கண்களுக்கு மேக்கப்!

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
கண்களுக்கு மேக்கப்!

‘கண்ணுக்கு மை அழகு’ என்றது அந்தக் காலம். இன்று கண்ணழகுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் வந்தாச்சு. கண்களுக்கான மேக்கப்பிலும் எக்கச்சக்க புதுமைகள்!
ஐ மேக்கப்பில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்? எந்த சந்தர்ப்பத்துக்கு எப்படி ஐ மேக்கப் செய்ய வேண்டும்? விளக்கமாகப் பேசுகிறார் அழகுக் கலை நிபுணர் ஹசீனா சையத்.

‘‘கண்கள்தான் மனசைப் பிரதிபலிக்கிற கண்ணாடி. நம்ம மனசுக்குள்ள சந்தோஷமோ, சோகமோ எது இருந்தாலும், அது கண்கள்ல தெரியும்.
என்னதான் பிரமாதமா மேக்கப் போட்டாலும், கண்களுக்கு மேக்கப் இல்லைனா, அந்த அழகு கொஞ்சங்கூட எடுபடாது. வெறுமனே மையும், ஐ லைனரும் மட்டுமே கண்களுக்குப் போதும்னு நினைக்கிறதில்லை இன்றைய இளம் பெண்கள். சாதாரண காஜல்ல ஆரம்பிச்சு, மஸ்காரா வரைக்கும் எல்லாத்துலயும் புதுமைகள் வந்தாச்சு...
கண்களுக்கான மேக்கப்னு சொன்னதும், முதல்ல நினைவுக்கு வர்றது மை. கருப்பான விஷயங்களுக்கு மையோட கருமையை உதாரணம் காட்டுவோம். ஆனா, இப்ப சிகப்பு, பச்சை, கிரேனு எல்லா கலர்கள்லயும் கண் மை வருது. அதே மாதிரி பர்ப்பிள், ப்ளூ, கோல்டன், சில்வர் கலர்கள்ல ஐ பென்சில்களும் வருது.
கண் இமைகள் இயற்கையாகவே நீளமா, அடர்த்தியா இருக்கிறவங்களுக்கு மஸ்காரா தேவையில்லை. அடர்த்தி குறைவா இருந்தா, மஸ்காரா தடவி, அதை நீளமா, அடர்த்தியா காட்டலாம். முன்னல்லாம் மஸ்காராவும் கருப்பு கலர்ல மட்டும்தான் வந்திட்டிருந்தது. இப்ப அதுலயும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. முக்கியமா கலர்லெஸ் மஸ்காரா ரொம்பப் பிரபலம். போட்டதே தெரியாது. ஆனா, இமைகள் தனித்தனியா, நீளமா, அடர்த்தியா தெரியும். மஸ்காரா உபயோகப்படுத்த முடியாதவங்க, செயற்கையா கிடைக்கிற கண் இமைகளை வாங்கி ஒட்டிக்கலாம். ஐ மேக்கப்ல ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட் என்ன தெரியுமா? புருவங்களுக்குக் கீழே, டிராகன், சிறுத்தை, மயில், மண்டை ஓடு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கிறதுதான். பார்ட்டிக்கு போற பெண்கள் இதை ரொம்ப விரும்பறாங்க’’ என்கிற ஹசீனா, ஐ மேக்கப் குறித்த சில டிப்ஸ் தருகிறார்.

