கணவரைப் புரிந்து கொள்வது எப்படி? - How to Understand your husband?

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் , புதிதாகத் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமல்லாமல் , அனைத்து மனைவிகளுக்கும் உபயோகமாக இருக்கக்கூடிய குறிப்புகளாகும் .


கல்யாணம் முடிந்தவுடன் கணவன் மனைவி இருவருக்கும் தங்கள் மணவாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளும் அதே சமயம் மற்றவர்களின் அனுபவங்களைக் கூறக் கேட்டதால் ஏற்படக்கூடிய சிற்சில பயங்களும் இருப்பது சகஜமே .

ஆரம்ப நாட்களில் ஒருவரை ஒருவர் ஈர்க்க இருவருமே ஒத்துப் போவார்கள் . ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இந்த அட்ஜஸ்ட்மென்ட் குறையக்கூடும்.
இதுதான் கூடாது . இந்த அட்ஜஸ்ட்மென்ட் வாழ்நாள் முழுமைக்கும் தொடர வேண்டும் . அப்போதுதான் ஒரு சிறந்த மணவாழ்க்கையை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் நினைக்கலாம், “நான் எதற்காக என் ஆசைகளை குறைத்துக் கொண்டு என் கணவரின் விருப்பப்படி நடக்க வேண்டும்” என்று ...ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . அதுவரை உங்கள் பெற்றோருடன் ....அதாவது உங்களை விட வயதில் மிகவும் பெரியவர்களை , பிறந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு இருப்பவர்களுடன் பற்பல சண்டைகள் இட்டுக்கொண்டு இருந்தாலும் , அவர்கள் உங்களுக்காக விட்டுக்கொடுத்து இருப்பார்கள் . அதே உங்கள் கணவரானவர், கிட்டத்தட்ட உங்கள் வயதினர் , ஒரு புது நபர் , பெற்றோரைக் காட்டிலும் இவருடனே நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியவை மிக அதிகம் ...இதையெல்லாம் மனதில் கொண்டே செயல்படவேண்டும் .

இதை மேற்கொள்ள மனைவிகள் தங்கள் கணவன்மார்களை எவ்வாறு புரிந்துகொண்டு சமாளித்து நல்லதொரு மணவாழ்க்கையை வாழலாம் என்பதனை கீழ்கண்ட குறிப்புகள் மூலம் காணலாம் . பெண்களால் ஆகாதது எதுவுமே இல்லை .

இது,
Tips to have good relations/understanding with your Husband, இந்தத் திரியில் நான் குறிப்பிட்டுள்ளவற்றின் தமிழாக்கம் .
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
1.முதலாவதாக ,நீங்கள் உங்கள் கணவரை விட அதிகம் படித்தவராக இருந்தாலோ அல்லது அவரை விட அதிக சம்பளம் வாங்குபவராக இருந்தாலோ , அதற்குறிய கர்வமோ தலைக்கனமோ சிறிதளவும் இருக்கக் கூடாது . அதை ஒருபோதும் அவரிடமோ அல்லது மற்றவரிடமோ காண்பிக்கவும் கூடாது . இந்த விஷயத்தில் அவரது மனம் நோகும்படி ஏற்பட்டாலோ , தன்னை உங்களை விடத் தாழ்வாக எண்ணினாலோ , நீங்கள் உங்கள் நிலைமையையும், ஒரு போதும் நீங்கள் அவரை விட உங்களை உயர்வாக எண்ண மாட்டீர்கள் என்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும் ..


2.உங்களது விருப்பங்களை அவருக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுதல் மிகவும் நலம் பயக்கும் . அவற்றையே உங்களது விருப்பமாகவும் மாற்றிக் கொள்ளலாம் . ஒருவேளை இவ்வாறு மாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும் , உங்கள் விருப்பத்திற்கேற்ப அவரை மாறச்சொல்லி வற்புறுத்தாதீர்கள் . இவையெல்லாம் திருமணம் ஆன உடனே வரக்கூடிய மாற்றங்கள் இல்லை . போகப்போக சில வருஷங்களிலேயே ஒருவருக்கொருவர் மற்றவர் விருப்பத்திற்கேற்ப நடக்க முற்பட்டு வெற்றியும் காண்பீர்கள் .

