கணபதி அருளைப் பெறுவதற்கான விரதங்கள்

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
விளம்பி ஆண்டில் பித்ரு விரத பூஜைக்கு உகந்த நாட்கள்

1526818984351.png

ஸ்ரீ விளம்பி ஆண்டில் மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் பூஜை செய்வதற்குரிய நாட்கள் விவரம் வருமாறு:-

ஜூன் 5 - செவ்வாய்
ஜூன் 13 - புதன்
ஜூன் 15 - வெள்ளி
ஜூன் 17 - ஞாயிறு
ஜூன் 20 - புதன்
ஜூன் 22 - வெள்ளி
ஜூன் 25 - திங்கள்
ஜூன் 27 - புதன்
ஜூன் 30 - சனி
ஜூலை 10 - செவ்வாய்
ஜூலை 11 - புதன்
ஜூலை 13 - வெள்ளி
ஜூலை 16 - திங்கள்
ஜூலை 21 - சனி
ஜூலை 23 - திங்கள்
ஆக. 3 - வெள்ளி
ஆக. 7 - செவ்வாய்
ஆக. 8 - புதன்
ஆக. 9 - வியாழன்
ஆக. 13 - திங்கள்
ஆக. 16 - வியாழன்
ஆக. 17 - வெள்ளி
ஆக. 20 - திங்கள்
ஆக. 22 - புதன்
ஆக. 23 - வியாழன்
ஆக. 24 - வெள்ளி
ஆக. 27 - திங்கள்
செப். 3 - திங்கள்
செப். 5 - புதன்
செப். 12 - புதன்
செப். 17 - திங்கள்
செப். 20 - வியாழன்
செப். 23 - ஞாயிறு
செப். 25 - செவ்வாய்
செப். 27 - வியாழன்
செப். 28 - வெள்ளி
செப். 30 - ஞாயிறு
அக். 1 - திங்கள்
அக். 2 - செவ்வாய்
அக. 3 - புதன்
அக். 6 - சனி
அக். 7 - ஞாயிறு
அக். 9 - செவ்வாய்
அக். 11 - வியாழன்
அக். 12 - வெள்ளி
அக். 18 - வியாழன்
அக். 21 - ஞாயிறு
அக். 26 - வெள்ளி
நவ. 4 - ஞாயிறு
நவ. 6 - செவ்வாய்
நவ. 7 - புதன்
நவ. 16 - வெள்ளி
நவ. 20 - செவ்வாய்
நவ. 22 - வியாழன்
நவ. 23 - வெள்ளி
நவ. 29 - வியாழன்
டிச. 4 - செவ்வாய்
டிச. 6 - வியாழன்
டிச. 14 - வெள்ளி
டிச. 16 - ஞாயிறு
டிச. 18 - செவ்வாய்
டிச. 22 - சனி
டிச. 25 - செவ்வாய்
டிச. 28 - வெள்ளி
டிச. 30 - ஞாயிறு
ஜன. 2 - புதன்
ஜன. 10 - வியாழன்
ஜன. 13 - ஞாயிறு
ஜன. 15 - செவ்வாய்
ஜன. 17 - வியாழன்
ஜன. 20 - ஞாயிறு
ஜன. 21 - திங்கள்
ஜன. 27 - ஞாயிறு
ஜன. 28 - திங்கள்
பிப். 4 - திங்கள்
பிப். 12 - செவ்வாய்
பிப். 13 - புதன்
பிப். 14 - வியாழன்
பிப். 17 - ஞாயிறு
பிப். 19 - செவ்வாய்
பிப். 26 - செவ்வாய்
பிப். 27 - புதன்
மார்ச் 6 - புதன்
மார்ச் 12 - செவ்வாய்
மார்ச் 15 - வெள்ளி
மார்ச் 17 - ஞாயிறு
மார்ச் 18 - திங்கள்
மார்ச் 20 - புதன்
மார்ச் 23 - சனி
மார்ச் 27 - புதன்
மார்ச் 28 - வியாழன்
மார்ச் 29 - வெள்ளி
மார்ச் 30 - சனி
மார்ச் 31 - ஞாயிறு
ஏப். 1 - திங்கள்
ஏப். 4 - வியாழன்
ஏப். 6 - சனி
ஏப். 8 - திங்கள்
ஏப். 10 - புதன்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
வெற்றிகளை வழங்கும் விசாகத் திருநாள் விரதம்

1526883708141.png


நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும். குமரனை வழிபட்டால் குறைகள் அகலும். கார்த்தி கேயனை வழிபட்டால் கவலைகள் பறந்தோடும். கந்தப்பெருமானை வழிபட்டால் கைநிறையப் பொருள் குவியும்.

அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான தெய்வம் முருகக்கடவுள் ஆவார்.

‘காவடிகள் உன்னைத் தேடி ஆடி வரும்!
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும்!
சேவடியே சரணம் என வாழ்பவர்க்கே
செல்வநலம் தந்தருள்வான் கந்தவேலன்!’
என்று கந்தன்பதிகம் எடுத்துரைக்கின்றது.

அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபட நமக்கு வைகாசி விசாகம் வழிகாட்டுகின்றது.

அந்தச் சிறப்பு மிக்கத் திருநாள், 28.5.2018 (திங்கட்கிழமை) அன்று வருகின்றது. அன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும்.

இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்குச் சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.

ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான்!
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
ஆதார மான பெருமான்!

என்று முருகப்பெருமானை கவியரசு கண்ணதாசன் வர்ணிப்பார். வள்ளியை மணந்ததால், வள்ளலானார் முருகப்பெருமான். அந்த முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் செந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண் டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். பால் அபிஷேகம் செய்தால் பாவங் கள் தீரும். நல்லெண்ணெய்யால் அபிஷேகம் செய்தால் நல்லன யாவும் நடந் தேறும். விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்!

சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால், சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சிந்தனைகள் வெற்றி பெறும். இளநீரால் அபிஷேகம் செய்தால் இனிய சந்ததிகள் உருவாகும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை நிலவும். திருநீரால் அபிஷேகம் செய்தால் திக்கெட்டும் புகழ்பரவும் வாய்ப்பு கிட்டும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்தால் அரசு வழி ஆதரவு கிடைக்கும்! சொர்ணத்தால் அபிஷேகம் செய்தால் சுகங் களும், வாகன யோகமும் வந்து சேரும்! பன்னீரால் அபிஷேகம் செய்தால் செல்வாக்கு உயரும். தேனால் அபிஷேகம் செய்தால் தித்திக்கும் சங்கீத ஞானம் கிட்டும்.

இல்லத்து பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடுபவர்கள் விநாயகப் பெருமான் படத்தையும் இணைத்து வைத்து அதற்கு முன்னால் ஐந்துமுக விளக்கு ஏற்றி, ஐந்து எண்ணெய் ஊற்றி, ஐந்து விதமான பழங்களை நைவேத்தியமாக்கி, ஐந்துவிதமான பூக்களை மாலையாக தொடுத்து, முருகப்பெருமானுக்கு அணிவித்து அவனுக்குப் பிடித்த மாம்பழத்தையும், கந்தரப்பத்தையும் வைத்துக் கவச பாராயணத்தை பாடி வழிபடலாம். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது நம்பிக்கை. மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான்.

கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது “வேலை” வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றைத் தானமாகக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி செல்லுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று நிம்மதியைக் காணுங்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
விரதமிருந்து கணபதி ஹோமம் செய்ய உகந்த நாட்கள்

1526968075158.png

ஸ்ரீ விளம்பி ஆண்டில் விரதமிருந்து விநாயகர் பூஜை மற்றும் வீட்டில் விநாயகர் ஹோமம் செய்வதற்கு உகந்த நாட்கள் விவரம் வருமாறு:-

