கருவறையில் குழந்தையின் பயணம் - ஓர் பார்வ&#3016

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
கருவறையில் குழந்தையின் பயணம் - ஓர் பார்வை!

உலகிலேயே தாய்-குழந்தை உறவு தான் மிகவும் புனிதமானது. இது யாராலும் உடைக்க முடியாத பிணைப்புக்களைக் கொண்டது. 9 மாதம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை உலகைப் பார்க்கும் போது, தன் தாயின் அரவணைப்பை தான் எப்போதும் எதிர்பார்க்கும். தாயின் கைப்பட்டாலே அக்குழந்தை சொல்லாமலேயே உணர்ந்து கொள்ளும்.நீங்கள் புதிதாக திருமணமானவர்களாக இருந்து கருத்தரித்திருந்தால், வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள விரும்புவீர்கள்
:)

கர்ப்பமான முதல் 4 வாரத்தில் கருத்தரித்திருப்பது நன்கு தெரியும். இந்த மாதத்தில் கருமுட்டையானது இரண்டு செல்களாக இருக்கும்.

இரண்டாவது மாதத்தில் தான் அறிகுறிகள் தெரியும். அதுவும் இக்காலத்தில் மிகுந்த சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, காலைச் சோர்வு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள். இரண்டாவது மாதத்தில் குழந்தையின் இதயம் துடிக்க ஆரம்பிக்கும் மற்றும் மூளை உருவாக ஆரம்பமாகும்.

மூன்றாவது மாதத்தில் கருமுட்டை உருபெற்ற கருவாக மாறும். காலைச் சோர்வு குறையும். இக்காலத்தில் உருப்பெற்ற கருவின் அளவு ப்ளம்ஸ் பழ அளவில் இருக்கும்.

இரண்டாவது மூன்று மாத காலம் ஆரம்பமாகிறது. இக்காலத்தில் குழந்தையின் எலும்புகள் கடினமாகியிருக்கும். இதனால் ஸ்கேன் மூலம் குழந்தையின் அசைவைக் காணலாம். இந்த மாதத்தில் குழந்தை 5 இன்ச் நீளம் மற்றும் 5 அவுன்ஸ் எடையுடன் இருக்கும்.

இந்த மாதத்தில் குழந்தையின் அசைவை உணரக்கூடும். குழந்தைக்கு பேசுவது கேட்க ஆரம்பிக்கும். ஐந்தாவது மாதத்தில் முதுகு வலி, செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், தலைவலி, நீர்கோர்வை, தலைச்சுற்றல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கக்கூடும்.

கர்ப்ப காலத்தின் பாதியை கடந்துவிட்டீர்கள். இந்த மாதத்தின் இறுதியில் குழந்தை முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும்.

கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் குழந்தை உதைக்க ஆரம்பிக்கும். குழந்தையின் மூளை செயல்பட ஆரம்பித்து, நாம் குழந்தையிடம் பேசினால் அதற்கு குழந்தை தன் அசைவின் மூலம் பதில் அளிக்க ஆரம்பிக்கும். இந்த மாதத்தில் குழந்தை 13 இன்ச் நீளத்தில் இருக்கும்.

எட்டாவது மாதத்தில் குழந்தை முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் மற்றும் குழந்தையின் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்த மாதத்தில் குழந்தையின் நுரையீரல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்கும்.

ஒன்பதாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு அதிகமாக உதைக்கும், அடிவயிற்றில் அழுத்தம் ஏற்படும் மற்றும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.