3. டிவி பார்ப்பதில் அவருக்கு விருப்பமான நிகழ்ச்சிகளையும், அவருடன் சேர்ந்து நீங்களும் பார்க்கலாம் . உதாரணத்திற்கு , விளையாட்டு , அரசியல் போன்றவை உங்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் , அவருடன் உட்கார்ந்து சில நாட்கள் பார்த்துக் கொண்டு இருந்தாலே , உங்களுக்கு புரியாதவற்றை சொல்லித்தர அவரும் முன்வருவார் . இதனால் மேலும் சில வருஷங்களிலேயே, அவருடன் விவாதம் அல்லது இவ்விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விடுவீர்கள் . தனக்காக தன் மனைவி இதை விரும்புகிறாள் என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் .

4. அட்லீஸ்ட், அவர் மிகவும் ஆர்வமாக ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நீங்கள் சேனலை மாற்றாமல் இருப்பது மிகவும் அவசியம் . இந்த சமயத்தில் உங்களது வேறு வேலைகளை நீங்கள் கவனிக்கலாம் . இப்படிச் செய்வதன் மூலம் , அவரும் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியை பார்க்க மனமுவந்து விட்டுக்கொடுப்பார் .

5. அதே போல அவருக்கு விருப்பமான திரைபடத்திற்கோ அல்லது வேறு இடங்களுக்கோ தடைசொல்லாமல் நீங்கள் சென்றால் , அடுத்தமுறை அவரும் உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு அழைத்துச் செல்வார் .

6. அவரது கல்வித்தகுதியையோ , தற்போது பார்த்துக்கொண்டு வேலையைப் பற்றியோ, அவரை அவருடைய நண்பர்களுடனோ அல்லது வேறு உறவினர்களுடனோ எப்போதுமே ஒப்பிட்டு பேசாதீர்கள் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
7. அவர் வேலைக்கு கிளம்புமுன், அவருக்குத் தேவையானவற்றை – உடைகள் , கைப்பேசி மேலும் சில- நீங்கள் எடுத்து வைத்துவிடலாம் . காலையில் எழுந்ததும், அவருக்குத் தேவையானவற்றை ஒரே இடத்தில் சேகரிக்கச் சொல்லிவிடலாம் . இதனால் எதையும் மறந்து போகாமல் எடுத்துச் செல்ல முடியும் . எப்போதுமே எதை எடுத்தாலும், அவைகளை அதே இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கத்தை அவருக்குக் கற்றுத்தந்து விடவும் . இதனால் தேடும் நேரம் , வேலைகள் மிச்சம் . முதல் சில நாட்கள்/மாதங்கள், அவருக்கு இந்தப் பழக்கம் கைவரவில்லை என்றாலும், சண்டையிடாமல் , நீங்களே அதை குறிப்பிட்ட இடங்களில் வைத்து எடுத்துக் கொடுத்தால் , தன்னால் அந்தப் பழக்கம் வந்துவிடும் .

8. மற்றவர்கள் முன் ஒருபோதும் அவரை மட்டம்தட்டி பேசவே பேசாதீர்கள் . அவருடைய குறைகளை யார்முன்னும் யாரிடமும் சொல்லாதீர்கள் . இவற்றை அவரிடமே , நீங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது மட்டுமே பேசி , அந்த குறைகளை களைந்து கொள்ளுமாறு சொல்லுங்கள் . இதையும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கக் கூடாது . மற்றவர் முன் அவரது நல்ல குணங்களை மட்டுமே சொல்லுங்கள் .

9. திருமணத்திற்குப் பிறகான எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் மறைக்கவே கூடாது . சின்ன விஷயத்தைக் கூட மறைத்தால், உங்கள் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புண்டு . எல்லாவற்றையும் அவருடன் கலந்தாலோசித்தே செயல்படுங்கள் .

10.அவர் ஏதாவது புது பிஸினெஸ் ஆரம்பிக்க ஆசைப்பட்டால் , உடனே அதை தடை செய்யாதீர்கள். முதலில் நம்பிக்கையூட்டும் விதமாகவே பேசுங்கள் .கூடவே அதன் சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லுங்கள் . அப்போதுதான் அவருக்கும் வேறு ஒரு கோணமும் கிடைக்கும் .

11.எப்போதுமே நல்ல ஒரு ஆலோசகராக, மந்திரியாக இருங்கள் .

