கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#1
இன்ப வாழ்வை விரும்பாதவர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன! ''அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறோம். கிடைக்க மாட்டேன் என்கிறதே!'' என்று சிலர்- அல்ல அல்ல, பலர் கூக்குரலிடுவது கேட்கத்தானே செய்கிறது! என்ன காரணமாக இருக்க முடியும். ''பிரச்சனைதான்''
''பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை, பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை'' என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எதிலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம். அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம்.
ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி! திருமணம் முடித்தவர்கள் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது மிகப்பெரியசாதனை தான்.
"இல்லவே இல்லை நாங்கள் இதுநாள் வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்''எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள்.
ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது. இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` என்பது பழமொழி.


 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#2
தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதைக் காண்கிறோம். இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.


இவ்விஷயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம்.
 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#3
ஒரு கப் தேனீர் கூட கணவன் மனைவிக்கிடையிலுள்ள பிரச்சனைகளை சரி செய்துவிடும். ஆம்! தினசரி மனைவி கணவனுக்கு தேனீர் போட்டுக்கொடுக்கும் வழமைக்கு மாறாக சில தினங்கள் கணவன் அந்த காரியத்தை செய்யும்போது மனைவிக்கு உண்டாகும் சந்தோஷத்தில் அத்தனை பிரச்சனைகளும் கூட அடிபட்டுப்போகலாம்.
கணவன்-மனைவி இரு தரப்பினருள் எந்தத் தரப்பினரும், தான் அடுத்த தரப்பினரைவிட முக்கியத்துவத்தில், தரத்தில் குறைந்தவர் என எண்ணிவிடக் கூடாது. ஒவ்வொருவரது பணியும் பங்களிப்பும் அடுத்த தரப்பினருக்கு மிகவும் அவசியம். மனைவி தனது கணவனுடன், குடும்பத்துடன் சிறந்த முறையில் உறவாடு வதற்கான மிக முக்கியமான பண்புகளாவன அன்பு, இளகிய உள்ளம், பாசம், பரிவு, பணிவு, கணவனது பணிக்காக செலுத்தும் நன்றி என்பனவாகும்.
கணவனுக்காக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும், கணவனின் சொத்து, செல்வங்களை பாதுகாத்துக் கொள்வதும் அதனை வீண்விரயம் செய்யாதிருப்பதும் அவளது முக்கிய கடமைகளாகும். அவ்வாறே அல்லாஹுத்தஆலா அவளுக்கு அருளிய வற்றில் அவள் திருப்தியுறுவதும் அவளது பொறுப்பாகும். மிகக் கடுமையான சோதனைகள், கஷ்ட ங்களின்பொழுது கணவனுக்கு உதவி ஒத்துழைப்பதும், அவனது இரகசியங்களை மறைப்பதும், அவனுக்கு மிகச் சிறந்த, தூய்மையான முறையில் நன்றி உபகாரம் செய்வதும் அவளது முக்கிய கடமைகளுள் அடங்கும்.
அதேபோல் கணவனை மிகவும் கண்ணியப்படுத்துவதுடன் அவனை நல்ல முறையில் (வெளியில் சென்று திரும்பும் போது) வரவேற்பதும், மிக அழகான வார்த்தைககளை தேர்ந்தெடுத்து அவனோடு உறவாடு வதும், மனைவியின் கடமை. தன்னை தனது மனைவி புகழ்வதை பொதுவாக கணவன் விரும்புவான். அத்தகைய நல்ல புகழ்மாலைகளை-போலிகளின்றி-அவனுக்கு சூடுவதும் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வதும் அவன் விரும்புகின்ற அனைத்தையும் அறிந்து புரிந்து நடப்பதும் மனைவிக்குரிய தலையாய கடமையாகும்.
 

vaishnav

Commander's of Penmai
Joined
Jan 21, 2012
Messages
1,819
Likes
2,148
Location
Thanjavur
#4
nalla thagavalgal pagirndhamaiu nandri.........
 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#5
nalla thagavalgal pagirndhamaiu nandri.........
thanks for your FB...
hope wil be much useful for you in future :thumbsup
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,533
Location
Hyderabad
#6
HI Guruji

remba nall inraya fast lifekku miga miga thevaiyana karuthhu

yellarum ithai follow pannina life remba inimaya irukkum

thanks for sharing
 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#7
Thanks Uma....
yes yes. Unmai Unmai..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.