கணையம் என்பது என்ன?-Pancreas

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
1கணையம் என்பது என்ன?
உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீர் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும், நாளமில்லா சுரப்பியாக செயல்படும், ஒரே உறுப்பு கணையம். இதற்கு இரட்டை சுரப்பி என, மற்றொரு பெயரும் உண்டு.

2 கணையம் பாதிக்கப்படுவது எதனால்?
'காக்காக்ஸி' எனும் ஒரு வகை வைரஸ், மஞ்சள் காமாலை, அம்மை வைரஸ், 'ருபல்லா' வைரஸ் முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று, கணையத்தை நேரடியாக தாக்கும்போது, 'நீட்டா செல்கள்' முழுவதுமாக அழிந்து, கணையம் பாதிக்கப்படுகிறது.

3 கணையம் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருமா?
பொதுவாக, நாம் உணவு சாப்பிடும் போதெல்லாம், உடலுக்கு தேவையான, இன்சுலினை, கணையம் சுரந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிது கூட சுரக்கா விட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, அல்லது சுரந்த இன்சுலின், சரியாக வேலை செய்யாவிட்டாலோ, நீரிழிவு நோய் வரும்.

4 கணைய அழற்சி எதனால் வருகிறது?
கணையத்தில் சுரக்கும், செரிமான நீர் கடுமையானது. இயல்பை மீறி, அது கணையத்தில் தேங்குமானால் கணையத்தையே அழித்துவிடும். அந்த செரிமான நீர், உடனுக்குடன், முன் சிறுகுடலுக்கு சென்றுவிட வேண்டும். இல்லையெனில், கணைய அழற்சி ஏற்பட்டு, கணையம் பாதிக்கப்படும்.

5 மது அருந்துவோருக்கு, கணையம் பாதிக்கப்படும் என்பது உண்மையா?
அளவுக்கு அதிகமாக, மது அருந்துவோருக்கு கணைய குழாயில், ஒருவகை புரதப்பொருள் படிந்து, நாளடைவில் அந்த குழாயை அடைத்துவிடும். அப்போது, கணையத்தில் சுரக்கும், செரிமான நீர், கணையத்தில் தேங்கி கணையத்தில் உள்ள செல்களை அழித்து, கணையத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும்.

6 கணையம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள்?
கடுமையான வயிற்றுவலி துவங்கும். இந்த வலி, மேல்வயிற்றில் துவங்கி, முதுகுக்கு பரவும். சிலருக்கு தொப்புளை சுற்றி வலி இருக்கலாம்.

7 கணையம் பாதிப்பிற்கு சிகிச்சை முறைகள் உள்ளனவா?
பாதிப்பிற்கான மூலகாரணத்தை அறிந்து, சிகிச்சை தரும்போது நோய் குணமாகிவிடும். ஆனால் கணையம் அழுகிவிட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அறுவை சிகிச்சை தேவைப்படும்.

8 கணையத்தில் புற்றுநோய் வருமா?
அதிகப்படியான, மது மற்றும் புகைப்பழக்கத்தால், கணையத்தில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு எதற்கும் கட்டுப்படாது. அதனால் புகைப்பழக்கம், மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

9 உடல் பருமன் கூட கணையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமாமே?
உடல் பருமனாக இருப்போருக்கு, இன்சுலின் தேவை அதிகரிக்கும். கணையம் நிறைய இன்சுலினை சுரந்து, சுரந்து, நாளடைவில் களைத்து விடும். விளைவாக, ஒருகட்டத்தில், கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போய், நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.10 கணையத்தை காப்பது எப்படி?மது அருந்துவதை, தவிர்க்க வேண்டும். பித்தப்பை கற்கள் வராமல் கவனமாக இருக்க வேண்டும். மஞ்சள் காமாலை, அம்மை, 'ருபல்லா' போன்ற நோய்களுக்கு, குழந்தை பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது மட்டுமல்லாமல், வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடங்களாவது, உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

- ச. கணேச மூர்த்தி,
பொது மருத்துவர்.

