கன்னி முயற்சி - My First Try... By Accool (Sindhu)

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#1
Hi makale......

unaku inga enna velai nu neenga kekarathu puriyuthu.....

irunthalum enna seiya..... naangalum try pannuvom la nu enter aagiruken......

ennoda first try inga poda poren.......

nalla iruntha inga sollunga...... nalla illaina pm la thitunga..... k deal.......

இதோ இந்தக் கன்னியின் கன்னி முயற்சி .......உங்களின் பார்வைக்கு.......... இன்னும் சில நிமிடங்களில் ......​
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#2
வியக்கிறேனடா

நான் இரத்தசோகை உடையவளாம்
மருத்துவர்கள் சொன்னார்கள்
ஆனால்
உன் ஒரு பார்வையில்
என்னுள் புது இரத்தம்
பாய்ந்தது எப்படியடா..........

வெட்கம்
அது என்ன விலை என்பேன் நான்
ஆனால்
உன் சிறு கண்சிமிட்டலில்
என்னை வெட்கப்பட வைத்தாயேடா............

வாயாடி
என்று பெயர் பெற்றவள் நான்
ஆனால்
உன் இதழோரம் அரும்பிய
குறும்புச் சிரிப்பில்
என்னை வாயடைக்கச் செய்கிறாயேடா.........

என்னுள் நீ நிகழ்த்தும் மாயங்கள் ஏராளம்
அதை நித்தமும் எண்ணி எண்ணி
வியக்கிறேனடா .............
 
Last edited:

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#3
மழை

மழைநீர் தான் சுத்தமான நீராம்
ஆனாலும்
உன்னை சேகரிக்கத் தோன்றவில்லை
உன்னோடு சேர்ந்தாடவே தோன்றுகிறது..........
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#4
மண்

உன்மீது ஆசை
கொள்பவர்கள் மேல்
உனக்கு இத்துனை காதலா...........

உயிராய் இருந்தவர்கள்
உயிரற்று போனாலும்
உன்னோடு அணைத்துக் கொள்கிறாயே..............
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#5
நட்பு

காதல் மட்டுமல்ல நட்பும் கூட
உன்னை உனக்கே புதிதாகக் காட்டும்
உன்னை உணர்ந்த நட்பாக இருந்தால்................
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#6
கோபம்

அன்று
தீயைத் தொட்டபோதிலும்
சுடவில்லையடி.............

இன்று
சூட்டை உணர்கிறேன்
உன் கண்களின் கனலினிலே..............
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#7
அன்புத் தோழி

எங்கிருந்து வந்தாயடி தோழி
எனக்குள் ஒளிந்திருந்ததை ஒளிரவைத்தாயே.........

தனித்திறன் இல்லையென தவித்திருந்தேன்
எனக்கு கவித்திறனை அறிமுகப்படுத்தினாய்.........

என்னை சிந்திக்க வைத்தாய்
கவியுலகில் சஞ்சரிக்கச் செய்தாய்.........

நானே அறியா
என் கவிமுகத்தை
நீ எப்படி அறிந்துகொண்டாய்.........

என் சோர்வுகளை
விரட்டும் வித்தையை
நீ எங்கு கற்றாய்...........

என்னுள் தன்னம்பிக்கை
ஊற்றெடுக்கும் விந்தையை
நீ அறிவாயோ.........

எனக்கே நான் புதிதானேன்
எல்லாம் உன்னால் தோழி..........

என் நெஞ்சத்தில்
நீங்கா இடம் பெற்றாயடி........
உனது தோழமையில்
பெருமிதம் கொண்டேனடி தோழி.........

நன்றி எனும் மூன்றெழுத்து
இதற்கு இணையாகாது
இருப்பினும்
என் நன்றியைப் பெற்றுக்கொள்ளடி
என் அன்புத் தோழி..........It is dedicated to daya(dayamalar) darling..........​
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#9
மனைவியின் ஏக்கம்

என் துணைவா
உடலால் மட்டுமின்றி
மனதாலும் உறவாட விரும்புகின்றேன்.....
கடமையாக அன்றி
காதலாக வாழ விழைகின்றேன்.....
என்றேனும் நீ என் காதலை
உணர்வாயா........


Friends pls drop ur comments in the below link

http://www.penmai.com/forums/poems/45795-my-first-try-comments-25.html
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#10
மின்சாரம்

மின்சாரம் போதவில்லை
என்கிறார்கள்...........

நீ என் கைப்பிடிக்கும்
தருணங்களில்
என்னுள் பாயும் மின்சாரத்தை
நான் என்னவென்று சொல்ல...........Friends pls drop ur comments in the below link

http://www.penmai.com/forums/poems/45795-my-first-try-comments-26.html
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.