மே 25 - வெள்ளி
ஜூன் 3 - ஞாயிறு
ஜூன் 4 - திங்கள்
ஜூன் 6 - புதன்
ஜூன் 10 - ஞாயிறு
ஜூன் 17 - ஞாயிறு
ஜூன் 25 - திங்கள்
ஜூன் 28 - வியாழன்
ஜூலை 1 - ஞாயிறு
ஜூலை 2 - திங்கள்
ஜூலை 27 - வெள்ளி
ஆக. 1 - புதன்
ஆக. 3 - வெள்ளி
ஆக. 14 - செவ்வாய்
ஆக. 16 - வியாழன்
ஆக. 17 - வெள்ளி
ஆக. 29 - புதன்
ஆக. 30 - வியாழன்
ஆக. 31 - வெள்ளி
செப். 12 - புதன்
செப். 13 -வியாழன்
செப். 20 - வியாழன்
செப். 23 - ஞாயிறு
அக். 11 - வியாழன்
அக். 19 - வெள்ளி
அக். 28 - ஞாயிறு
அக். 29 - திங்கள்
அக். 31 - புதன்
நவ. 4 - ஞாயிறு
நவ. 9 - வெள்ளி
நவ. 11 - ஞாயிறு
நவ. 14 - புதன்
நவ. 18 - ஞாயிறு
நவ. 23 - வெள்ளி
நவ. 25 - ஞாயிறு
நவ. 26 - திங்கள்
டிச. 2 - ஞாயிறு
டிச. 12 - புதன்
டிச. 13 - வியாழன்
டிச. 14 - வெள்ளி
டிச. 27 - வியாழன்
டிச. 31 - திங்கள்
ஜன. 11 - வெள்ளி
ஜன. 13 - ஞாயிறு
ஜன. 21 - திங்கள்
ஜன. 23 - புதன்
ஜன. 24 - வியாழன்
ஜன. 27 - ஞாயிறு
பிப். 1 - வெள்ளி
பிப். 8 - வெள்ளி
பிப். 9 - சனி
பிப். 10 - ஞாயிறு
பிப். 11 - திங்கள்
பிப். 15 - வெள்ளி
பிப். 17 - ஞாயிறு
பிப். 18 - திங்கள்
பிப். 22 - வெள்ளி
பிப். 24 - ஞாயிறு
மார்ச் 3 - ஞாயிறு
மார்ச் 10 - ஞாயிறு
மார்ச் 13 - புதன்
மார்ச் 17 - ஞாயிறு
மார்ச் 18 - திங்கள்
மார்ச் 22 - வெள்ளி
மார்ச் 31 - ஞாயிறு
ஏப். 10 - புதன்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
பரிகாரங்கள்

மனித வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது. எல்லோரும் எப்போதுமே மகிழ்ச்சியாகவும் இருந்து விடுவதில்லை. துன்பத்தில் சிக்கி அல்லல்படுவதும் இல்லை. இன்பத்தையும், துன்பத்தையும் மாறி, மாறி அனுபவிப்பதே மனிதவாழ்வு. ஆனால் துன்பம் வரும்போது, இறைவனை நாடிச் சென்று முறையிடுவோரின் எண்ணிக்கை ஏராளம். தடை, தாமதங்களுக்கு இங்கு எளிய பரிகாரம் தரப்பட்டுள்ளது.

துன்பங்கள் நீங்க..

ஏதாவது ஒரு வளர்பிறை செவ்வாய்க் கிழமை அன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பசுவுக்கு வாழைப் பழம் வாங்கிக் கொடுத்து வர வறுமை நீங்கும். செல்வ நிலை உயரும்.

தொழில் விருத்தியாக..

கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சைப் பழம் ஒன்று வாங்கி, கடை மற்றும் அலுவலகம் முழுவதும் சுற்றி விட்டு, வெளியில் நின்று நான்கு துண்டாக நறுக்கி, தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். இவ்வாறு செய்வதால், கடை மற்றும் அலுவலகத்தில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும். இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்வது நல்லது.

திருமணத்தடை விலக..

திருமணத்தடை இருப்பவர்கள், நல்லெண்ணெய் தேய்த்தும், கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்தும் குளிக்கவும். பின்னர் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். வறுமை நீங்குவதற்கும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் கூட இதைச் செய்யலாம். ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தைச் செய்யவும்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
விளம்பி ஆண்டில் வரும் நவராத்திரி விரத நாட்கள்

1527073972528.png

ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவராத்திரிகளும், விரதம் இருக்க வேண்டிய நாட்களும் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இதர நவராத்திரிகள்

வராகி நவராத்திரி - ஆனி மாதம் 29-ந் தேதி (13.7.2018) வெள்ளிக்கிழமை முதல் ஆடி மாதம் 5-ந்தேதி (21.7.2018) சனிக்கிழமை வரை.

