கணிதத்தில் முன்னேற பல்லாங்குழி... கவனத்த&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கணிதத்தில் முன்னேற பல்லாங்குழி... கவனத்தை நிலைப்படுத்த நூற்றாங்கல்!

விளையாட்டை சிகிச்சையாக்கும் ப்ரீத்த நிலா...

பாரம்பர்யம்
செவித்திறன் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஒபிஸிட்டி, சோர்வு என்று இப்படி ஏதாவது ஒரு பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஆயுர்வேத மருத்துவர் மற்றும் மனநல ஆலோசகரான ப்ரீத்த நிலா பரிந்துரைக்கும் சிகிச்சை... பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கல், நூற்றாங்கல், கிட்டி என்று நம் பாரம்பர்ய விளை யாட்டுக்கள். இதற்காகவே, ‘கற்றல் இனிது’என்ற அமைப்பை, தேனியில் சில மாதங்களுக்கு முன் நிறுவியவருக்கு வரவேற்பு அதிகமாக, உற்சாகத்தில் இருக்கும் ப்ரீத்த நிலா வுடன் பேசினோம்...

‘‘அம்மா, நான், என் கணவர் அனைவரும் மருத்துவர்கள். எப்போதும் பரபரப்பாக இருக்கும் பணிச்சூழலால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை முழு நேரமும் கவனிக்க முடியாமல்போக, அவர்கள் வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் என்று டெக் உலகில் மூழ்கினார்கள். இதனால் கண் பிரச்னை, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் குணம் உட்பட பல பிரச்னைகளுக்கு ஆளானார்கள்.

குழந்தைகளை டெக்னா லஜியிடம் இருந்து மீட்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, அதைவிட சுவாரஸ்யமான ஒன்றை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று புரிந்தது. அதற்காக நான் தேர்ந்தெடுத்தது, நம் பழந்தமிழர் விளையாட் டுகள். அதைப் பற்றித் தேடித் தேடிப் படித்து அறிந்துகொண்டேன். அப்போதுதான், மூளை, மனம், உடல் என்று மூன்றின் ஆரோக்கியத் தையும் வளப்படுத்தவல்ல அந்த விளையாட்டுகள், வழக்கிழந்து போன துயரம் என்னை பாதித்தது.

குடும்பத்துக்காக சம்பாதித்தது போதும் என்று முடிவெடுத்து, கிராமம் கிராமமாக ஏறி இறங்கி எல்லா விளையாட்டுகள் பற்றியும் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு என ஆரம்பித்த இந்தத் தேடல், நம் தலைமுறை குழந்தைகள் அனைவருக்கும் அதைக்கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மேன்மையுற்றது. ‘கற்றல் இனிது’ என்ற அமைப்பை தேனி, வீரபாண்டியில் ஆரம்பித்தேன். எங்கள் அமைப்பை ஆறு, மலை அமைந்த ரம்மியமான இடத்தில் ஆரம்பித்து, குழந்தைகளுக்கு இலவசமாக நம் பாரம்பர்ய விளையாட்டுக்களைக் கற்றுக்கொடுக்கிறேன்’’ என்று சொல்லும் ப்ரீத்த நிலா,

‘‘கணிதத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட் டுகள், ஹைப்பர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தைகளுக்கு கவனத்தை ஒருநிலைப் படுத்த நூற்றாங்கல் விளையாட்டு, கை நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தட்டாங்கல் விளையாட்டு, எப்போதும் சோர்வாக இருக்கும் குழந்தைகளுக்கு ஏழுகல் விளையாட்டு, செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு மல்லிகைப்பூ விளையாட்டு, ஒபிசிட்டி உள்ள குழந்தைகளுக்கு நொண்டி, கிட்டி, உடல் திறனுக்கு ஊதுமுத்து, ஐந்து பந்து, கால் குறைபாட்டினை சரிசெய்ய கோழிக்கால் விளையாட்டு என 60 விளையாட்டுகளை அதற் குரிய பயன்களோடு சொல்லிக்கொடுக்கிறேன்.

இதன் இன்னொரு முக்கிய பலன்... தொழில் நுட்ப அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டு... ஓடியாடி விளையாடுகிறார்கள். மேலும், செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் எல்லாம், பொதுவாக மற்றவர்களை கீழே தள்ளிவிட்டு முன்னுக்கு வருவது போன்றுதான் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் நிஜத்திலும் குழந்தைகளுக்கு அந்த குணம் வந்துவிடுகிறது. ஆனால், நம் பாரம்பர்ய விளையாட்டுகள் கூடி விளையாடக் கற்றுத்தருபவை. இதனால் குழந்தைகள் ஆளுமைத்திறன், தலைமைப் பண்பு, விட்டுக்கொடுத்தல் என குணத்தில் மெருகேறுகிறார்கள்’’ என்று சொல்கிறார்.
‘‘வீர விளையாட்டான சிலம்பம் உள்ளிட்ட சில கலைகளையும் அதற்குரிய ஆசான்களைக் கொண்டு கற்பிக்கிறேன், நானும் கற்றுக் கொள்கிறேன். மருத்துவர்கள், ஐ.டி ஊழியர்கள் உட்பட இன்று எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எங்களிடம் அனுப்பி வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இயற்கை விவசாயத்தை வளர்க்கும் விதமாக குழந்தை களுக்கு அதற்கும் பயிற்சி அளிக்கிறோம். விருப்பமுள்ள பெற்றோர்கள், நேரில்தான் வரவேண்டும் என்பதில்லை, தொலைபேசி வாயிலாகக்கூட விளையாட்டுக்கள் பற்றிக் கேட்டறிந்துகொள்ளலாம்.
இப்போது இந்த `கற்றல் இனிது’ அமைப் பானது விடுமுறை நாட்களில் மட்டும் நடைபெறுகிறது. எதிர்காலத்தில் இதனை முழுநேரப்பள்ளியாக மாற்றவும் திட்டம் உள்ளது. குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடி மகிழ வேண்டும்; பழந்தமிழர் விளையாட்டுகள் தழைத்தோங்க வேண்டும்... அதுவே எங்கள் விருப்பம்!’’

- அக்கறையும், அதற்கான முயற்சியும் என ஆச்சர்யப்பட வைக்கிறார், ப்ரீத்த நிலா.
 

rni123

Friends's of Penmai
Joined
Oct 24, 2014
Messages
371
Likes
322
Location
ME
#2
Re: கணிதத்தில் முன்னேற பல்லாங்குழி... கவனத்த&a

:thumbsup:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.