ளிட்ட தன் மதிப்பை உயர்த்தும் செயல்களில் ஈடுபடுவது
போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

மனநலத்தை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பது, புதிதாக எதையேனும் கற்பது, பிறருக்கு சொல்லித் தருவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

பொதுவாக, ஓய்வுக் காலத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள இளம்வயதிலிருந்தே சேமிப்பதுபோல, மனரீதியாகவும் தயாராகும் பக்குவம் இருப்பின்... இம்மாதிரி பிரச்னை எழ வாய்ப்பிருக்காது!"
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.