 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
கணையம்-(Pancreas)
மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாதது.

ஜீரண உறுப்புகளில் கணையம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. கணையம் என்பது கல்லீரல் போல ஒரு சுரப்பி. கணையம் என்ஸைம்களையும் ஹார்மோன்களையும் ஒருங்கே தயாரிக்கக்கூடிய ஒரு சகலகலா வல்ல சுரப்பி.

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்னும் திரவத்தை சுரந்து நம்மைக் காக்கும் ஒரு சுரப்பிதான் (gland) கணையம்.

கணையம் இருக்கும் இடம்

கணையம் வயிற்றுப் பகுதியில் (abdomen) கல்லீரலுக்கு சற்று கீழே, முதுகுப் பக்கத்தோடு ஒட்டியதுபோல் இருக்கிறது. 12-15 செ.மீ. நீளத்துக்குக் குறுக்காக படுக்கைவாட்டில் இருக்கிறது. இதனுடைய சராசரி எடை 85 கிராம்.

கணையத்தில் உள்ள இருவகையான சுரப்பிகள்

1. எக்ஸோக்ரைன் சுரப்பி (நாளச் சுரப்பிகள்)

-இவை என்ஸைம்களை சுரக்கக்கூடியவை

2. எண்டோக்ரைன் சுரப்பி (நாளமில்லா சுப்பிகள்)

- இவை ஹார்மோன்களை சுரக்கக்கூடியவை.

கணையத்தின் செயல்பாடு

கணையத்துக்குள் நிறைய சின்னச்சின்ன பகுதிகள் இருக்கின்றன. அவற்றுக்கு அல்வியோலை (alveoli) என்று பெயர். ஒவ்வொன்றும் நிறைய அணுக்களைக் கொண்டது. இவைகளே பான்கிரியாடிக் அணுக்கள். இவை ஒவ்வொன்றிலிருந்தும் சுரக்கப்படும் திரவம் சிறு குழாய்கள் பலவற்றின் மூலம் பான்கிரியாடிக் நாளத்தை வந்தடைகிறது. இந்த பான்கிரியாடிக் நாளம்தான் சிறுகுடலான டியோடினத்திற்குள் நுழைகிறது. அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்துள்ள பித்த நாளத்துடன் இணைந்து குடல் பகுதியில் அணுக்களில் இருந்து சுரக்கப்படும் திரவத்தை விடுகிறது. இந்த திரவத்திற்கு ‘பான்கிரியாடிக் ஜுஸ்’ என்று பெயர்.

இதில்

மால்டேஸ் (Maltase)

- மாவுச்சத்தை செரிக்கும் என்ஸைம்,

ட்ரிப்ஸின் (Trypsin)

-புரதச்சத்தை செரிக்கும் என்ஸைம்

லைப்பேஸ் (Lipase)

- கொழுப்புச் சத்தை செரிக்கும் என்ஸைம்கள் உள்ளன.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள முக்கியமான பொருட்கள்

புரதம், கொழுப்பு, மாவுப்பொருள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நீர். இவற்றில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், நீர் ஆகியவை நேரடியாக உடலுக்குள் உறிஞ்சப்பட்டு விடும். ஆனால் மற்ற உணவுப் பொருட்கள் வாயினுள் போடப்பட்டு உடனே நன்கு அரைக்கப்பட்டு உணவுக் குழாய் வழியாக இரைப்பை (stomach) மற்றும் சிறுகுடலுக்கு செல்கிறது. வாயிலேயே உமிழ் நீரிலுள்ள என்ஸைம்களால் புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள் சிறிதளவு ஜீரணம் ஆகிறது. பின் இரைப்பையில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மூலம் உணவு கூழ் பக்குவமடைகிறது. பின் பித்த நீரினால் கொழுப்புப் பொருள் பக்குவமடைகிறது. இதன் பிறகும் உணவில் உள்ள பலவித பொருட்கள் ஜீரணிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வு தான் பான்கிரியாடிக் என்ஸைம்களால் நடைபெறுகிறது. பின் இவை சிறுகுடலுக்கு தள்ளப்பட்டு அங்கு அனைத்து என்ஸைம்களும் சேர்ந்து உணவை செரிக்கச் செய்து பின் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. நல்ல ஜீரணத்திற்கு பான்கிரியாடிக் என்ஸைம்கள் மிகவும் தேவைப் படுகின்றன.

