''கட்டாந்தரையில் படுக்கலாமா ?

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,302
Likes
20,720
Location
Germany
#1
''கட்டாந்தரையில் படுக்கலாமா ?

பொதுவாக மனித உடலானது பல வளைவுகளையும் நெளிவு சுளிவுகளையும் உள்ளடக்கியது. அதிலும் நமது முதுகுத் தண்டுவடம் s வடிவத்தில் அமைந்திருக்கும். நாம் தரையில் படுத்து உறங்கும் நேரத்தில் அது தன்னை நேராக்கிக் கொள்ள முயற்சி செய்யும். இது நமக்கு அசவுகர்யத்தை அளிக்கும். ஆனால், அதே நேரத்தில் நாம் மெத்தையில் படுக்கும்போது தண்டுவடத்தின் வளைவுகள் ஏற்படுத்தும் வெற்றிடம் மெத்தையால் நிரப்பப்படும். இதனால், ஒரு நிம்மதியான சவுகரியமான உணர்வு ஏற்படும். முதுகு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ளும்.

பழங்கால மக்கள் தரையில் படுத்து மட்டுமே பழகி இருந்ததால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் வந்தது இல்லை. ஆனால், புதிதாக இதை முயற்சி செய்வோருக்கு முதுகுப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே புதிதாகத் தரையில் படுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

சிறு வயது முதல் தரையில் படுத்துப் பழக்கப்பட்டு அது வசதியாகவும் இருக்கும் பட்சத்தில் தாராளமாக இதே பழக்கத்தை தொடரலாம். எனினும் பெட் ஷீட் போன்று ஏதாவது ஒரு துணியை விரித்துப் படுப்பது தரையின் குளுமையில் இருந்து பாதுகாப்பதோடு உடலையும் சற்று நேராக வைத்திருக்க உதவும்.''
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
பகிர்வுக்கு நன்றி ...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.