கணைய அழற்சி(Pancreatitis )

chan

Well-Known Member
#1
கணைய அழற்சி(Pancreatitis )

சீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகளில் கணையமும் ஒன்று. கணையத்தில் சுரக்கும் நீர் தன் நிலை விட்டு வெளியே வந்து கசிந்தால் ஒரு வெடிகுண்டு போல வயிற்றுக்குள்வெடித்துச் சிதறும் அளவு ஆபத்தானது. இதனால் உடனடி மரணம் நிகழவும் வாய்ப்புண்டு.


பித்தப்பை, பித்த நாளங்களில் ஏற்படும் கற்களினாலும், மதுப்பழக்கத்தினாலும் கணையம் வீங்கி விடுகின்றது. அத்தோடு நீர்க்கசிவும் ஏற்படுகிறது. இதனை கணைய அழற்சி என்கிறோம்.


பித்த நீர் செல்லும் பாதையில் கல் அடைத்துக் கொள்ளும்போது, அது கணைய நீர் செல்ல விடாமல் கசிவை ஏற்படுத்தும்.

மேலும் கணையம் வீங்கவும் செய்யும்.ஸ்டிராய்டு போன்ற மருந்துகள், அதிக மருந்து மாத்திரைகளை உட்கொள்வது, சரியாக சமைக்கப்படாத உணவுகளின் மூலம் உடலுக்குள் செல்லும் உருண்டைப் புழு(Round worm ) போன்றவற்றினாலும் கணைய அழற்சி ஏற்படலாம்.

சிகிச்சைக்குத் தரப்படும் மருந்துகளால் ரத்த ஓட்டம் கணையத்திற்கு சரிவர செல்லாத நிலை இருந்தாலும் கணைய அழற்சி உருவாகிறது.


கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு, மூச்சு திணறல் என்று ஒருவித ஆபத்தான நிலையிலேயே இருப்பார்கள். அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


இதேபோல் நாட்பட்ட கணைய அழற்சி தோன்றியவர்கள் வயிற்றில் ஏற்படும் வலி முதுகுப்புறம் வரை பரவி பரவி செல்லும். இவர்களுக்கு இதிலிருந்து மீளு விப்பிள்ஸ் அறுவை சிகிச்சையும், பாங்க்ரியாடிக் ஜுஜூனோஸ்டமி என்ற அறுவை சிகிச்சை மூலம் சிறுகுடலோடு நேரடியாக நாளங்களை இணைத்தும் மற்றும் வலியை மூளைக்கு அறிவிக்கும் நரம்பை வெட்டி விடும் அறுவை சிகிச்சையினாலும் நோயாளியை நீண்டகாலம் வாழ வைக்கலாம்.
 

chan

Well-Known Member
#2
கணைய அழற்சி
அறிகுறிகளை அறிவோம்!
கணையம் என்ற பெயரைக் கேட்டாலே, ''கணையமா... அது எங்கே இருக்கு?'' என்றுதான் யோசிப்போம். செரிமான மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு கணையம். இது பாதிக்கப்பட்ட பின்னரே, பலரும் இதன் அபாயத்தை உணர்கிறோம்.

உணவு செரிமான மண்டலத்தில், இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கும் வால் போன்ற ஓர் உறுப்பு, கணையம். இதில்தான் உணவு செரிமானத்துக்குத் தேவையான என்சைம்கள் இன்சுலின் ஆகியவை சுரக்கின்றன. செரிமானத்தின்போது, கணையத்தில் இருந்து சுரக்கப்படும் என்சைம், கணைய நாளம் வழியாக முன் சிறுகுடலில் போய் கலக்கிறது. இந்த என்சைம் அங்கே செரிவுற்றதாக மாறி உணவுப் பொருள் செரிக்க உதவுகிறது. நோய்த்தொற்று உள்ளிட்ட காரணங்களால் கணையம் வீக்கம் அடைவதையே கணைய அழற்சி என்கிறோம்.

கணைய அழற்சியின்போது, இந்த என்சைம், கணையத்தில் தேங்கி இருக்கும்போது, செரிவுற்றதாக மாறுவதால், கணைய செல்கள் அரிக்கப்படுகின்றன. கணையத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை, உடனடி பாதிப்பு, நீண்ட நாள் பாதிப்பு என்று பிரிக்கலாம். சாதாரண பாதிப்பு என்றால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். மிகமோசமான நிலையில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.

உடனடி பாதிப்புக்கான அறிகுறிகள்

மார்புக்குக் கீழ், வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டு முதுகு வரை பரவுதல்

சாப்பிட்ட பிறகு மேல் வயிற்று வலி அதிகரிப்பு

காய்ச்சல்

குமட்டல், வாந்தி

வயிற்றைத் தொட்டால் கடுமையாக வலிக்கும்

படுத்தால் வயிற்று வலி அதிகரிக்கும். முன்பக்கம் சாய்ந்தால் வலி குறையும்.


அழற்சிக்கான காரணங்கள்

மது, சிகரெட், போதைப் பொருள் உபயோகிப்பது

கிருமித் தொற்று

பித்தப்பை கல்

விபத்தினால் வயிற்றில் காயம் ஏற்படுவது

சில வகை மருந்துகள் தரும் பக்க விளைவு

கணையத்தில் நீர்க்கட்டி

மரபியல்

விஷக் கடி

ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பு

கணையப் புற்றுநோய்அழற்சி தீவிரமடைவதன் அறிகுறிகள்

கடுமையான மேல் வயிற்று வலி

உடல் எடையைக் குறைக்க முயற்சிக் காமலே எடைகுறைதல்

எண்ணெய் பசையுடனும் நாற்றத்துடனும் மலம் வெளியேறுதல்

டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?

மேல் வயிற்றில் வலி வந்தால், உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுங்கள். வலி தீவிரம் ஆகும் வரை காத்திருக்க வேண்டாம்.
 

Important Announcements!