கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ச&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!!கண்கள், தற்போது பலரும் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் உறுப்பு. அதிலும் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் இருப்பதால், பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, வேலைப்பளு அதிகம் இருப்பதால், பலரும் தண்ணீர் சரியாக குடிப்பதில்லை. இதனால் கண்கள் வறட்சியடைந்து, அதன் காரணமாக பல பிரச்சனைகள் கண்களில் ஏற்படுகிறது.

மேலும் ஜங்க் உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகளின் மீது உள்ள மோகத்தால், பலரும் காய்கறிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர். இதனால் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பார்வை கோளாறுகள் ஏற்படுவதோடு, சில நேரங்களில் மாகுலர் திசு செயலிழப்பும் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, ஒருசில காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். சரி, இப்போது கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

கேரட்
அனைவருக்குமே கேரட் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகளில் முதன்மையான ஒன்று என்று தெரியும். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.


ஆகவே இதனை அன்றாடம் பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தாலோ, பார்வை குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ப்ராக்கோலி
காலிஃப்ளவர் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த காய்கறி கண்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும். அதிலும் இதில் வைட்டமின் சி, லூடின் மற்றும் ஜியாந்தின் போன்ற கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனை வாரம் ஒருமுறையாவது வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள்.


சூரியகாந்தி விதைகள்
சாலட் சாப்பிடும் போது, அதில் சிறிது சூரியகாந்தி விதைகளை சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் ஈ, கண்களில் உள்ள செல்களை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.


கேல்
கேல் என்பது ஒரு வகையான கீரை. இந்த கீரையில் லூடின் என்னும் பைட்டோ கெமிக்கல் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஸீக்ஸாக்தைன் மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டு வந்தால், கண்புரை ஏற்படுவதைத் தடுத்து, கண் பார்வையை மேம்படுத்தலாம்.


சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இத்தகைய சத்து நிறைந்த உணவை அதிகம் உட்கொண்டு வந்தால், மாகுலர் திசு செயலிழப்பைத் தடுக்கலாம். மேலும் இது கண்களில் உள்ள செல் மென்சவ்வுகளுடனான கட்டமைப்புகளுக்கு ஆதரவளிக்கும்.


பசலைக் கீரை
பசலைக் கீரையில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்த கீரையை ஒரு வாரத்தில் குறைந்தது 3 முறையாவது உட்கொண்டு வந்தால், கண் பார்வை மட்டுமின்றி, உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


சர்க்கரைவள்ளிக் கிழங்கு
பொதுவாக கிழங்கு வகைகளில் பீட்டா கரோட்டீன் அதிகம் இருக்கும். அதிலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. இந்த பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது அவை வைட்டமின் ஏ-வாக மாறி, விழி வெண்படலத்திற்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.
 
Last edited:

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#2
Re: கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் &#297

Useful lashmi.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.