கருவறையில் வற்றாத நீர் ஊற்று!

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
IMG_20171124_175834.jpg
IMG_20171124_175817.jpg

லிங்கத்திலிருந்து எப்போதும் நீர் ஊறிக் கொண்டேயிருக்கும் அதிசய கோவில்!!

  நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். அந்த வகையில் ஒரு திருத்தலத்தில் சுயம்பு லிங்கம் உள்ள கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள அதிசயத்தை பற்றி பார்ப்போம்....!


இந்த கோவில் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம் திரியம்பகத்தில் உள்ளது. இத்தலம் இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று ஆகும்.


திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. அந்த சுயம்பு லிங்கத்தில் இருந்து நீர் எப்போதும் ஊறிக் கொண்டேயிருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

இத்தலம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ள ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரம்மகிரியில் இருந்துதான் கோதாவரி நதி உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ள கோவிலாகும். அம்மலையில் கௌதமர் வாழ்ந்த குகையும், அவரால் உண்டாக்கப்பட்ட புனித தீர்த்தமும் உள்ளன. கௌதமர் வழிபட்ட 1008 லிங்கங்களும் அக்குகையில் இருக்கின்றன.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.