கருக்கலைப்பு அபாயம்... - Dangers of Abortion

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,084
Likes
20,708
Location
Germany
#1
கருக்கலைப்பு அபாயம்...

மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் தாங்களாகவே கருக்கலைப்புக்கான மாத்திரைகளைக் கடைகளில் வாங்கி உட்கொள்ளுவது மிகவும் ஆபத்தானது.

அரைகுறையாகக் கரு கலைவதற்கும் அதன் காரணமாகப் பிறகு மிக அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவது போன்ற பல பிரச்னைகளுக்கும் இது வழிவகுக்கும்.

தவிர, கருப்பையே பாதிப்புக்கு உள்ளாகும் அபாயமும் இருக்கிறது. சில நேரங்களில் மாத்திரைகளால் கருவைக் கலைக்க முடியாது - 'டி அண்ட் சி’ என்று சொல்லப்படும் கருப்பையை சுத்தம் செய்யும் முறை மூலமாகத்தான் கலைக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது உரிய மருத்துவரிடம் அதை முறையாக செய்துகொள்ள வேண்டும்.

'டி அண்ட் சி’ செய்யும்போது கருவின் சொச்சங்கள் கருப்பைக்குள்ளேயே தங்கிவிட்டால், அதுவும் அதிகமான ரத்தப்போக்குக்குக் காரணமாகிவிடும்.

அதோடு கருப்பையில் நோய்த் தொற்றும் ஏற்படக்கூடும். மேலும், கருக்குழாய் (ஃபெலோபியன் டியூப்) அடைப்பும் நிகழ வாய்ப்பு இருக்கிறது.

இவை எல்லாம் அடுத்த கர்ப்பத்தைப் பாதிக்கும். அடிக்கடி 'டி அண்ட் சி’ செய்துகொள்வது நல்லது அல்ல. அப்படிச் செய்யும்போது கருப்பையின் வாய் பாதிப்புக்கு உள்ளாகி, அதன் இயல்பு நிலையில் இருந்து விரியும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால், விரும்பி ஏற்றுக்கொள்ளும் கர்ப்பம்கூட சில சமயம் இரண்டு அல்லது மூன்றாவது மாதங்களில் கலைய நேரிடும்''.
 
Joined
Sep 2, 2012
Messages
4
Likes
5
Location
kodaikanal
#2
எனக்கு பயமாக உள்ளது..என் தோழியின் நிகழ்ச்சி..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.