கருணைக் கிழங்கு

sweetlalitha

Friends's of Penmai
Joined
Mar 7, 2010
Messages
426
Likes
478
Location
villupuram
#1
கிழங்கு வகைகள்

கருணைக் கிழங்கு

இந்தக் கிழங்கை அடிக்கடிச் சாப்பிடுவதன் மூலம் சிலவகை நோய்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம்.

கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை.
(1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும்.
காரும் கருணையைப் பிடிகருணை என்றும்,

காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.

முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது.

சிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.

காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்லுவார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது.

இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.

இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.
 
Last edited:

sweetlalitha

Friends's of Penmai
Joined
Mar 7, 2010
Messages
426
Likes
478
Location
villupuram
#2
உருளைக் கிழங்கு

மக்கள் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக் கிழங்கு.
இதில் புரதம், இரும்புச் சத்து மற்றும் சிறிதளவு வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள்ஏற்படும் என்பார்கள். இது உண்மை தான்.

எனவே உருளைக் கிழங்கின் மேல் தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

உருளைக் கிழங்கில் அரிசியில் இருப்பது போன்றே மாவுப் பொருள் இருப்பதால், எஸ்கிமோ என்ற இன மக்கள் முழு உணவாகவே சாப்பிடுகின்றனர்.

இது உடலுக்கு வலிமை தருகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்து உருளைக் கிழங்கைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் சக்தி உடையது. ஆனால் தோலை நீக்காமல் உருளைக் கிழங்கைப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்குச் சில நேரங்களில் தாய்ப்பால் சுரப்பது குறையும். அப்போது உருளைக் கிழங்கைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

தோலை நீக்கி விட்டுக் கிழங்கைச் சமைப்பதாக இருந்தால், அதனுடன் பூண்டு, இஞ்சி போன்ற பொருள்களைச் சேர்த்துக் கொண்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

இருந்தாலும் வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிடவே கூடாது.வயதானவர்கள் அடிக்கடியும், அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.

இக்கிழங்கைத் தண்ணீர் விட்டு அலம்பி இடித்து, அரைத்துக் கட்டிகளின் மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் கட்டி பழுத்து உடையும்.கண்களின் கீழ் கருவளையம் இருந்தால், உருளைக்கிழங்கைச் சாறு எடுத்துத் தடவலாம்.

மேல் தோலைச் சீவி விட்டு, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து ஆறாத புண்கள் மீதும், படை, சொறிகளின் மீதும் பற்றாகப் போட்டால், புண் ஆறி விடும்.

சேப்பங்கிழங்கு

இது செடியினத்தைச் சேர்ந்தது. இது வழவழப்பாக இருக்கும். இதில் நான்கு வகைகள் இருந்தாலும் கிழங்கின் நிறத்திலோ, ருசியிலோ, குணத்திலோ வேறுபாடு இருப்பதில்லை.

இதில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ, பி ஆகிய உயிர்ச்சத்து சிறிதளவும் இருக்கின்றன.

இருந்தாலும் இக்கிழங்கு கோழையை அதிகரிக்க வல்லது. இதை அதிகமாகவோ, அடிக்கடியோ சாப்பிடுபவர்களுக்குத் தொண்டையில் கோழை கட்டும்; இருமல் வரும்.

ஆகவே இக்கிழங்குடன் புளி சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், இஞ்சி, வெள்ளைப் பூண்டைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், கெடுதல்கள் குறையும்.மலச்சிக்கலை நீக்க வல்லது.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது. சில ஆண்டுகளுக்கு பலவீனம் காரணமாகவோ, வயோதிகத்தினாலோ ஆண் தன்மைக் குறைவு ஏற்படும். அத்தகையவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிட்டு வந்தால் ஆண் தன்மைக் குறைவைப் போக்குவதோடு, இந்திரியத்தையும் கெட்டிப்படுத்தும்.
இதை அப்படியே அரைத்து, கட்டிகளுக்கும், புண்களின் மேலும் பற்றாகப் போட்டால் குணமாகும்.

இது வாதத் தன்மையை அதிகரிக்கவல்லது. எனவே வாத தேகம் உள்ளவர்கள் அல்லது வாத நோயால் அவதிப்படுபவர்கள் இக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.
அத்துடன், இந்தக் கிழங்கு மருந்துகளின் வீரியத்தை மட்டுப்படுத்தும் தன்மை உடையது. அதனால் நோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர்களும் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

எப்போதாவது ருசிக்காகக் கொஞ்சம் சாப்பிடலாம்.
 

sweetlalitha

Friends's of Penmai
Joined
Mar 7, 2010
Messages
426
Likes
478
Location
villupuram
#3
Re: கிழங்கு வகைகள்

முள்ளங்கி

இது குத்துச் செடி இனத்தைச் சேர்ந்தது. இதில் 3 வகைகள் உள்ளன. அவை
1. வெள்ளை முள்ளங்கி
2. சிவப்பு முள்ளங்கி
3. மஞ்சள் முள்ளங்கி
ஆகியவைகள் ஆகும்.
முள்ளங்கியில் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் சத்தும் உள்ளன.
இது வயிற்றில் ஏற்படும் பல தொல்லைகளைக் குணப்படுத்துகிறது.

இது பசியை அதிகமாக்கச் செய்வதோடு, சாப்பிடுவதில் விருப்பையும் உண்டாக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.

வெள்ளை முள்ளங்கி குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. அதனால் உஷ்ண தேகம் உள்ளவர்களும், மூல நோய்க்காரர்களும் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

தலைவலி, வயிற்றுவலி, வயிற்றில் எரிச்சல், சுவாசக் கஷ்டம் போன்ற தொல்லை நீங்கும். பற்கள் உறுதிப்படும் பற்கள் சம்பந்தமான நோய்கைளயும் குணப்படுத்த வல்லது. சிறுநீரக உறுப்புகளுக்கு வலுவைத் தரும். சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

வெள்ளை முள்ளங்கியைப் போலச் சிவப்பு முள்ளங்கியும் மருத்துவக் குணம் உள்ளது. இது நரம்புத் தளர்ச்சியைப் போக்க வல்லது. குடலுக்கு வலிமை தருகிறது. உடலுக்கும் உறுதியை அளிக்க வல்லது.

வெள்ளை முள்ளங்கியில் உள்ளது போன்ற காரத் தன்மை இதில் இருக்காது.

மஞ்சள் முள்ளங்கியைக் கேரட் என்று சொல்லுவார்கள். இதைப் பச்சையாக அப்படியே சாப்பிட்டால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும். இதைப் பற்களால் கடித்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதால் பற்களில் ஏற்படும் எல்லா விதத் தொல்லைகளையும் நீக்க வல்லது.

சீரண சக்தியை அதிகமாக்கும். கருவுள்ள தாய்மார்கள் அடிக்கடிச் சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் எலும்புகள் வலிமை பெரும்.
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#4
கருணை, உருளை மற்றும் முள்ளங்கி பற்றிய பதிவுகள் நன்று.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.