கண்களின் நிறத்தை வைத்து உங்கள் ஆரோக்கிய&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கண்களின் நிறத்தை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அறிவது எப்படி?
நமது கண்களில் ஏற்படும் நிற மாற்றம் மற்றும் நமது கண்களின் நிறத்தை வைத்தே நமது உடல் உறுப்புகளில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன, அல்லது பின்னாட்களில் நமது உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றெல்லாம் கண்டறிய முடியும். உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!! பொதுவாக நமது கண்கள் வெளிர் நிறம் மற்றும் கருமையான நிறம் என்று வகை பிரிக்கப்படுகின்றன. இவற்றில், பழுப்பு, கருப்பு, நீலம், பச்சை போன்ற நிறத்தில் பொதுவாக நமது கண்களின் நிறங்கள் இருக்கின்றன. இதுப் போக சில சமயம் நோய் பாதிப்புகள் ஏற்படும் போதும் கண்களின் நிறம் மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன..... உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன சொல்கிறது என்று தெரியுமா?

வெளிர் நிறமான கண்கள் வெளிர் நிற கண்கள் உள்ளவர்களுக்கு, மாகுலர் திசு செயலிழப்பு (macular degeneration) எனும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு 60 வயதுக்கு பிறகு கண் பார்வை பறிபோகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பளிச்சென்ற நிறத்தில் கண்கள் அமெரிக்கன் வலி சமூகம் (American Pain Society) நடத்திய ஓர் ஆய்வில், பளிச்சென்ற நிறத்தில் கண்கள் கொண்டுள்ள பெண்கள் அதிகம் வலியை பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்களாக இருக்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற கண்கள் திடீரென உங்கள் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது எனில், கல்லீரல் நோய் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். அல்லது இது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகவும் இருக்கக் கூடும்.

மது சகிப்புத்தன்மை அடர்ந்த / கருமையான நிற கண்கள் கொண்டவர்கள் வெளிர் நிற கண்கள் கொண்டவர்களை விட மதுவின் போதை கிறக்கத்தில் மேலோங்கி காணப்படுகிறார்கள். எனவே, இவர்கள் மதுவை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கருமையான விழிகள் ஓர் ஆய்வில் கருமையான கண் உள்ளவர்களுக்கு தான் வயதாக, வயதாக அதிகம் கண்புரை பாதிப்பு ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

பழுப்பு, பச்சை நிற கண்கள் பச்சை மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர்களுக்கு வெண்குஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுவொரு Autoimmune குறைபாடு ஆகும். இதில், நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே சருமத்திற்கு எதிராக செயல்படும்.

நீல நிற கண்கள் நீல நிற கண்கள் கொண்டவர்களுக்கு புற்றுநோய் கட்டி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அறிவியல் ரீதியாகவே நிரூபணம் செய்துள்ளனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்றுநோய் செல்களுடன் பெரிய தாக்கத்துடன் செயல்படுவது இல்லை.

 
Last edited:

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#3
Re: கண்களின் நிறத்தை வைத்து உங்கள் ஆரோக்கி&#29

Nice info..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.