கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டா&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

திருமணமான தம்பதியர் அனைவரும் குழந்தையை விரும்புவர். இல்லறத்தின் காதல் சின்னமாய் திகழ்பவர்கள் குழந்தைகள். தம்பதியர்கள் பலர் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும், கருத்தரிக்க வேண்டும் என ஆசைப் படுகின்றனரே தவிர அதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது இல்லை.

திருமணமான ஆன புதிதில் இன்பம் அனுபவிப்பதற்காக சில வழிமுறைகளை கையாள தெரிந்தவர்கள். அதன் பின் கருத்தரிக்க விரும்பும் போது என்ன வழிமுறைகளை கையாள வேண்டும், நினைவில் கொள்ள வேண்டும் என தெரிந்துக்கொள்வது இல்லை.

சுகமாய் குழந்தை பிறக்கணுமா? இதப்படிங்க!

கருத்தரிக்கவில்லை, குழந்தை பாக்கியம் வேண்டும் என கோவில், குளம் ஏறி, இறங்குவதை தவிர்த்து, நீங்கள் என்ன செய்தால் எளிதாக கருத்தரிக்க முடியும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரியுமா, நீங்கள் திருமணமான புதிதில் கருத்தரிக்காது இருக்க எடுத்துக் கொள்ளும் கருத்தடை மருந்துகள் கூட உங்களது குழந்தை பாக்கியத்தை தள்ளி வைக்கும்.

உடலுறவு கொள்ளுதல் மட்டுமே உங்களுக்கு கருத்தரிக்க உதவாது, அதற்கேற்ப உடல்நிலையும், மனநிலையும் இருவருக்கும் சரியான நிலையில் இருந்தாலே கருத்தரிக்க முடியும். எனவே, கருத்தரிக்க விரும்பும் தம்பதியர்கள் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும், முக்கியமாக இனிவரும் 1௦ விஷயங்கள்...

மருத்துவப் பரிசோதனை
கருத்தரிக்க விரும்பும் தம்பதியினர், குழந்தைப் பேறு பெற விரும்பும் முன்னர் தகுந்த மருத்துவரை அணுகி உடல்திறன் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நமது தற்போதைய உணவுப்பழக்கம் பலவன கருத்தரிக்க தடையாய் இருக்கிறது.

எனவே, தயக்கம் இன்றி மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை ஏதாவது பிரச்சனையாக இருந்தாலும் கூட, இன்றைய உயர்த்தர மருத்துவ முறையை கொண்டு தீர்வுக் கண்டுவிடலாம்.

கருத்தடை மாத்திரைகளை நிறுத்துங்கள்
நீங்கள் கருத்தரிக்க விரும்பும் ஒருசில மாதங்களுக்கு முன்பே கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்திவிடுங்கள். இதன் ஆற்றல் ஒரு சில வாரங்களுக்கு கூட தொடரலாம் என மருத்துவர்கள் சொல்கின்றனர். கருத்தடை மாத்திரைகள் உங்களது மாதவிடாய் சுழற்சியில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுத்தலாம்.

எனவே, நீங்கள் கருத்தரிக்க விரும்புவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னரே இந்த மாத்திரைகளை நிறுத்துவதன் மூலம், உங்களது மாதவிடாய் சுழற்சி சரியான நிலையடையும். இதனால், நீங்கள் சரியான நாளினை கண்டறிந்து உடலறுவு கொள்ளும் போது, எளிதாக கருத்தரிக்க வாய்ப்புகள் உள்ளது.

வைட்டமின் மாத்திரைகள்
ஒருசில மாதங்களில் கருத்தரிக்க விரும்பும் தம்பதியர்கள் முக்கியமாக பின்பற்ற வேண்டிய விஷயம் இது. கருத்தரிக்க விரும்பும் பெண்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்தே வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது நன்மை விளைவிக்கும். இது உங்களது உடல்திறனை அதிகரிக்க உதவும். எனவே, எளிதில் நீங்கள் கருத்தரிக்க இயலும்.

பைக் பயணம் தவிர்த்திடுங்கள்
கருத்தரிக்க விரும்பும் பெண்கள் பைக்கில் பயணம் செய்வதை முழுமையாக தவிர்த்துடுங்கள். பைக்கில் செல்லும் போது ஏற்படும் ஜெர்க்குகளால் கருவிற்கு அபாயம் ஏற்படலாம்.

ஆரோக்கியமான உணவு
கண்டிப்பாக ஆரோக்கிய உணவுகளை மட்டுமே உட்கொள்வது அவசியம். ஒருநாள் கூட தப்பித் தவறியும் துரித உணவுகளையோ, தேவையற்ற தின்பண்டங்களையோ எடுத்துக் கொள்ளதீர்கள். இது உங்களது உடல்நலத்தை பாதிக்கும்.

மது, புகை
கருத்தரிக்க விரும்பும் தம்பதியர், மது மற்றும் புகையை விட்டு விலகி இருப்பது நல்லது. இதுதான் பெரும்பாலான வகைகளில் கருத்தருப்பை தள்ளி வைக்கிறது. அதுமட்டுமல்லாது, ஆண்களுக்கு ஆண்மை குறைவையும் ஏற்படுத்துகிறது.

உடல் எடை
கருத்தரிக்க விரும்பும் பெண்கள் தங்களது உடல் எடையை சரியான அளவில் வைத்துருப்பது அவசியம். கருவில் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, குழந்தையை தாங்குவதற்கான உடல் எடை பெண்களுக்கு இருக்க வேண்டும்.

காபியை குறைத்துக்கொள்ளுங்கள்
காபியில் இருக்கும் காப்ஃபைன் என்னும் மூலப்பொருள் அதிகப்படியாக உடலில் கலந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, கருத்தரிக்க விரும்பும் பெண்கள் காபியை குறைத்துக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சி
கருத்தரிக்க விரும்பும் பெண்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது. உங்களது உடல்திறன் குழந்தைப் பேறு அடைய மிகவும் அவசியாமான ஒன்று. எனவே, தவறாது சரியான உடற்பயிற்சிகளை பின் தொடருங்கள். இல்லையேல் பிரசவ காலத்தில் கடுமையான வலிகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.

பொருளாதாரம்

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர்கள் உடல்திறனுக்கு அடுத்து மிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது, பொருளாதாரம். இப்போது இருந்தே நீங்கள் பணம் சேர்த்து வைப்பது பிரசவ காலத்திலும், குழந்தையின் வளர்ச்சியின் போதும் உங்களுக்கு உதவியாக இரும்கும்.

 

Attachments

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#2
Re: கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்ட&#300

hi chan sis thank u for sharing useful info kandippa ithai try panren sis
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.