முகத்துக்கு தினமும் கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்கணும். அதன் பிறகு ஃபவுண்டேஷன் போடணும். கண்களுக்கடியில் கருவளையம் அதிகமிருக்கிறவங்க, கன்சீலர் உபயோகிச்சு அதை மறைக்கலாம். அதுக்கு மேல மேக்கப் போட்டா, கருவளையம் தெரியாது.
வேலைக்குப் போறவங்களும், காலேஜ் பொண்ணுங்களும் நேச்சுரல் ஷேடு ஐ மேக்கப்
சாதனங்களை செலக்ட் பண்ணலாம். லைட் பிரவுன் கலர் லைனரால கண்களோட ஓரங்கள்ல வரைஞ்சுக்கலாம். பிங்க் அல்லது பேபி பிங்க் நிற ஐ ஷேடோ பெஸ்ட். பார்ட்டி போகும் போது கிளிட்டர்னு சொல்ற பளபளக்கிற ஐ ஷேடோ உபயோகிக்கலாம்.
லென்ஸ் உபயோகிக்கிறவங்க, மேக்கப் போடறதுக்கு முன்னாடியே லென்ஸ் போட்டுக்கணும்.

பாதாம் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் தடவினா, கண் இமைகள் அடர்த்தியா வளரும். சுத்தமான பன்னீரை கண்களுக்குள்ள ஒவ்வொரு சொட்டு விட்டா, அழுக்குகள் நீங்கி, கண்கள் சுத்தமாகும்.
எந்தக் காரணம் கொண்டும், கண்கள்ல மேக்கப்போட தூங்கவே கூடாது.

Dinakaran
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#2
மேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்?

மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான், அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயின்ட் அடித்த மாதிரி தெரியும்.

மேக்-அப் போட்டு கொள்வது பெரிய விஷயமில்லை. அது, உங்கள் முகத்தில் உள்ள சின்ன, சின்ன குறைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும். எனவே, முதலில் அதை கற்றுக் கொள்ளுங்கள். விழாக்களுக்கு செல்லும் போது மட்டுமே பிளஷர் உபயோகிக்கவும். மற்றபடி, முக்கிய இடங்களுக்கு செல்லும் போது, அது வேண்டாம். செயற்கை கண் இமைகளை உபயோகிக்க வேண்டாம். மஸ்காரா உபயோகிப்பதை பழக்கிக் கொள்ளுங்கள். அதுவும் நிறைய கோட் தடவினால், செயற்கையாக தெரியும். ஒன்றிரண்டு கோட்டோடு நிறுத்திக் கொள்ளவும். தலையை விரித்தபடி விட்டுக் கொண்டு போகாதீர்கள். சிறிய கூந்தலாக இருந்தாலும், அதை குதிரை வாலாகக் கட்டிக் கொண்டோ, ப்ரென்ச் பின்னல் போட்டுக் கொண்டோ போனால், அழகோ அழகு.

மேக்-அப் போடும் போது, நல்ல இயற்கை வெளிச்சத்தில் போடவும். லைட் வெளிச்சத்தில் உங்கள் மேக்-அப் சரியாக தெரியாமல், வேறு விதமாக காட்டக் கூடும். மேக்-அப் போட்டு முடித்த பிறகு, குளிர்ந்த ஜூஸ் ஏதாவது குடியுங்கள்; அது, உடலை குளிர்ச்சியாக வைக்கும். இன்டர்வியூ போகிற போது, உடைகளுக்கு மேட்ச்சாக ஐஷேடோ மற்றும் மஸ்காரா உபயோகிப்பதை தவிர்க்கவும். அது, உங்களை நவ நாகரிக பெண்ணாக காட்டினாலும், அந்த இடத்திற்கு ஒத்து வராது.

பகல் வேலைகளில் முக்கிய இடங்களுக்குச் செல்லும் போது, அளவுக்கதிகமாக மேக்-அப் வேண்டாம். அதே மாதிரி அனைத்து மேக்-அப் பொருட்களும், சன் ஸ்கிரீன் கலந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது ஐலைனர், மஸ்காரா, லிப்ஸ்டிக் என எல்லாமே, "வாட்டர் புரூப்' ரகத்தில் கிடைக்கின்றன. இவற்றை உபயோகித்தால், வியர்வையோ, தண்ணீரோ பட்டால், மேக்-அப் கலையாமல், அப்படியே இருக்கும். பவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர் போன்றவற்றை, கையில் வைத்திருங்கள். நீங்கள் போன காரியம் தாமதமாகும் என தெரிந்தால், மறுபடி ஒருமுறை டச்-அப் செய்து கொள்ளலாம். வேலை முடிந்து, அங்கிருந்து நேராக ஏதேனும் முக்கிய இடத்திற்கோ, தியேட்டருக்கோ விரைய வேண்டுமா? மேக்-அப் செய்ய நேரமில்லையா? கவலை வேண்டாம். கண்களுக்கு மட்டுமாவது மேக்-அப் போட்டுக் கொள்ளுங்கள்; புத்துணர்வோடு தெரிவீர்கள்.

