கணவரிடம் மனைவி ஒருபோதும் சொல்லக்கூடாத ர&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கணவரிடம் மனைவி ஒருபோதும் சொல்லக்கூடாத ரகசியங்கள்


உண்மை நல்லதுதான் செய்யும். ஆனால் திருமணமான பெண்கள், தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து உண்மைகளையும் கணவரிடம் கூறினால், அது வாழ்கைக்கு ஆபத்தாகிவிடும். அதனால் பெண்கள் தங்கள் பழைய உண்மைகளை ரகசியமாக வைத்துக் கொள்வதுதான் நல்லது.

‘கணவன்– மனைவிக்கு இடையே எந்த ரகசியமும் இருக்கக்கூடாது’ என்ற தார்மீக வரம்பினை திருமணத்திற்கு பின்புதான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். கணவரிடம் சொல்லக் கூடாத ரகசியங்கள் என்னென்ன?

இளம் பருவ காதல் என்பது இப்போது சகஜமாகிவிட்டது. அது பல நேரங்களில் அறியாப் பருவத்து தவறுகளாகவும் மாறிவிடுகிறது. அவைகளால் ஏற்பட்ட விளைவுகள் எதுவும் நிகழ்காலத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். பெண்கள், கணவரிடம் மனந்திறந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு கடந்த கால கசப்புகளை எல்லாம் சொல்லி விடக்கூடாது. அவற்றை சொல்லும்போது கணவர் மனதில் ‘இது மட்டும்தானா? இதுக்கு மேலும் இருக்குமா?’ என்ற கேள்விகள் மட்டுமல்ல, கற்பனைகள் நிறைந்த இன்னும் ஏராளமான கேள்விகளும் அவர் மனதில் முளைக்கத் தொடங்கிவிடும்.

ஒருவேளை பின்னால் அந்த உண்மைகள் தெரிந்துவிட்டால், ‘ஏன் இதை என்னிடம் முதலிலே சொல்லவில்லை என்று கேட்பாரே! அதற்கு என்ன பதில் சொல்வது?’ என்ற கோணத்தில் இப்போதே சிந்திக்காதீர்கள். எல்லா ஆண்களையும், மண வாழ்க்கை தொடங்கிவிட்ட சில காலத்திலே மனைவிகளால் புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்ட பிறகு அந்த சூழ்நிலைக்கு ஏற்ப, ரகசியங்களை சொல்லலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்துகொள்ளலாம்.

அவசரப்பட்டு எதையும் சொல்லிவிட வேண்டாம் என்பதுதான் இதன் கருத்து. ஆரம்பத்தில் ஆண்கள் அனைவருமே மனைவிகளிடத்தில் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் மிக இனிமையானதாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கசப்புகளை அப்போது சொன்னால், தனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் சிதைந்து போய்விட்டதாக கணவர் கருதி விடக்கூடும். அதனால் இருவருக்கும் இடையே பிணைப்பு ஏற்படுவதற்கு பதில், நெருடல் உருவாகிவிடும்.

அழகு, படிப்பு, பணம் சார்ந்த கர்வம் பெண்களிடமும் உண்டு. ‘கல்லூரியிலே நான்தான் அழகு. அதனால் மாணவர் வட்டம் எப்போதும் என்னைத்தான் சுற்றிக்கொண்டிருக்கும்’ என்பதுபோல் கணவரிடம் கதைவிட்டுவிடக்கூடாது. ‘அத்தனை பேர் சுற்றியதால், இவள் அவர்களில் யாராவது ஒருவரிடமாவது காதல்வசப்பட்டிருக்கத்தானே செய்வாள்!’ என்ற சிந்தனை அவருக்கு வந்துவிடும். ‘ஒருவேளை இனியும் அப்படி யாராவது சுற்றினால் என்ன செய்வது?’ என்ற கவலையும் உருவாகிவிடும்.

அதுபோல் உடன் படித்தவர்கள், உறவுக்கார இளைஞர்களை கணவரிடம் புகழ்ந்தும் பேசிவிடக்கூடாது. அது எப்போதாவது ஒரு கட்டத்தில் கணவருக்கு எரிச்சலை உண்டு பண்ணும். நேரடியாக அது வெளிப்படாவிட்டாலும் மறைமுகமாகவாவது வெடிக்கும். கணவரது நண்பர்களிடம், கணவரை பற்றி குறை சொல்லக்கூடாது. கணவரின் நண்பர்களை தனியாக சந்திப்பதோ, அனாவசியமாக அவர்களுடன் பேசுவதோ தவிர்க்கப்பட வேண்டும்.

அதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அந்த நபர்கள் அந்தரங்கமாக பழக முயற்சிக்கக்கூடும். பெற்றோரின் குடும்பத்தில் சில ரகசியங்கள் இருக்கலாம். அவை ரகசியமாகவே இருந்துவிட்டு போகட்டும். அதை ஒருபோதும் வெளிப்படுத்தவோ, நியாயம் கற்பிக் கவோ முன்வராதீர்கள். வேலைபார்க்கும் பெண்கள் தங்கள் அலுவலக ரகசியங்களையும் கணவரிடம் வெளிப்படுத்தக்கூடாது.

மற்றவருக்கு கிடைக்கவிருக்கும் பதவி உயர்வு, மாற்றல், சம்பள உயர்வு, புதிய நியமனம், கம்பெனி ஒப்பந்தங்கள், டெண்டர் போன்ற விஷயங்களை ஆழமாக பகிர்ந்து கொள்ளவேண்டியதில்லை. அவை எல்லாம் கணவருக்கு தெரிந்து அவர் மூலம் வேறு ஒருவருக்கு தெரிந்து பின்னர் உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு செய்தி வரும்போது அலுவலகத்தில் உங்கள் மரியாதை குறையும்.
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#2
Re: கணவரிடம் மனைவி ஒருபோதும் சொல்லக்கூடாத &#29

unmai,unami,unami, nice info, thanks for sharing lakshmi.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Re: கணவரிடம் மனைவி ஒருபோதும் சொல்லக்கூடாத &#29

முற்றிலும் உண்மை .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.