ஓவர்நைட் ஓட்ஸ்! இதென்ன கலாட்டா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஓவர்நைட் ஓட்ஸ்! இதென்ன கலாட்டா?


உணவே மருந்து

காலை உணவு சமைக்க நேரமில்லாமல், கார்ன் ஃப்ளேக்ஸை பாலில் போட்டுக் குடித்துவிட்டு அரக்கப் பறக்க ஓடுகிறவர்கள் இப்போது கையில் எடுத்துள்ள உணவு `ஓவர்நைட் ஓட்ஸ்’. இரவே ஒரு பெரிய தம்ளர் பாலில் ஓட்ஸை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். காலையில் அந்த ஓட்ஸை சாப்பிடுகிறார்கள். அமெரிக்காவில் பிரபலமாக இருந்த இந்தப் பழக்கம் இப்போது நம் நாட்டுக்கும் வந்துவிட்டது.

அவ்வப்போது சமைத்து சாப்பிடு வதே ஆரோக்கியம் எனப் பழகிய நமக்கு, இந்த ஓவர்நைட் ஓட்ஸ் கலாசாரம் உகந்ததா? உடலுக்கு ஆரோக்கியமானதுதானா? ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா விக்ரம் விளக்குகிறார்...

``வெளிநாடுகளில் காலை உணவை சமைக்க சோம்பேறித்தனப்பட்டவர்கள் அதற்கு மாற்றாக சில முறைகளை ஏற்படுத்தினார்கள். அதில் ஒன்றுதான் இந்த ஓவர்நைட் ஓட்ஸ் பழக்கம். சாப்பிட எதுவும் இல்லாத நிலையில் இதை சாப்பிடலாம். மற்றபடி, ஓட்ஸில் நார்ச்சத்து தவிர எதுவுமில்லை என்பதுதான் உண்மை.

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு ஓட்ஸ். கலோரிகள் குறைவு என்பதால், பருமனை குறைக்க முயல்பவர்கள் ஓட்ஸை சாப்பிடுகிறார்கள். ஓட்ஸில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் தினமும் சாப்பிடக் கூடாது. உடலுக்கு தேவையற்ற பொருளான க்ளூட்டனும் ஓட்ஸில் அதிகம் உள்ளது.

வெளிநாடுகளில் க்ளூட்டன் இல்லாத ஓட்ஸ் கிடைக்கிறது. நமது நாட்டில் கிடைப்பதில்லை. க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் ஓட்ஸை எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் அதிகமாக சேரும் க்ளூட்டன் கொழுப்பில் சென்று பசை போல ஒட்டிக்கொள்ளும். இதனால் பருமன் குறையாது. கொழுப்புகளும் கரையாது.

ஓவர்நைட் ஓட்ஸ் முறையில் முந்தைய நாள் இரவே ஓட்ஸை பாலில் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு காலையில் எடுத்து சாப்பிடுகிறார்கள். இதனால் எந்தப் பயனும் கிடையாது. ஓட்ஸ் உடன் ஸ்ட்ராபெர்ரி, வால்நட், முந்திரி என கலந்து சாப்பிடுபவர்களும் உண்டு. இவர்கள் ஓட்ஸ் கூட எடுத்துக் கொள்ளும் மற்ற உணவுகளின் மூலம் புரதம், வைட்டமின் ஆகிய சத்துகள் கிடைத்துவிடுகின்றன.

இதனோடு ஓட்ஸில் இருந்து மாவுச்சத்தும், நார்ச்சத்தும் கிடைத்து விடுவதால் சமச்சீர் உணவாக மாறிவிடுகிறது. அதற்காக பாலும் ஓட்ஸும் கலந்த கலவையில் சர்க்கரையை போட்டு பாயசம் போல சாப்பிட்டால் எந்தப் பயனும் இருக்காது. கலோரி அதிகமுள்ள உணவாகிவிடும்.

பாலில் கலந்து சாப்பிடுவதற்கு பதிலாக தயிரில் அல்லது மோரில் ஓட்ஸை ஊற வைத்து சாப்பிடுவது அதிக பயன் தரும். இதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க தேவையில்லை. குளிர்சாதனப் பெட்டியில் ஓட்ஸை வைத்து சாப்பிட்டால் முழுமையான சத்துகள் கிடைக்காது. இரவில் ஊற வைத்து காலையில் ஓட்ஸை சாப்பிட நினைப்பவர்கள் வெறும் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு ஓட்ஸை ஊற வைக்கலாம். வைட்டமின்கள் அப்படியே கிடைக்கும்.

பழங்கள் மற்றும் பருப்பு வகைகளுடன் ஓட்ஸை சாப்பிடும் போதுதான் அது முழு பயனையும் அளிக்கும். ஆனாலும், தினமும் சாப்பிடாமல் ஒருநாள் விட்டு மறுநாள் என்ற கணக்கில் வாரத்துக்கு அதிகபட்சம் 3 நாட்கள் சாப்பிடலாம். கார்ன் ஃப்ளேக்ஸை பாலில் போட்டு சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அதில் கார்போஹைட்ரேட் தவிர எதுவுமில்லை.

ஆனாலும், நிறைய சத்துகள் இருப்பதாக விளம்பரம் செய்து மக்களை நம்ப வைத்தார்கள். இப்போது ஓட்ஸ் புதிய அவதாரம் எடுத்துள்ளது. இதை காலையில் சாப்பிட்டால் எல்லா சத்துகளும் கிடைத்துவிடும் என விளம்பரம் செய்கிறார்கள். கார்ன் ஃப்ளேக்ஸுடன் ஒப்பிடுகையில் ஓட்ஸில் நார்ச்சத்து இருப்பதால் நல்லது எனலாம். ஆனாலும், ஓட்ஸும் அத்தியாவசிய உணவு கிடையாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

காய்கறிகள், பழங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்வதுதான் ஆரோக்கியமானது. வெளிநாடுகளில் வெறும் பிரெட் டோஸ்ட், கொஞ்சம் ஓட்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்களே என சிலர் கேட்கலாம்.

நன்றாக கவனித்து பார்த்தால் பிரெட் டோஸ்ட், காய்கறிகள் சாலட், கொஞ்சம் பழத்துண்டுகள், ஒரு அவித்த முட்டை, க்ரீன் டீ என அவர்களது காலை உணவு சமச்சீரானதாகவே இருக்கும். எனவே, கார்ன் ஃப்ளேக்ஸ், ஓட்ஸ் பாக்கெட்டுகளை தூர வைத்து விட்டு காய்கறிகள், கீரைகளை முறையாக சமைத்து சாப்பிட்டாலே நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.’’

ஓட்ஸில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் தினமும் சாப்பிடக் கூடாது. உடலுக்கு தேவையற்ற பொருளான க்ளூட்டனும் ஓட்ஸில் அதிகம் உள்ளது. க்ளூட்டன் இல்லாத ஓட்ஸ் நம் நாட்டில் கிடைப்பதில்லை. க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் ஓட்ஸை எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் அதிகமாக சேரும் க்ளூட்டன் கொழுப்பில் சென்று பசை போல ஒட்டிக்கொள்ளும். இதனால் பருமன் குறையாது...
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.