கண்ணே!! முத்தே!!!

Joined
Oct 31, 2013
Messages
25
Likes
78
Location
Dharmapuri
#1
கண்ணே!! முத்தே!!!

குழந்தை வயதிலேயே இன்னமும் நாம் இருந்தால் எவ்வளவு சுகம்

அன்பு மகளே!! நீ எனக்கு குழந்தை.

இப்பொழுது இலையுதிர் காலங்களில் விழுந்த சருகு நீ!

பின்னாளில் வசந்தக் கால தென்றலாய் வருவாய்!!

மலர்ந்த மலராக சுகந்தம் வீசுவாய்!!

இன்னும் சில காலங்களில் நீ புதிய தேவதையாக மிளிர்வாய்!!

ஆரோக்கியம், மனநிம்மதி கிடைக்கப் பெறுவாய்!!

கவிதை வானில் நட்சத்திரம் போல் பிரகாசிப்பாய்!!!

கதை நடையில் வானவில் வண்ணம் பெறுவாய்!!

அன்பு மழையில் உன் கணவனை குளிர்விப்பாய்!!

இன்றைய வாழ்க்கை இன்பமும், துன்பமும் மாறி, மாறி வந்து போகும் சுழற்ச்சி உடையது!!

இதில் நமக்கு கிடைக்கும் நற்தருணங்களை இழக்க நேரிட்டால் வாழ்ந்து என்ன பயன்? யாருக்கு என்ன லாபம்?

திரும்பி பார்க்கும் பொழுது உன் வலியெல்லாம் காலம் மாற்றி இருக்கும் மகளே!!

உனக்கு இனி ஒரு குழந்தை பிறக்குமம்மா!!!

தேவதூதனின் குழந்தையாக கண்ணனே உனக்கு மகனாக பிறப்பான்.

நம்பிக்கை வை!! வாழ்க்கை உன் கையில் மகளே!!!

( இந்த கவிதை என் மகள் குறை பிரசவத்தில் குழந்தையை இழந்த போது, அவளுக்கு ஆறுதல் சொல்ல எழுதியது. குழந்தைக்காக ஏங்கும் தாய்க்கும், குழந்தையை கருவிலே இழந்த அன்னைக்கும், குழந்தையை பெற்ற பின் இழந்த தாய்க்கும் இந்த கவிதையை சமர்பிக்கிறேன்!!! வாய்ப்பிற்க்கு நன்றி!!)
 
Last edited:

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#2
Heart touching word selection....

Hope this is not the correct place to post... If u put it poem segment many people will see this....
 
Joined
Oct 31, 2013
Messages
25
Likes
78
Location
Dharmapuri
#3
Heart touching word selection....

Hope this is not the correct place to post... If u put it poem segment many people will see this....
Thanks Priya.. I changed it now Thanks dear :)
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#4
ரொம்ப நன்றி வேணிம்மா....
உங்களது மகளின் நிலையில் தான் நானும் இருக்கேன்... எனக்கே இதை நீங்க சொன்ன மாதிரி எடுத்துக்குறேன்... தேங்க்ஸ்...
 
salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#5
Venima!
En cousin sister sila years ku munnaadi oru male baby yai pirantha orae naalil izhanthuttaa. Intha varigal padithathum athu ninaivukku vanthathu. Ungal manavaruththamum purigirathu.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
மிகவும் அருமையான கவிதை ......உங்கள் மகளுக்கு அருமையான மருந்தினை , கவிதை மூலம் தந்து உள்ளீர்கள் .......

வேணிக்கா, இந்த கீழ்கண்ட லிங்கில் சென்று , உங்கள் கவிதைகளை (அது எதுவாக இருப்பினும் ), போடவும் .Poems
 
Joined
Oct 31, 2013
Messages
25
Likes
78
Location
Dharmapuri
#8
ரொம்ப நன்றி வேணிம்மா....
உங்களது மகளின் நிலையில் தான் நானும் இருக்கேன்... எனக்கே இதை நீங்க சொன்ன மாதிரி எடுத்துக்குறேன்... தேங்க்ஸ்...
நன்றி கவலைப் படாதே மகளே!!, உன் வாழ்வில் விரைவில் சந்தான பாக்கியம் கிட்டும்.
 
Joined
Oct 31, 2013
Messages
25
Likes
78
Location
Dharmapuri
#9
Venima!
En cousin sister sila years ku munnaadi oru male baby yai pirantha orae naalil izhanthuttaa. Intha varigal padithathum athu ninaivukku vanthathu. Ungal manavaruththamum purigirathu.
ஆம் மகளே, அனைவருக்காகவும் இங்கே சமர்பித்தேன். நன்றி
 
Joined
Oct 31, 2013
Messages
25
Likes
78
Location
Dharmapuri
#10
மிகவும் அருமையான கவிதை ......உங்கள் மகளுக்கு அருமையான மருந்தினை , கவிதை மூலம் தந்து உள்ளீர்கள் .......

வேணிக்கா, இந்த கீழ்கண்ட லிங்கில் சென்று , உங்கள் கவிதைகளை (அது எதுவாக இருப்பினும் ), போடவும் .Poems
நன்றி sakothari. nitchayamaga ange inimel podukiren :)
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.