கம்பு கேழ்வரகு தட்டை (எல்லடை)--Ragi kambu Thattai

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#1

தேவையான பொருள்கள்:


கம்பு மாவு - 1 கப்

கேழ்வரகு மாவு - 1 கப்

அரிசி ஆவு - 2 கப்

பூண்டு - 1 முழுதாக (தோல் நீக்கி மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும் )

கடலை பருப்பு - 1 கப் (2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும் )

பெருஞ்சீரகம் (சோம்பு) பொடி - 2 ஸ்பூன்

சாம்பார் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் (உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்து கொள்ளவும் )

மிளகு - 1 ஸ்பூன் (கொஞ்சம் பெரியதாக பொடித்து கொள்ளவும் )

நெய் அல்லது வெண்ணை - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - 3 கை பிடி (தேவைகேற்ப எடுத்து கொள்ளலாம் )
இதை நீங்கள் கைகளால் கில்லி சேர்த்து கொள்ளலாம் .அல்லது மிக்ஸ்யில் இரண்டு முறை ஒட்டி பொடித்து சேர்த்து கொள்ளலாம் .

உப்பு ருசிகேற்ப

எண்ணெய் பொறிக்க தேவையான அளவு .


செய்முறை :

மேலே சொன்ன எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் தேவைகேற்ப தண்ணீர் விட்டு கெட்டியாக தட்டை தட்டும் அளவு பிசைந்து கொள்ளவும் .

கடாயில் எண்ணெய் விட்டு சூடு பண்ணவும்

ஒரு பாலிதீன் பேப்பரில் சிறு தட்டைகள் தட்டி பொரித்து எடுக்கவும் .

தட்டை மிதமான தீயில் பொறிக்க வேண்டும் ..தட்டை தட்டி போட்டதும் அடியில் போகும் ..சிறிது நேர்த்தி மேல வந்து விடும் .bubbles வருவது குறைந்தவுடன் திருப்பி போடவும் ..மறுபடியும் bubbles வருவது நின்றவுடன் எடுத்து விடவும் .

 

Attachments

Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#4
நல்லதொரு ஹெல்தி snack ரெசிபிக்கு நன்றி உமா .
 

Vaishnavi Maran

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2017
Messages
339
Likes
973
Location
BANGALORE
#5
super :) கம்பு ராகியை ஊறவைத்து ஆட்டியும் செய்யலாமா?

 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#6
தேங்க்ஸ் கார்த்திகா ..எங்க வீட்டில் health விஷயத்துல கொஞ்சம் முக்கியம் கொடுப்பாங்க ..நம்ம சாபாட்லேயே healthதியா எப்படி செயலாம் என்று யோசிப்பேன் ..

அப்படி செய்யும் பொது போட்டோ எடுத்து இங்கே ஷேர் பண்றேன் ..


Asathureenga Uma! Healthy Snack.. Kambu la Seirathellam :thumbsup Superb Like..
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#9
நன்றி வைஷ்ணவி ..

கண்டிப்பா செயல்லாம் பா ..நான் சொன்ன மாவு அளவுலயே கம்பு , கேழ்வரகு , இட்லி அரிசி ஊற வைத்து கிரைண்டர்ல அரைத்து செய்யலாம் .

அப்போ மாவு கொஞ்சம் தண்ணியாக வாய்ப்பு அதிகம் ..முடிந்த அளவு கெட்டியா அரைங்க ..கொஞ்சம் தண்ணியா போச்சுனா தேவைக்கு பொட்டுகடலை மாவு சேர்த்துக்கோங்க ..கெட்டியாகிடும் ..அப்புறம் தட்டி செய்ங்க ..

மாவு வைத்து செய்றதை விட இது ரொம்ப நல்ல முறை .ஆனா வேலை அதிகம் ..நம்ம வசதி படி செய்யலாம் ..super :) கம்பு ராகியை ஊறவைத்து ஆட்டியும் செய்யலாமா?

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.