கர்ப்பகால கட்டுகதைகளும் உண்மைகளும்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கர்ப்பகால கட்டுகதைகளும் உண்மைகளும்..!!!கர்ப்பக்காலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பிரசவம் காலம் என்பது ஒரு பெண்ணுக்கு இருப்பது போன்று மற்றொரு பெண்ணுக்கு இருக்காது. வித்தியாசமான பலவித கூறுகள் பெண்களுக்கு பிரசவ காலத்தில் நடப்பதுண்டு. ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பிரசவ காலத்தில் பலவித கட்டுக்கதைகளை நமக்கு பலர் பலவிதத்தில் சொல்வார்கள். அதில் வயிற்றை வைத்து குழந்தை ஆணா பெண்ணா என்று கூறுவது, விமானத்தில் செல்ல கூடாது என்பது, ஆவி குளியல் கூடவே கூடாது என்றெல்லாம் கூறுவர். அதில் எது உண்மை எது பொய் என்ற சந்தேகம்
அனைவருக்கும் உண்டு. அதைப் பற்றி இங்கு தீர்த்து கொள்வோமா…

#‎கட்டுக்கதை‬: கர்ப்பிணியின் வயிற்றின் வடிவம். வயிறு பெரியதாக இருந்தால் பெண் என்றும், சிறியதாக இருந்தால் ஆண் என்றும் கூறுவர்.

உண்மை: இந்த ஊகத்தை பற்றி அறிவியல் அடிப்படையில் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்ணின் தசை அளவு, அமைப்பு, கரு நிலை, தோரணை மற்றும் வயிற்றின் அடிப்படை அளவு இதை பொறுத்தே இந்த வடிவம் வருமே தவிர, குழந்தையைப் பொறுத்து இல்லை என்று கூறுகின்றனர்.

#கட்டுக்கதை: உப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பையன் என்றும், இனிப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பெண் குழந்தையை குறிக்கின்றது என்பது.

உண்மை: ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், பசியையும், ருசியையும் வைத்து குழந்தையின் பாலியலை தீர்மானிக்க முடியாது என்று சொல்கிறது.

#கட்டுக்கதை: கர்ப்பிணியின் தொப்பை மீது ஒரு மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி, அது ஆடும் திசையை வைத்து குழந்தையின் பாலியலை கணிப்பது. அது ஒரு வட்டத்தில் நகருமெனில் பையன் என்றும், முன்னும் பின்னுமாக நகருமெனில் பெண் என்றும் கூறுவர்.

உண்மை: இது உண்மை இல்லை என்றாலும், விளையாட்டாக இதை செய்யலாம்.

#கட்டுக்கதை:கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் அவதியால் பாதிக்கப்படுகின்றீர் என்றால் குழந்தைக்கு அதிக முடி என்று அர்த்தம். நெஞ்செரிச்சல் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் உங்கள் குழந்தையின் முடியை வைத்து இது வருவது இல்லை.

உண்மை: நெஞ்செரிச்சலால் மிகவும் கஷ்டப்பட்டும் கூட, பெண்கள் வழுக்கை குழந்தைகளை பெற்றனர்.

#கட்டுக்கதை: உங்கள் அம்மாவிற்கு எளிதாக கர்ப்பம் மற்றும் பிரசவம் நடந்தது என்றால், உங்களுக்கும் அதுபோல் நடக்கும்.

உண்மை: உங்கள் பிரசவத்திற்கும், கர்ப்பத்திற்கும் உங்கள் பரம்பரை அம்சத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நீங்கள் உண்ணும் உணவும், உங்கள் வாழ்க்கை முறையுமே காரணம்.

#கட்டுக்கதை: மல்லாந்து படுப்பதால் உங்கள் குழந்தைக்கு பாதிப்பு என்பது என்று சொல்வது.
உண்மை: இந்த நிலையில் தூங்குவது உங்கள் குழந்தையை பாதிக்காது என்பதால் ஒரு நிலையில் படுக்கலாம். அதிலும் இடது புறம் படுத்தால் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் சீராக இருப்பதாக அறியப்படுகின்றது. ஆகையால் இடதுபுறம் படுப்பது நல்லது.

#கட்டுக்கதை: உடலுறவு குழந்தையை பாதிக்கும் என்று கூறுவதுண்டு.

உண்மை: அடிவயிற்றை சுற்றி பனிக்குடப்பையின் தோல் ஏழு அடுக்குகள் கொண்டது. அவை உங்கள் குழந்தையை பாதுகாப்பதற்காக உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இவை ஒருவித சளி போன்ற படிமத்தை உற்பத்தி செய்து, கருப்பையினை கிருமிகள் தாக்காமல் சுத்தமும் செய்கின்றன. ஆகவே உங்கள் மருத்துவர் கூறினால் மட்டுமே பாலியல் தொடர்பை தவிர்க்கவும், இல்லையென்றால் தேவையில்லை.

#கட்டுக்கதை: முதல் குழந்தை எப்போதும் தாமதமாகவே வரும்.

உண்மை: 60 சதவீத பிரசவம் கணிக்கப்பட்ட தேதிக்கு பின் வரும், ஐந்து சதவீதம் கணிக்கப்பட்ட நாளில் வரும், முப்பத்தி ஐந்து கணிக்கப்பட்ட நாளுக்கு முன்பேயே வரும். எனவே குழந்தையின் பிரசவ நேரத்தை, உங்கள் மாதவிடாய் சுழற்சியே திட்டமிடுகிறது. அது குறைவாக இருந்தால், சீக்கிரம் பிரசவம் வரும், அது நீட்டிப்பாய் இருந்தால், பிரசவம் தாமதமாக இருக்கும். சரியாக 28 நாட்கள் இருப்பின் குறித்த நேரத்தில் நடைபெறும்.

#கட்டுக்கதை: முதல் அல்லது கடைசி மூன்று மாதங்களில் விமானத்தில் பயணிக்க முடியாது.

உண்மை: மீண்டும் தவறு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விமானத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் சில விமான நிறுவனங்கள், உங்களது இறுதி மூன்று மாதங்களில் விமானத்தில் அனுமதிக்கமாட்டேன் என்று கூறுவர். ஏனெனில் விமானத்திலேயே உங்களுக்கு பிரசவம் ஏற்படும் என்பதால் மட்டுமே.

#கட்டுக்கதை: கர்ப்பமாக இருக்கும் போது, சூடான குளியல் எடுத்து கொள்ளக்கூடாது.

உண்மை: இது உண்மை தான். பிரசவ காலத்தில் நீராவிக்குளியல், சுடுநீர் தொட்டி குளியல் போன்ற குளியல்களை கூடாது. மேலும் கர்ப்பக்காலத்தில் 102 டிகிரிக்கு மேல் உங்களின் உடலின் வெப்பநிலை இருக்கக்கூடாது.

 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Ivalo kattukathai irukka nalla vellai naa Bangalore la irunthathala onnum theriyala pola ooru pakkam vanthu iruntha avalo thaan :bigsmile:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.