12.அவர் ஏதேனும் ஒரு விஷயத்தை உங்கள் விருப்பதிற்கு ஏற்ப செய்யவேண்டும் என நீங்கள் விரும்பினால், அதை திணிக்காமல், சண்டையிடாமல் சுமுகமாக தெரிவியுங்கள்.அதன் சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லுங்கள் . ஒருவேளை அதை அவர் எதிர்த்தால், அதற்கு என்ன காரணம் என்பதை காதுகொடுத்து கேளுங்கள்.பின்னர் அதை பற்றி விவாதித்து இருவருமாக சேர்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் .

13. அவர் ஏதேனும் குழப்பத்தில்/டென்ஷனில் இருந்தால், நீங்கள் மேலும் பேசி புது குழப்பங்கள் எதையும் உண்டுபண்ணி விடாதீர்கள் . என்ன விஷயம் என்பதை பொறுமையாகக் கேட்டு, ஆதரவாகப் பேசினாலே நன்மை பயக்கும் . இந்த சமயத்தில், போகிறப்போக்கில் ஒரு மெல்லிய அணைப்பு அவருக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கும். மன ஆறுதலை அளிக்கும் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4

14. நீங்கள் இருவரும் எந்த வயதில் இருந்தாலும், தனிமையில் இருக்கும்போது,அவ்வப்போது “ஐ லவ் யூ” என்ற வார்த்தையை சொல்வது, உங்கள் மணவாழ்க்கையை பலப்படுத்தும், ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் முக்கிய செயலாகும் .

15. இதை வாய்வார்த்தையால் தெரிவித்தால் மட்டும் போதாது . நீங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் எல்லா செயல்களிலும் இந்த அன்பும் அக்கறையும் வெளிப்பட வேண்டும் .

16. அவருக்கு எப்போதும் உங்கள் தாய்மை கலந்த அன்பு தேவைப்படும் . இதை மறுக்காமல் வழங்கிடவும் .

17. தம்பதிகளுக்குள் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன்னர், தங்களுக்குள் சண்டைகள் ஏதேனும் இருப்பின், அவற்றைப் பேசி சரிசெய்து விட்டே படுக்கவேண்டும். எப்போதுமே படுக்கையிலும் உங்கள் சண்டை தொடரக் கூடாது .
எந்த ஒரு சண்டையின் கால அளவும்,அதற்குப் பிந்தைய பிணக்கும் அரை மணியிலிருந்து 1 மணி நேரத்திற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு .

18. அவர் கோபத்தில் ஏதாவது கத்தினால், நீங்களும் உடனே பதிலுக்கு கத்திவிடாமல், ஒரு கிளாஸ் தண்ணீரை அவருக்குத் தரவும் . அதை குடித்தவுடன் அவரது கோபம் உடனே மட்டுப்படும் . இதற்குப் பிறகு , அந்த விஷயத்தைப் பற்றிய உங்கள் அபிப்ராயங்களை எடுத்துச் சொல்லவும் .

19. உங்களுக்குள் ஏற்படும் சண்டையின் காரணக்கர்தாவாக அவரே இருந்தாலும், நீங்கள் முதலில் சமாதானக் கொடியை பறக்கவிடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை . நீங்கள் இவ்வாறு செய்வதைப் பார்த்து , அடுத்தமுறை அவரே இம்முறையை பின்பற்றலாம் .

20. இருவரும் ஒருவரை ஒருவர் மன்னிக்கத் தயங்கவே கூடாது .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
21.அவ்வப்போது உங்கள் வழக்கமான அலுவல் வேலைகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளும் விதமாக, ஒரு சிறிய இடைவெளியாவது எடுத்துக் கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள் .

22. தேவையற்ற ஆடம்பரங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். அது ஆபரணமோ, வீட்டுப் பண்டங்களோ, உடைகளோ எதுவாக இருந்தாலும் தேவையில்லாமல் வாங்கி, பணத்தையும், வீட்டின் இடத்தையும் வீணடித்தால், கண்டிப்பாக உங்கள் கணவர் அதை விரும்பவே மாட்டார்.

23. தினப்படி குடும்பம் நடத்துவதற்கோ, அல்லது சின்னச் சின்ன விஷயங்களுக்கோ கடன் வாங்கியாவது அதை செயல்படுத்துவதை செய்யவே செய்யாதீர்கள் .உங்கள் வரவுக்குத் தக்கவாறே செலவு செய்து, சிக்கனமாக குடும்பம் நடத்தினால்,வாழ்வாங்கு வாழலாம் .

