கர்ப்பக் காலத்தில் உணவு விஷயத்தில் கூடு&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கர்ப்பக் காலத்தில் உணவு விஷயத்தில் கூடுதல் அக்கறை


பெண்கள் சரிவிகித உணவை சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், கர்ப்பக் காலத்தில் அப்படிப் பொறுப்பில்லாமல் இருக்க முடியாது. வீட்டில் சும்மா இருக்கும்போது ஒரு படம் வரைகிறீர்கள் அல்லது கை வேலை ஏதோ செய்கிறீர்கள். அது நீங்கள் எதிர்பார்த்ததைவிட அற்புதமாக அமைந்து விடுகிறது. எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

யோசித்துப் பாருங்கள் எத்தனை ஆனந்தமாக இருக்கும். ஒரு சாதாரண விஷயமே பிரமாதமாய் அமையும் போது இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது என்றால் நீங்கள் உருவாக்கும் உயிர் (குழந்தை) அழகாக, ஆரோக்கியமாக இருந்தால் எத்தனை ஆனந்தம். கர்ப்பக் காலத்தில் உணவு விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டால் இந்தச் சந்தோஷம் உங்களுக்கு சுலபமாக வாய்க்கும்.

சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 2,100 கலோரி உணவு தேவை. கர்ப்பக் காலத்தில் கூடுதலாக 300 கலோரி தினமும் அவசியம். இந்தக் கூடுதல் கலோரிக்கு வழக்கமாகச் சாப்பிடும் உணவோடு இரண்டு டம்ளர் பால் அல்லது ஒரு கிண்ணம் சூப் சாப்பிட்டால் போதும். அதற்காக அதிக கலோரி வேண்டுமே என்று சத்து இல்லாத ஆனால், அதிகக் கலோரி உள்ள கேக் போன்ற அயிட்டங்களைச் சாப்பிடக் கூடாது.இதுதவிர உங்கள் தினப்படி உணவில் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நான்கு அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

அவை காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால் பொருட்கள், குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர், பெரும்பாலான பெண்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும். அப்புறம், மாம்பழம் சாப்பிட்டால் குழந்தைக்கு ஆகாது என்று சளிக்கும் பழத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரே நேரத்தில் சாப்பிடாமல் சாப்பாட்டிற்கு இடையில் ஆறேழு முறை காய்கறி, பழங்களைத் தனியாகச் சாப்பிடுங்கள்.

பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்து வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, இவற்றில் உள்ள வைட்டமின் சி. குழந்தையின் ஈறுகள், திசுக்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கும் காயங்கள் விரைவில் ஆறுவதற்கும் உதவுகிறது.

எதில் உள்ளது இரும்புச் சத்து?

மாத்திரை, மருந்துகளில் உள்ளதைவிட, காய்கறி, பழங்களில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. பாதாம் கொட்டை, காய வைத்த இலந்தை பழம், பேரீச்சை பழம், மற்றும் அவரை, பசலைக் கீரை போன்ற கீரை வகைகள், பச்சைக் காய்கறிகளில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது.

சிக்கன் உட்பட, சிலவகை அசைவ உணவுகளிலும் இந்த சத்து கிடைக்கும். இரும்புச் சத்துக்கும் நினைவாற்றலுக்கும் நேரடி தொடர்பு இல்லை. இரும்புச் சத்து குறைந்தால், உடலில் உள்ள ஒட்டுமொத்த இயக்கம் பாதிக்கப்படுகிறது, பலவீனம் ஏற்படுகிறது, அதனால், நினைவாற்றல் குறைகிறது.

எவ்வளவு வேண்டும் இரும்புச் சத்து?

ரத்தப் பரிசோதனை எடுத்தால் ஒருவருக்கே இரும்புச் சத்து எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். ஆண்களுக்கு 13 கிராம்,, பெண்களுக்கு 12 கிராம் அளவுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து இருக்க வேண்டும்.

அப்போதுதான், மூளைக்கு செல்லும் ரத்தத்தில் ஆக்சிஜன் சீராக செல்லும். இது குறைவாக இருந்தால் தான், இரும்புச் சத்து குறைவாக உள்ளது என்று பொருள். அப்போது இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடலாம். மற்றபடி, போதிய அளவில் உடலில் இரும்புச் சத்து இருக்கும்போது, மாத்திரை சாப்பிட்டால் பலன் தராது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.