சியாமளா நவராத்திரி - தை மாதம் 22-ந்தேதி (5.2.2019) செவ்வாய்க்கிழமை முதல் மாசி மாதம் 2-ந்தேதி (14.2.2019) வியாழக்கிழமை வரை.

வசந்த நவராத்திரி - பங்குனி மாதம் 23-ந்தேதி (6.4.2019) சனிக்கிழமை முதல் பங்குனி மாதம் 30-ந்தேதி (13.4.2019) சனிக்கிழமை வரை.

நவராத்திரி

நவராத்திரி ஆரம்பம் - புரட்டாசி 24 (10.10.2018) புதன்கிழமை
பத்ரகாளியஷ்டமி - பத்ரகாளி அவதார நாள் புரட்டாசி 30 (16.10.2018) செவ்வாய்க்கிழமை
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - ஐப்பசி 1 (18.10.28) வியாழக் கிழமை
ஆயுத பூஜை செய்ய - காலை 9.30 முதல் 10.30 வரை, பகல் 12.30 முதல் 1.30 வரை
விஜயதசமி - ஐப்பசி 2 (19.10.2018) வெள்ளிக்கிழமை
மறு பூஜை செய்ய - அதிகாலை 5.00-6.00, காலை 8.00 - 9.00
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
திதிகளில் வணங்க வேண்டிய பிள்ளையார்

1527160154949.png

திதிகளுக்கு உகந்த பிள்ளையாரை வணங்கினால் நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் எந்த திதியில் எந்த பிள்ளையாரை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பிரதமை - பாலகணபதி
துவிதியை - தருண கணபதி
திருதியை - பக்தி கணபதி
சதுர்த்தி - வீர கணபதி
பஞ்சமி - சக்தி கணபதி
சஷ்டி - துவிஜ கணபதி
சப்தமி - சித்தி கணபதி
அஷ்டமி - உச்சிஷ்ட கணபதி
நவமி - விக்ன கணபதி
தசமி - ஷப்ர கணபதி
ஏகாதசி - ஹேரம்ப கணபதி
துவாதசி - லட்சுமி கணபதி
திரயோதசி - மகா கணபதி
அமாவாசை - விஜய கணபதி
பவுர்ணமி - கிருத்தகணபதி
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ரிஷி பஞ்சமி விரதம்

1527160252363.png

விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.

அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.

பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சப்த ரிஷிகளுக்கு நைவேத்தியம் செய்ததை, 7 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும்.

மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சவுபாக்கியம் கிடைக்கும்.

இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இந்த தானங்கள் செய்யப்படுவது, நம்முடைய வாழ்விலும், விரதங்களைக் மேற்கொள்ளும் போதும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே ஆகும்.

கோ-தானம் (பசு அல்லது தேங்காய்), பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை), தில தானம் (எள்), ஹிரண்யம் (பொன்னாலான நாணயம்), வெள்ளி நாணயம், நெய், வஸ்திரம், நெல், வெல்லம், உப்பு ஆகியன. ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை, வஸ்திரம், தீபம், கும்பம், மணி, புத்தகம் ஆகியன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
சிறப்பான விரதத்தின் முதற்படி

1527314594470.png

விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம்.

வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது.

ஆனால் இது விரதத்தின் முதற்நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும்.

உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ‘விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
விரதமிருந்து வைகாசி விசாகம் வழிபடும் முறை

1527480687884.png

இன்று (திங்கட்கிழமை) வைகாசி விசாக திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர்.

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.
இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

விசாக நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும். பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம்

சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும் எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால் பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை-எளியவர்களுக்கு தானம் கொடுப்பது நல்லது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
வைகாசி மாத பவுர்ணமி விரதம்

1527659731378.png

வைகாசி மாத பவுர்ணமி அன்று முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.

விரதமிருப்பவர்கள் வைகாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

வைகாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

இந்த நாளில் விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடேரும்.

இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.