24. அவரது பெற்றோர், உடன்பிறந்தவர்கள் பற்றி எப்போதும் அவரிடம் குறையாகச் சொல்லாதீர்கள். குறைந்தபட்சம் திருமணமான சில வருடங்களுக்காவது இதைக் கடைபிடிக்க வேண்டும் . அதற்குப் பிறகு அவர்களால் மிகப் பெரிய அளவில் தொல்லைகள் இருந்தால், அவற்றை சமயம் பார்த்து மெதுவாக அவர் காதில் போட்டால், அவருக்கும் உண்மை நிலவரங்கள் புரிந்து அதற்கேற்ப செயல்படுவார் .இதை விட்டுவிட்டு அடிக்கடி குற்றப்பத்திரிகை படித்துக் கொண்டிருந்தால், அவர் உங்கள் பேச்சுக்களுக்கு காது கொடுப்பதையே நிறுத்தி விடுவார். முக்கியமான விஷயமாக, உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்களை, அவருடையவர்களுடன் ஒப்பிட்டு பேசவே செய்யாதீர்கள்.

25. பரிசுகள் வழங்கும்போது, உங்கள் பெற்றோர், உடன்பிறந்தோர் போலவே, அவருடையவர்களுகும் சமமான அளவில் வழங்குங்கள். ஒருபோதும் கூடக்குறைய செய்யாதீர்கள் .

26. அவருக்கு கெட்ட குணங்கள்/ பழக்கங்கள் ஏதேனும் இருப்பின், அதை உங்கள் குழந்தைகளிடம் குறையாகச் சொல்லாதீர்கள். பிற்காலத்தில் அவர்கள் அவரை மதிக்கவே மாட்டார்கள் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6

27. அக்கம்பக்கத்தவர், நண்பர்கள், இவர்களிடம் அல்லது இவர்களுக்கு, கடன் கொடுப்பதோ வாங்குவதோ, இதில் எதையும் கணவருக்குத் தெரியாமல் செய்யவே செய்யாதீர்கள்.

28. கணவருடைய ஆண் நண்பர்கள் யாரிடமும் நெருங்கிப் பழகாதீர்கள். கணவர் இல்லாத நேரத்தில் அவர்களை வீட்டிற்கு வரவேற்காதீர்கள் .

29. கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்திலும், செய்யும் பணியில் நஷ்டம் ஏதேனும் ஏற்பட்டாலும், அவரை ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக்கொண்டு ஆறுதலளியுங்கள். இந்த சமயங்களில் மிகவும் பூஞ்சை மனம் கொண்டவர்களாக அவர்கள் மாறிவிட வாய்ப்புண்டு.

30. குடும்பத்தில் உங்கள் ஆதிக்கத்தை நீங்கள் வெளிப்படையாக காண்பித்தல் கூடாது . எந்த ஒரு முடிவுக்கும் அவரது ஆலோசனையை வேண்டி, அவரது முடிவின்படிதான் நீங்கள் செயல்படுவதைப் போலக் காட்டிக்கொள்ள வேண்டும். இதனால், தான்தான் குடும்பத்தலைவன் என்ற சந்தோஷம் அவருக்கு ஏற்படும் .அப்போதுதான், அவரும் எந்த ஒரு செயலுக்கும் உங்கள் ஆலோசனையைக் கேட்டே முடிவெடுப்பார் .

31. அடுத்தது மிக முக்கிய விஷயம் . உங்கள் தாம்பத்திய உறவில், உங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின், அல்லது அவரது அணுகுமுறை உங்களுக்குத் திருப்தி அளிக்காவிடில், தயவுசெய்து அவரை அதற்காக கிண்டல் செய்யாதீர்கள்; அல்லது எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையில் பேசிவிடாதீர்கள் . இதைவிட, ‘இப்படியிருந்தால் நன்றாக இருக்குமோ , இப்படி முயற்சித்து பாருங்களேன்’ என்றவகையில் மென்மையாகக் கூறினால், அவருக்கும் உங்களைத் திருப்தி படுத்துவதே குறிக்கோளாக வேறு முறையை கையாளுவார். அதையே நீங்கள் குறையாகவோ, கேலியாகவோ , தடாலென்றோ கூறினால், அவர் மனமொடிந்து போய் விடுவார் . வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேச வேண்டியது மிக முக்கியம் .இல்லாவிடில், தன்னால் தன் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை என்ற எண்ணம் வேரோடிப்போய், இது அவரது வாழ்வையே கேள்விக்குறியாக ஆக்கிவிடவும் கூடும் .

