கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் ப&#3007

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் பிரச்சனை வருமா?

பொருளாதார பிரச்சனையினாலும், விலைவாசி உயர்வினாலும் தற்போதைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

ஐ.டி என்ற இரண்டெழுத்து, இந்த பிரச்சனைக்கு லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தீர்வளித்தது. கை நிறைய சம்பளம் சந்தோஷமான வாழக்கை என்று அவர்களை மகிழ வைத்தது. ஆனால், ஐடி. மட்டுமல்லாது எந்த ஒரு அலுவலகமாக இருந்தாலும் கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் வேலை செய்தால் ஒரு சில பிரச்சனைகள் கண்டிப்பாக எழும்.

சம்பளம், பதவி உயர்வு, மரியாதை என்று பல வில்லன்கள் இதற்கு காரணமாக இருப்பார்கள். இது போக சக ஊழியர்களின் பார்வை என பல பிரச்சனைகள் எழுகின்றன. இது போக ஒரு சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன.

* வேலை செய்யும் இடத்தில் திடீரென மனைவிக்கு பதவி உயர்வு அல்லது மதிப்பு கூடும்படியான ஏதேனும் ஒரு விஷயம் நடந்தால் கணவன்மார்கள் கொஞ்சம் வருத்தம் அடைய தான் செய்வார்கள்.

* இந்திய தம்பதியினர் மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை, மனைவியை விட கணவன் தான் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது.

* அழகான மனைவிகள் கொண்டுள்ள ஒவ்வொரு கணவனுக்கு அன்றாடம் ஏற்படும் பயம் தான் இது. அதிலும், ஒரே இடத்தில வேலை செய்தால் கண்காணிப்பதே ஒரு வேலையாகிவிடும்.

* ஓர் உறவில் விரிசல் ஏற்படுகிறது என்றால் அதற்கு 90% காரணமாக இருப்பது இந்த சந்தேக பிரச்சனை தான். அலுவலகத்தில் யாரவது ஓர் ஆணுடன் கொஞ்சம் அதிகமாக பேசினால் கூட கணவன்மார்களால் தாங்கிக் கொள்ள முடியாது. உடனே சந்தேகத்தில் மூழ்கிவிடுவார்கள்

* ஒரே முகத்தை வீட்டிலும், அலுவலகத்திலும் என 24 மணி நேரமும் ஓயாமல் பார்க்க முடியாது அல்லவா.

* ஒரே இடத்தில் வேலை செய்வதனால் ஏற்படும் ஓர் முக்கியமான நன்மை என்னவெனில் பெட்ரோல் செலவு அதிகமாக குறையும். மற்றும் பிக்கப், ட்ரோப் என்ற அலைச்சல்கள் இருக்காது.

* ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர் என்றால் தினந்தோறும் காலை கொஞ்சம் கடுகு வெடிப்பது போல தான் இருக்கும். கணவன் ஒரு நேரத்தில் கிளம்ப வேண்டும், மனைவி ஒரு நேரத்தில் கிளம்ப வேண்டும், இதற்கு நடுவில் குழந்தைகள். ஆனால், இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்தால் இந்த பிரச்சனையே இருக்காது.

* ஆண்கள் எப்போதுமே ஒருவேளையாவது மனைவியின் சமையலில் இருந்து தப்பித்து மதியம் உணவகத்தில் சாப்பிடலாம் என்று இருப்பார்கள். ஆனால், மனைவியும் ஒரே இடத்தில வேலை செய்யும் போது இருவரும் ஒன்றாக தான் சாப்பிட வேண்டும். அதனால், மனுஷன் தப்பிக்க முடியாது.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் ப&a

:bigsmile: Good share
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#4
Re: கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் ப&a

நல்லதொரு தகவல்..;);)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Re: கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் ப&a

ha...ha...ha...nice analysis
 

pet

Friends's of Penmai
Joined
Mar 28, 2012
Messages
303
Likes
360
Location
cochin
#6
Re: கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் ப&a

Ha .ha.. Possessiveness is not avoidable in love.
 
Joined
Sep 25, 2015
Messages
79
Likes
126
Location
chennai
#7
Re: கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் ப&a

ha ha ha........appo ore eduthula work pannalama kudatha :) :)
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#8
Re: கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் ப&a

ha ha ha good sharing lakshmi..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.