முகத்துக்கேற்ற மேக்-அப் பற்றி சில குறிப்புகள்:

முக்கோண வடிவம்: முக்கோண வடிவ முக அமைப்புள்ளவர்களுக்கு தாடை சற்று கூராக இருக்கும். இவர்கள் முகத்தின் இரு பக்கமும் காதுகள் மூடும் அளவுக்கு நெற்றியிலும் கொஞ்சம் முடி விழுமாறு ஹேர் ஸ்டைல் செய்யலாம்.

சதுர வடிவம் : இவர்கள் நெற்றியின் முன்பக்கம் முடி அதிக உயரமாகவும், பக்கங்களில் சற்று குறைவாகவும் வைத்து ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும்.

நீண்ட முகம் : நீண்ட முகம் உடையவர்கள் ஹேர் ஸ்டைலை உயர்த்தி செய்யக் கூடாது. பக்கங்களில் அதிக முடி தெரியும்படியும், நெற்றியில் முடி வரும்படியும் ஹேர் ஸ்டைல் செய்யலாம்.

உருண்டை முகம்: பொதுவாக வட்டமுகம் உள்ளவர்களுக்கு எந்த விதமான முன் அலங்காரம் செய்தாலும் சூப்பராக இருக்கும்.

Dinamalar
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#3
வசீகரிக்கும் புருவத்திற்கு...

உடல் அமைப்பில் ஒவ்வொரு பகுதியும் அழகு நிறைந்தது தான். அவற்றை சரியான முறையில் பேணிக் காக்கும் போது, அழகு இன்னும் கூடுதலாகிறது. அவ்வகையில், கண்களின் கவர்ச்சியில் புருவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சிலருக்கு அடர்த்தியான புருவங்களும், சிலருக்கு அடர்த்தி குறைவான புருவங்களும் இருக்கும். அளவுக்கு அதிகமான புருவம் உடையவர்கள் அதை, "திரெட்' செய்து கொள்ள வேண்டும். அடர்த்தி குறைவான புருவம் உடையவர்கள், புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், நாளடைவில் முடி வளரத் தொடங்கி விடும். ஒவ்வொருவரும் புருவ அமைப்பை, அவர்களின் முக அமைப்பிற்கு தகுந்தாற்போல் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். வட்டமான முக அமைப்பை கொண்டவர்கள், புருவத்தின் ஆரம்பத்திலிருந்து நேராக, "திரெட்' செய்து நுனியில் செல்லும் போது, சற்று வளைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களின் வட்டமான முகம், மேலும் வட்டமாக தெரியாமல், வசீகரிக்கும் முகமாக காட்சியளிக்கும். நீளமான வட்ட முகத்தைக் கொண்டவர்கள், புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து, "திரெட்' செய்து கொள்ளலாம். இதனால், அவர்களின் நீளமான முகம் மேலும் நீளமாகத் தெரியாமல், சற்று வட்ட வடிவமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தரும். சதுரமான முக அமைப்பை உடையவர்கள், புருவங்களின் நடுவில் வளைவாக, "திரெட்' செய்து கொண்டால் வட்ட வடிவமான முக அமைப்புடன் வசீகரமாக காட்சியளிக்கலாம்.

Dinamalar
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.