32. இப்போது, இருவரும் மனம்விட்டுப் பேசும் தருணத்தை மிக எளிதான முறையில் செயல்படுதுவதைப் பற்றிப் பார்ப்போம் . இதை ஒரு எழுதாத சட்டமாகவே இருவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் . காலையும் மாலையும் (முடிந்தால்) இருவரும் ஒன்றாக காபி/டீ அருந்த வேண்டும் . அப்போது அவரை டிவி பார்க்கவோ, பேப்பர் படிக்கவோ வேண்டாம் என்பதை அவரிடம் நீங்கள் தன்மையாக எடுத்துக் கூறிவிடவும் . இந்த சமயத்தில், உங்கள் குடும்பத்தில், அலுவலகத்தில், குழந்தைகள் பற்றின விஷயங்கள் அனைத்தையும் மனம்விட்டுப் பேசிவிடவும். இதற்கான நேரம் 10 நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை செல்லலாம் . இதனால், பொதுவாக பெண்களுக்கு அவர்கள் கணவரிடம் இருக்கும் குறையான, “நான் பேசுவதை அவர் காது கொடுத்து கேட்பதேயில்லை” என்ற குற்றச்சாட்டும் களையப்பட்டுவிடும். எல்லா பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வும் கிடைத்துவிடும் .

தினமும் காலையில் உங்களில் யாரவது ஒருவர் மற்றவரை எழுப்புவதை வழக்கமாக கொள்ளலாம் . இதனால மணவாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக செல்லும் .

கேட்கக் கூடாதவர் பேச்சுக்களைக் கேட்டு , தீர விசாரிக்காமல் (கண்ணால் காண்பதும், பொய் காதால் கேட்பதும் பொய் ) அனாவசியமாக உங்கள் கணவர் மீது எந்த ஒரு விஷயத்துக்கும் சந்தேகம் கொள்ளவே வேண்டாம் .

மேலும் ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள் . எப்போதுமே உங்களுக்கு விருப்பமானவற்றை நிறைவேற்றிக் கொள்ள , கணவரிடம் , அழுதோ அல்லது மிரட்டியோ காரியத்தை சாதித்துக்கொள்ள நினைக்க வேண்டாம் . அதே போல உங்கள் இருவரின் நெருக்கமான சமயங்களையும் இதற்கு பயன்படுத்த வேண்டாம் .

முதலில் சில நாட்கள் உங்கள் அழுகையைக் கண்டு அவர் மனமிரங்கலாம். போகப்போக வெறுப்பு மட்டுமே மிஞ்சும் . ஆதலால் , அன்பாகப் பேசி மட்டுமே புரிய வைத்து காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
முடிவல்ல ஆரம்பமாக, அட்ஜஸ்ட்மென்ட் அதாவது விட்டுக்கொடுத்து வாழ்வதே, ஒரு சிறந்த மணவாழ்க்கைக்கான மந்திரச்சாவி என்பதை நினைவில் கொண்டு, அதை சிறந்த முறையில் செயல்படுத்தக் கூடியவள் மனைவி ஒருவளே என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் . ஒரு மனைவியால்/பெண்ணால் ஒரு குடும்பத்தை சிறந்த முறையில் பரிமளிக்க வைக்கவும் முடியும். அதே சமயத்தில் அதல பாதாளத்தில் தள்ளவும் முடியும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

மொத்தத்தில்,
நிஜவாழ்வில் உள்ள பெரும்பாலான கணவர்கள், நாம் கதைகளிலோ அல்லது திரைப்படங்களிலோ படிக்கும்/காணும் கணவர்களைப் போல இருக்கவே மாட்டார்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் .


மேற்கூறிய இந்த ஆலோசனைகளை கடைபிடித்து, நீங்கள் உங்கள் கணவருக்கான சிறந்த மனைவியாகப் திகழப் போகிறீர்கள் என்பதும், நல்ல ஒரு புரிதலுடன் கூடிய சிறந்த ஒரு மணவாழ்க்கையை வாழப் போகிறீர்கள் என்பதும் திண்ணம் .
 
Last edited:

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#8
கணவனை வெங்காயம் அரிவது போல் அரிந்து கண்ணீர் சிந்த வச்சு,
தானும் சிந்தாமல், நன்கு அறிந்துகொள்ள அணுகுமுறைகள் தந்தது நன்று.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#10
Nice info friend.

:thumbsup​
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.