கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யர&#300

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,293
Likes
545
Location
chennai
#21
Re: கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யர&

[h=1]`ஸ்டெர்லைட் போராட்டத்தின் மூலம் கமலும் ரஜினியும் விளம்பரம் தேடுகிறார்கள்!’- அமைச்சர் கடம்பூர் ராஜூ[/h]
" ஸ்டெர்லைட் போராட்டத்தை வைத்துக் கொண்டு ரஜினியும், கமலும் போராட்டத்தில் தாங்களும் கலந்து கொள்வதுபோல, ஒரு மாயையை உருவாக்கி அதன் மூலம் விளம்பரம் தேடி வருகிறார்கள்" என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கதிரேசன் கோயில் மலையில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அஅமைச்சர் கடம்பூர் ராஜூ," இந்து சமய அறநிலையத்துறை மூலமாக மலேசியாவில் உள்ள முருகன் போன்று இங்கு 110 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தன்படி,அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகாகும்பாபிஷேக விழாவின் போது, முருகனின் திருவுருவச்சிலை பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்படும்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு முதன்முதலில் அனுமதி அளிக்கப்பட்ட காலத்தில் தி.மு.க.,தான் 25 ஏக்கருக்கும் மேல் இடம் ஒதுக்கீடு அளித்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆலையில் தற்போது விரிவாக்கம் செய்யபடும்போது, மக்களிடம் அச்ச உணர்வு எழுந்துள்ள நிலையில், பொது மக்கள் உணர்வுடன் போராடி வருகின்றனர்.


மாவட்ட நிர்வாகம், உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். அத்துடன், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துறை ரீதியாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி, அந்த அறிக்கையைச் சுற்றுச்சுழல்துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளது. அமைச்சரும் தெளிவான அறிக்கை தந்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அனைத்து துறைகளின் கருத்துக்களை முதல்வர் கேட்டறிந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் விரைவில் முதல்வர் நல்ல முடிவினை அறிவிப்பார்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கமலும், ரஜினியும் கலந்து கொள்வது போன்ற ஒரு மாயை தோற்றுவிக்கின்றனர். இதனை வைத்து விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அரசுதான் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பற்ற முடியும். மக்களின் உணர்வுகளை மதித்து அரசு தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது.


காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சினையில் ஆளும் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தோற்றத்தினை உருவாக்கினார்கள். ஆனால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக தொடர்ந்துள்ளது. வரும் 3-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது, காவிரிமேலாண்மை வாரியத்தினை இந்த அரசு நிச்சயம் பெற்றுத் தரும். அ.தி.மு.க., உண்ணாவிரதம் எனது நாடகம் கிடையாது. தி.மு.க.,ஈழப் பிரச்சினையில் இருந்த உண்ணாவிரதம்தான் நாடகம்" என்றார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#22
தல்வர் கனவில் ரஜினி, அரசுபோல் திட்டங்களை அறிவிக்கும் கமல்- திருநாவுக்கரசர் கிண்டல்

1524819131156.png

வடசென்னை மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அ.தி.மு.க. அரசு எதையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் லஞ்சம் பெறுவதிலும், கமி‌ஷன் பெறுவதிலும் மட்டுமே குறியாக உள்ளனர். ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. உடைந்து பல அணியாக செயல்படுகின்றன. எனவே இப்போது தி.மு.க.வுக்கு அடுத்த படியாக பெரிய கட்சியாக தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளது.

குட்கா விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க் கட்சியினர் ஒன்று திரண்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனையை ஆளுங்கட்சி கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.


நடிகர் ஒருவர் (ரஜினி) கட்சி தொடங்காமல் தான் தான் அடுத்த முதல்வர் என்ற நினைப்பில் செயல்பட்டு வருகிறார். அரசு அறிவிக்கும் திட்டம்போல் ஒரு நடிகர் (கமல்) திட்டங்களை அறிவிக்கிறார். பிரதமர் மோடியை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தியாக இருக்க கூடியவர் ராகுல்காந்தி மட்டுமே

இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் ஜெ.எம்.ஆருண், ரானி, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், சிரஞ்சீவி, ஜான்சிராணி, மாவட்ட தலைவர் சிவராஜசேகர், வீர பாண்டியன், வக்கீல் செல்வம், தாமோதரன், டில்லிபாபு, முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, சொர்ணா சேதுராமன், பெனட் அந்தோனிராஜ், அஸ்லாம் பாட்ஷா, எர்ணஸ்ட் பால், குங்பூ விஜயன், டி.வி.துரைராஜ், சங்கர், குப்புசாமி, சையத், ரவிக்குமார், பீர் முகமது, போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#23
அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல நடிகர், 'அட்வைஸ்'


1527190398381.png

''அரசியல் என்பது, ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல,'' என, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு, பிரபல ஹிந்தி நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருகன் சின்ஹா அறிவுரை வழங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருகன் சின்ஹா, 71; மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். தமிழகத்தில், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து, மும்பையில், நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது: ரஜினி, கமல், இருவரும் என் நண்பர்கள். அவர்கள், தெளிவான திரைக்கதையோடு தான், அரசியல் களத்தில் குதித்திருப்பர் என, நம்புகிறேன். அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன், என்னிடம் அறிவுரை கேட்கவில்லை.

ஒருவேளை கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் என கூறியிருப்பேன். அதில் இருக்கும் கண்ணி வெடிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பேன். ஏனென்றால், அவர்கள் நினைப்பதை போல, அரசியல் என்பது ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல. தமிழகத்தில், ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது; அதை மீறி, இவர்களால் அரசியல் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#24
கமல்ஹாசனும், ரஜினியும் சுயநலவாதிகள்- ஈஸ்வரன்

கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருக்கிறது.

கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது. தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றி விட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.

அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்த விதமான பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?. சுயநலவாதிகள் அல்லவா இவர்கள். இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.