கணையத்தின் சிறு பகுதிகள் தான் அல்வியோலை. இவற்றுக்கு நடுவே சின்னச்சின்ன திட்டுகளாக சில அணுக்கள் உள்ளன. அல்வியோலைகளுக்கு நடுவே சிறு சிறு தீவுகளைப் போல இந்த அணுக்கள் காட்சி அளிப்பதால் இதற்கு கணையத் தீவுகள் (pancreatic islets) என்று பெயர். 1869ம் ஆண்டு லாங்கர்ஹான்ஸ் என்பவர் தான் கணையத்தில் உள்ள இந்த தீவு அணுக்களைப் பற்றி விளக்கமளித்தார்.

அதனாலேயே இவைகளை லாங்கர்ஹான்ஸ் தீவுகள் என்று அழைக்கிறோம். இவற்றில் உள்ள அணுக்கள் இரண்டு விதமானவை.

1. ஆல்ஃபா உயிர் அணுக்கள் (alpha cells)

2. பீட்டா உயிர் அணுக்கள் (Beta cells)

ஆல்பா உயிர் அணுக்கள் குளுக்ககான்

(glucagon) என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இது இன்சுலினுக்கு நேர் எதிரான செயல்பாடு கொண்ட ஒரு ஹார்மோன்.

பீட்டா உயிர் அணுக்கள் இன்சுலினைச் சுரக்கின்றன. இன்சுலின் தான் ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி சரியான விகிதத்தில் வைத்திருக்கும். இன்சுலின் குறைந்தால் ரத்த குளுக்கோஸ் அளவு ஏறும். இதைத்தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை வியாதி என்கிறோம்.
இன்சுலின் செயல்பாடு

பீட்டா உயிர் அணுக்களால் சுரக்கப்படும் இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் பயன்படுத்த வைக்கிறது. இந்த உயிர் அணுக்களால் சுரக்கப்படும் இன்சுலின் அளவு குறைவதாலும், அல்லது பான்கிரியாடைட்டிஸ் அதாவது பான்கிரியாட் அழற்சி ஏற்படுவதாலும், அதிக பருமன் உள்ளவர்களுக்கும் மேற்கூறப்பட்ட இன்சுலின் செயல்பாடு சீராக இருக்காது. அதனாலேயே நீரிழிவு நோய் அவர்களை ஆட்கொள்ளும். இது நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

சமச்சீரான உணவுகளை சரியான நேரத்தில் உண்பது, எடை அதிகம் கொண்டவர்கள் எடையைக் குறைப்பது போன்றவைகளை பின்பற்றினால் மட்டுமே நீரிழிவு என்ற நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

கணையம் மிகவும் மிருதுவான ஒரு உறுப்பு. தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு கணையம் பாதிக்கக்கூடும். அக்கியூட் பான்கிரியாடைட்டிஸ் (Acute pancreatitis) என்பது மது அருந்துபவர்களுக்கு வரக்கூடிய நோய். சில சமயங்களில் அழற்சியினாலும் இது வரலாம். ஆனால் இந்த நோயினால் உடனடி மரணம் ஏற்படும் அபாயம் உண்டு. அதனால் உங்கள் கணையத்தைப் பாதுகாக்க மது அருந்துவதைத் தவிருங்கள். மற்ற கண்ட கண்ட எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிடுவதைத் தவிருங்கள்.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.